கேள்விகளும் பதில்களும் #4 Jeffersonville, Indiana, USA 64-0830E 1... சகோதரர்களே, நான்... இன்னும் நான் பதில் கூறாத சில கேள்விகள் உண்டென்று எண்ணுகிறேன்; என்னால் இதற்க்கு மேல். தொடர்ந்து செல்ல முடியவில்லை. என்னே, தரிசனங்கள் என்னை அதிகமாக பாதித்துள்ளன. பாருங்கள்? இன்று பிற்பகல் பல தரிசனங்கள், சுமார் பதினைந்து அல்லது இருபது தரிசனங்கள் உண்டாயின, அது என்னை சுக்குநூறாக கிழித்து விடுகிறது. இங்கு கொஞ்சமும் அங்கு கொஞ்சமுமாக நான் கண்டு, நான் வெளியே வந்தேன். நான், “சகோ. நெவில், உங்களால் முடியுமானால், தொடர்ந்து ஆராதனை நடத்துங்கள், நான் மெல்ல நழுவி வீடு செல்ல எண்ணுகிறேன். நான் கீழே விழுந்து விடுவேன் போல் உள்ளது. என் இருதயம் பயங்கரமாக துடிக்கிறது. என்னால் நிற்கவும் கூட முடியவில்லை” என்றேன்.. அதற்கு அவர், “சகோ. பிரான்ஹாமே, நீர் கேள்வி களுக்கு பதில் கூறி முடித்து விடுவீரா என்று ஜனங்கள் என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்” என்றார். என் கடமையின் பாதையிலிருந்து விலகியோட நான் ஒருக்காலும் விரும்புவதில்லை. நான் சகோ. நெவிலைப் பாராட்டுகிறேன். சில நிமிடங்களுக்கு என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். எனக்குத் தெரியும், இன்னும் சில ... பில்லி வந்தான், நான் அவனிடம் “நீ எல்லா கேள்விகளையும் கொண்டு வந்து விட்டாயா?”, என்று கேட்டேன். 2அவன், “அப்பா, பதில் கூறப்படாத கேள்விகள் இன்னும் இருபது அல்லது அதற்கும் சற்று அதிகமாக உள்ளன” என்றான். எனவே என்னால்... இன்று முப்பது சொச்சம் பேர் பேட்டிக்கு வந்திருந்தனர், அவர்களில் இருபத்தைந்து பேர்களின் விவகாரத்தில் எனக்கு தரிசனங்கள் உண்டாயின; எனவே என் நிலை என்னவென்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். நான் மிகவும் களைப்பாயிருக்கிறேன், என் சிந்தை களைப்படைந்துள்ளது. ஆயினும் நாம் ஜெபித்து, கேள்விகளை நாம் எங்கு விட்டோமோ அங்கிருந்து தொடங்குவோம். இவைகளுக்கு பதில் கூறாமல் நான் அரிசோனாவுக்குத் திரும்பிச் சென்றால், இவைகள் என் மனதில் இருந்து கொண்டு என்னை ஓயாமல் தொல்லைப்படுத்திக் கொண்டேயிருக்கும். கர்த்தருக்கு சித்தமானால், நான் விரைவில் திரும்ப வந்து. என்றாகிலும் ஒரு நாள் விவாகமும் விவாகரத்தும் என்னும் பொருள் எப்படி சரியானது என்பதைக் குறித்து பேசுவேன். நாம் ஜெபிப்போம். 3அன்புள்ள தேவனே, என் இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர், என் உணர்ச்சியை நீர் அறிந்திருக்கிறீர்; என்னைக் குறித்து எல்லாவற்றையுமே நீர் அறிந்திருக்கிறீர். தேவனே, நான் ஜெபிக்கிறேன்; அநேகர். கர்த்தாவே, அவர்களுக்கு நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டேன்; அவர்கள் அதிகம் பேர் இருந்தனர். ஆனால் இன்று வந்திருந்தவர்களில் ஒருவராவது உதவி பெறாமல் திரும்பிப் போகவில்லை என்பதை நான் அறிந்தவனாய் உமக்கு மிகுந்த நன்றி செலுத்துகிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் சந்தோஷமாயும் திருப்தி அடைந்தவர்களாயும் வெளியே சென்றனர் என்று நான் விசுவாசிக்கிறேன். என்னால் பதில் கூற இயலாதவைகளுக்கு, நீர் தரிசனங்களில் இறங்கி வந்து அவர்களுடைய வாழ்க்கையில் நடந்தவைகளை வெளிப்படுத்தி (அவர்களில் அநேகர் இங்கு உட்கார்ந்து கொண்டு நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இது உண்மையென்று அவர்கள் அறி வார்கள்) இவை நடப்பதற்கு தங்கள் வாழ்க்கையில் காரணமாயிருந் தவைகளை அவர்களுக்கு வெளிப்படுத்திக் கொடுத்தீர். கர்த்தாவே, அவர்களுக்குத் தெரியும். உமது உதவியில்லாமல் இவைகளை நான் வேறெந்த வழியிலும் அறிந்திருக்க இயலாது. பரலோகப் பிதாவே, நான் ஜெபிக்கிறேன், நான் களைப்புற்றிருந்த போதிலும், உமது ஊழியக்காரனாயிருப்பதற்கு மகிழ்ச்சி கொள்கிறேன். பேட்டி காண முடியாமல் விடப் பட்டவர்களை நீர் ஆசீர்வதிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன், அநேகர் பேட்டிக்கு வர வேண்டுமென்று விரும்பினர். தேவனே, அவர்களின் தேவைகள் கவனித்துக் கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன். உம்முடைய மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே, அவர்களுடைய தேவைகளை அவர்களுக்குத் தருவாராக. அன்புள்ள தேவனே, இந்த கேள்விகளுக்கு பதில் கூறி முடிக்க, என்னால் முடிந்த வரையில் அவைகளுக்கு பதில் கூற, எனக்கு உதவி செய்வீராக. அப்பொழுது உம்முடைய ஜனங்கள் தங்கள் கேள்விகளுக்கு விடைகளைப் பெற்றிருப்பார்கள். அவர்களுடைய கேள்விகளை எழுதித்தரும்படி அவர்களிடம் கூறினேன், அவர்கள் எழுதிக்கொடுத்தனர். இந்த கேள்விகளுக்கு பதில் கூறுவதற்கு நான் கடமைப்பட்டிருப்பதாக உணருகிறேன். எனவே உமக்கும் உமது ஜனங்களுக்கும் என் கடமையை நிறைவேற்றத்தக்கதாக எனக்கு பெலனை அளிக்குமாறு ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். ஆமென். 4இப்பொழுது, இன்று காலையில் நாம் விட்டதிலிருந்து தொடங்குவோம். இவைகளில் சிலவற்றை என்னால் படிக்க இயலாது. ஏனெனில் என் தொண்டை சிறிது கரகரப்பாயுள்ளது, நான் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறேன். எத்தனை பேர் இன்று பகுத்தறிதலில் பங்கு கொண்டு, தேவன் உங்களுக்கு செய்ததை பாராட்டுகிறீர்கள்? பாருங்கள்? இவ்விதமான ஊழியம், எல்லாவற்றிலும் மிகச்சிறந்தது. நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் காரியங்களும், உங்கள் வாழ்க்கையில் மறைந்து கிடந்தவைகளும் வெளிப்படுத்தப்பட்டு உங்களிடம் கூறப்படுகிறது. ஞாபகம் கொள்ளுங்கள், இவைகளில் பல காரியங்கள். இப்பொழுது, தர்மசங்கடமான காரியங்கள் வெளியே கொணரப்பட்டு கூறப்பட்டன என்பதை உங்களில் அநேகர் அறிந் திருக்கிறீர்கள். ஆனால் எனக்கும் தேவனுக்கும் தவிர வேறு யாருக்கும். இது தெரியாது. உங்களிடம் கூறப்பட்டது உங்களுக்கும் தேவனுக்குமிடையே மட்டும் இருக்க வேண்டும்; அதை தனியே விட்டு விடுங்கள். மற்றும்... உங்களுக்கு உதவி செய்வதற்கென கர்த்தர் காரியங்களை வெளிப்படுத்தினாரென்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? அவ்விதம் அறிந்திருக்கிறவர்கள் கைகளை உயர்த்துங்கள். பாருங்கள்? அந்த ஜனங்கள் யாரென்றும், அவர்களைக் குறித்து ஒன்றுமே அறிந்திராமலும், அவர் தான் அதைச் செய்தார். 5இப்பொழுது, நாம் வேகமாக கேள்விகளுக்குச் சென்று, நம்மால் முடியுமா என்று பார்ப்போம். இங்கு வேறொன்றும் கூட உள்ளது. அது “நம்பர் மூன்று' என்று எழுதப்பட்டுள்ளது. அது ஒரு கடிதம் என்று நினைக்கிறேன்; அது சரி, அது ஒரு கடிதம் மட்டுமே. நான் வருந்துகிறேன். கடிதங்கள் கிடைத்தால் இவைகளை நாம் இங்கு வைத்து விடுவோம். நான் நினைக்கிறேன். ஆம், ஐயா, இதுவும் ஒரு கடிதம். அதில் ”கேள்வி“ என்று எழுதப்பட்டுள்ளது, ஆனால் அது ஒரு கடிதம் என்று நினைக்கிறேன், கடிதத்தில் ஒரு கேள்வி. இல்லை, இது கடிதம் அல்ல, ஒரு சொப்பனத்தைக் குறித்த கேள்வி. சரி, நான் சொப்பனத்தை வாசித்து விட்டு, கர்த்தர் எனக்கு அதன் அர்த்தத்தை அளிக்கிறாரா என்று பார்த்து, அதை உமக்குத் தெரியப் படுத்துகிறேன். உங்கள் முகவரியை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அது இருக்கிறதா என்று பார்ப்போம்; இல்லையென்றால், இந்த சொப்பனத்தை எழுதி கேள்வி கேட்டவர் தமது முகவரியை தெரியப்படுத்த வேண்டும். இல்லை, இதில் முகவரி இல்லை. இந்த கடிதத்தை எழுதினவர் (இது எனக்கு எழுதப் பட்டுள்ளது), உங்கள் முகவரியை பில்லியிடம் கொடுக்கவும், நான் அரிசோனாவுக்கு சாலையின் வழியாய் சென்று கொண்டிருக்கையில், நான் வனாந்தரத்துக்குச் சென்று ஜெபிக்கிறேன். அவர் எனக்கு சொப்பனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்துவாரானால், அதை எந்த முகவரிக்கு எழுதி தெரியப்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருப்பேன் (பாருங்கள்? முகவரி இல்லாமல் போனால், இதன் அர்த்தத்தை), அவர் அதை வெளிப்படுத்தி தருவாரானால். அவர் தராமல் போனால், நான் ஒன்றையும் கூற மாட்டேன், ஏனெனில் அது ஒன்று மட்டுமே என்னால் செய்ய முடியும்; அப்பொழுது அது சரியென்று நான் அறிந்திருப்பேன். இப்பொழுது. 6மணவாட்டி, அதாவது இந்த செய்தியை விசுவா சிப்பவர்கள், முடிவில் மேற்கில் சென்று அங்கு ஒன்று கூட வேண்டுமா? 7மேலும் (ஒரு நிமிடம், இது... ஒரு வினாடி. ஓ! இல்லை, அதுவல்ல. அது... நான் நினைத்தேன். அது வெளிப்படுத்தல் அதிகாரம், அது “சங்கை காப்ஸ்” என்பது போல் காணப்பட்டது, அதைக் குறித்து எனக்கு சிறிது குழப்பம் ஏற்பட்டது. அது... நீங்கள் காண்பீர்களானால், அது அப்படித்தான் காணப்படுகிறது. பாருங்கள்? அது “சங்கை காப்ஸ்” அதன் பிறகு தொடர்ந்து... இல்லை, அது சரி). வெளிப்படுத்தல் 12ம் அதிகாரம் மண வாட்டியைக் குறிக்கிறதா? இல்லை! “மணவாட்டி முடிவில் மேற்கில் செல்வாளா?” எனக்குத் தெரிந்த வரையில் இல்லை; மணவாட்டி உலகின் எல்லா பாகங்களிலும் இருக்கிறாள். இதை புரிந்து கொண்ட ஒவ்வொருவரும் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). நீங்கள் எங்கிருந்த போதிலும், எங்கு மரித்த போதிலும், அது என்னவாயிருப்பினும், நீங்கள் கிறிஸ்துவுக்குள் மரித்தால், தேவன் உங்களை அவருடன் கூட கொண்டு வருவார். நீங்கள் சுட்டெரிக்கப்பட்டாலும், மிருகங்களால் புசிக்கப்பட்டாலும், அழிக்கப்பட்டாலும், அது எப்படியிருந்தாலும், கிறிஸ்து வரும்போது தேவன் உங்களை அவருடன் கூட கொண்டு வருவார் நீங்கள் மேற்கிலோ அல்லது வேறெங்கோ கூட வேண்டிய அவசியமில்லை கர்த்தர் உங்களை எங்கு நடத்துகிறாரோ... 8இருப்பினும், நீங்கள் மேற்கில் செல்ல வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றினால், நான் செல்வதற்கு முன்பு இதை தெளிவாக்க விரும்புகிறேன். இப்பொழுது... (அவர்கள் இந்த செய்தியை ஒலிநாடாவில் பதிவு செய்கின்றனரா? செய்கின்றனரா சரி), நீங்கள் எங்கு செல்ல வேண்டுமென்று நான் உங்களிடம் கூற வேண்டியதில்லை. நீங்கள் மேற்கில் செல்ல வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றினால், மேற்கில் வாருங்கள். நீங்கள் கிழக்கில், வடக்கில், மேற்கில், தெற்கில் செல்ல விரும்பினால் கர்த்தர் உங்களை எங்கு நடத்துகிறாரோ, அங்கு செல்லுங்கள். இதை புரிந்து கொண்ட ஒவ்வொருவரும் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). 9எங்கு போகக் கூடாது என்று நான் யாரிடமும் கூற முனைவதில்லை. நான் தற்காலிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அரிசோனாவிலுள்ள டூசானுக்கு நீங்கள் வர விரும்பினால்... இன்று காலையில் உங்களிடம் நான் கூறினது போல, எனக்கு போவதற்கு வீடு இல்லாமல், வீட்டிற்கு செல்ல வேண்டுமெனும் எண்ணம் என்னில் உள்ளது. வீடு என்று அழைக்க எனக்கு ஓரிடம் இருக்குமானால் நலமாயிருக்கும்... இன்றிரவு, ஓரிடத்துக்கு நான் பதினாயிரம் டாலர்கள் கொடுத்து, “இதை என் வீடு என்று அழைக்க விரும்புகிறேன்” என்று கூற முடிந்தால், நான் தாராளமாக அதை கொடுத்து விடுவேன். எனக்கு போக்கிடமில்லை. சகோ. ஃபரீமான், என்னை நீர் சிறு வயது முதற்கொண்டு அறிந்திருக்கிறீர் என்று நினைக்கிறேன்; நான் சுற்றித் திரிகின்றவன். நீங்கள் சுற்றித்திரிகின்றவர்களாக இருக்க வேண்டாம்: நீங்கள் ஆவல் கொள்ளும் ஏதாவதொரு இடத்தை கண்டு பிடித்து அங்கு தங்கியிருங்கள்; கர்த்தராகிய இயேசுவுக்காக காத்திருங்கள். ஆனால், இப்பொழுது நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மேற்கிலுள்ள அரிசோனாவிலுள்ள டூசானுக்கு நீங்கள் வர விரும்பினால், நீங்கள் வரவேற்கப்படுகின்றீர்கள்; உங்களை அங்கு கொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும். நீங்கள் என் சகோதரனும் சகோதரியுமாய் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உதவி செய்ய நான் உலகில் எதையும் செய்வேன். அங்கு வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் என்னாலான அனைத்தையும் செய்து உங்களை வரவேற்று.' எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் உங்களுக்குக் காண்பித்து, உங்களை' சுற்றிலும் கொண்டு சென்று, என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருக்கிறேன், நீங்கள் எப்பொழுதும் வரவேற்கப்படுகிறீர்கள். ஆனால், மணவாட்டி - அரிசோனாவிலுள்ள டூசானி லிருந்து மட்டும் எடுக்கப்படுவாள் என்று எண்ணி, அந்த நிபந்தனையை நிறைவேற்றுவதற்க்கு. அங்கு வருவீர்களானால், நீங்கள் தவறு செய்கின்றவர்களாயிருப்பீர்கள். அதற்காக நீங்கள் அங்கு வராதீர்கள், அதற்காக நீங்கள் அங்கு வராதீர்கள், ஏனெனில் அது தவறு. அது சரியல்ல. 10இப்பொழுது, வெளிப்படுத்தல் 12ம் அதிகாரம்... கர்த்தர் எனக்கு வெளிப்படுத்துகின்ற அல்லது என்னிடம் பேசுகின்ற ஒரு காரியம் என்னவெனில்... இப்பொழுது தான் நான் தரிசனங்களைக் கண்டு விட்டு வந்திருக்கிறேன் (பாருங்கள்?) அதிலிருந்து விலகியிருப்பது மிகவும் கடினமான செயல். பாருங்கள்? மேற்கில் செல்வதைக் குறித்து இன்னும் அதிகமாக நான் கூற வேண்டுமென்று அவர் என்னை மேலும் வற்புறுத்துவதாகத் தோன்றுகிறது. இப்பொழுது, நான் ஏற்கனவே உங்களிடம் கூறினபடி, நான் அங்கு இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு இருக்கவில்லை. அங்கு போவதற்காக நான் நடத்தப்பட்டபடியால் அங்கு இருக்கிறேன். அங்கு தங்கி அதை என் இருப்பிடமாக்கிக் கொள்வது தவறு என்று எண்ணுகிறேன். தேவன் என்னை அங்கு அனுப்பின நோக்கம் நிறைவேறும் வரைக்கும் நான் அங்கு குறுகிய காலம் தங்கியிருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். அங்கு நான் ஏன் செல்கிறேன் என்று என்னால் உங்களிடம் இங்கு கூற முடியாது. ஆனால் அங்கு நான் போக வேண்டும் என்பதற்காக நான் போகமாட்டேன். 11அன்றொரு நாள் இவ்விதம். ஒரு கேள்வி கேட்கப் பட்டது: “நீர் முதல் முறையாக அரிசோனாவுக்கு ஏன் சென்றீர் என்று எங்களுக்குத் தெரியும், அப்பொழுது தூதர்கள் பிரத்தியட்சமாயினர். நீர் ஏன் இரண்டாம் முறை அங்கு திரும்பச்சென்றீர்?” அந்த கேள்வி படிக்கப்பட்டது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? நான் அரிசோனாவுக்குச் சென்று திரும்பி வந்து அங்கு டாக்டர் லீ வேயிலுக்கு முன்பாக நானும் என் மனைவியும் உட் கார்ந்து கொண்டிருந்த போது (அவர் இப்பொழுது கட்டிடத்தில் எங்கோ இருக்கிறார் என்று நினைக்கிறேன்) நடந்தது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? நான் அரிசோனாவைக் குறித்தும் நாங்கள் இங்கு தங்குவதைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்த போது ஒரு கையுறுப்பு சுவற்றில் தோன்றி, வெளிச்சமும் தோன்றி, “அரி சோனாவுக்குத் திரும்பிச்செல்” என்று எழுதினது. எத்தனை பேருக்கு அது ஞாபகமுள்ளது? ஆகையால் தான் அங்கு நான் மறுபடியும் சென்றிருக்கிறேன்: நான் ஏன் அங்கு திரும்பச்செல்ல வேண்டும் என்று அறியாதவனாய். அங்கு அடைந்த போது, நான் எதற்காகத் திரும்பச் செல்ல வேண்டும் என்பதை அவர் எனக்கு வெளிப்படுத்தினார். அதை நான் சொன்னால், சாத்தான் அதை தடுத்துப் போடுவான். ஆனால் என் இருதயத்தில் உள்ளதை அவன் அறியமாட்டான். அவன் வார்த்தை அல்ல, எனவே அவனால் இருதயத்தில் உள்ளதை அறிந்து கொள்ள முடியாது. அதை நான் “வாய் விட்டுக்கூறும் போது, அவன் அதை கேட்கிறான். எனவே இப்பொழுது, அதை ஞாபகம் கொள்ளுங்கள். 12இப்பொழுது, அன்றொரு நாள் நான் கூறின போது, நான் அதை ஒருவாறு... ஒருக்கால் உங்களுக்கு தவறான அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கக்கூடும். நான், “நீங்கள் அரிசோனாவுக்கு வராதீர்கள்' என்று சொன்ன போது, நீங்கள் வரக்கூடாது என்னும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. நான் என்ன அர்த்தத்தில் கூறினேன் என்றால், நீங்கள் அங்கு வருவதற்கு நடத்தப்பட்டால், முன்சென்று அதை செய்யுங்கள். நீங்கள் கலிபோர்னியா: அரிசோனா, அல்லது வேறெங்கு நடத்தப்பட்டாலும். ஆனால் நீங்கள். ”சகோ. பிரான்ஹாமே, நீங்கள் அங்கு தங்கி வார்த்தையைப் பிரசங்கிக்கப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன், ஆகையால்தான் நான் அங்கு செல்கிறேன்“ என்பீர்களானால், நீங்கள் அங்கு தவறு செய்கின்றீர்கள் என்று எண்ணுகிறேன். பாருங்கள்? என் பிரசங்கம் எங்கிருக்குமென்றால், அது இந்த கூடாரத்தில் தான்; இதுதான் அந்த இடம். எனக்கு அரிசோனாவில் ஒரு ஆராதனையும் கூட இல்லை. நான் ஒவ்வொரு முறையும் சில மணி நேரங்கள் மட்டுமே அங்கு இருக்கிறேன். எனக்கு... கிறிஸ்துமஸுக்குப் பிறகு எனக்கு பீனிக்ஸில் வர்த்தகர்களின் கூட்டம் ஒன்றுள்ளது. இதுவே இவ்வாண்டுக்கு அங்கு முதல் கூட்டம். அவ்வளவு தான் எனக்குள்ளது. நான் வாக்கு கொடுத்திருந்தேன்; வேறொரு கூட்டம் எதுவும் எனக்கில்லை. என்னுடைய அடுத்த கூட்டம், எனக்குத் தெரிந்த வரையில், எய்த் அண்டு பென் தெருவிலுள்ள இந்த பிரான்ஹாம் கூடாரத்தில் தான். எனக்கு பேசுவதற்கு முப்பது அல்லது நாற்பது பொருட்கள் உள்ளன. இவைகளை ஒரேயடியாக பேச வேண்டு மென்றால் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் பிடிக்கும். இதுவே நான் ஜெபர்ஸன்வில், இந்தியானாவிலுள்ள பிரான்ஹாம் கூடாரத்தில் பிரசங்கிக்க வேண்டுமென்று என் இருதயத்தில் உள்ள தாகும். 13இப்பொழுது, வார்த்தையில் நிலைத்திருப் பதற்கென, நமது செய்தி பிரசங்கிக்கப்படும் ஏதாவதொரு இடத்துக்கு நீங்கள் செல்ல விரும்பினால் நமது செய்தி ஒன்றும் வித்தியாசமானது அல்ல, அது உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் கேட்ட அதே செய்திதான், அதனுடன் கூட இன்னும் சில காரியங்கள் வெளிப்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன என்பது மாத்திரமே. இந்த செய்தி லூத்தர் பிரசங்கித்த அதே செய்தி, வெஸ்லி பிரசங்கித்த அதே செய்தி, பெந்தெகொஸ்தேயினர் பிரசங்கித்த அதே செய்தி அதனுடன் கூட சில காரியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது மாத்திரமே. அது என்னவென்றால் சீர்திருத்தக்காரர்கள் விட்டுச்சென்ற முத்திரைகள் வெளிப்படுத்தப்பட்டது (பாருங்கள்?), அது இந்த காலத்தில் அறிந்து கொள்ளப்பட்டது, அவர்களால் அது அறிந்து கொள்ளப்பட முடியவில்லை. பெந்தெகொஸ்தே செய்தியானது லூத்தர் அல்லது வெஸ்லியின் நாட்களில் அறிந்து கொள்ளப்பட முடியவில்லை, அது பெந்தெகொஸ்தே காலம் வரைக்கும் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. பெந்தெகொஸ்தே காலம் என்பது லூத்தரின் காலத்தை விட சற்று முன்னேற்ற மடைந்த காலமேயன்றி வேறல்ல. தானியம் வெவ்வேறு கட்டங்களில் முதிர்வடைவதைப் போல, சபையும் முதிர்வடைகிறது. 14இன்றிரவு நான் பிரசங்கித்திருந்தால், எகிப்திலிருந்து பாலஸ்தீனாவுக்கு மாற்றப்பட்ட திராட்சை செடி என்னும் பொருளின் பேரில் பிரசங்கம் பண்ணியிருப்பேன். இதை வேதத்தில் குறித்து வைத்திருக்கிறேன். இஸ்ரவேல் தமது திராட்சை செடி என்று தேவன் கூறியுள்ளார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அதிலிருந்து இயேசு திராட்சை செடியாயிருப்பதைக் குறிக்கும் இடத்துக்கு வருகிறேன். இப்பொழுது அது சபை உலகத்துக்கு மாற்றப்பட்டு, அழுக்கில் உட்கார்ந்திராமல், கிறிஸ்துவுடன் கூட உட்கார்ந்திருப்பதால், அது கனி கொடுக்க வேண்டும். பார்த்தீர்களா? இன்றிரவு நான் பிரசங்கம் பண்ணியிருந்தால், அதுவே என் செய்தியாய் இருந்திருக்கும். ஆனால் கேள்விகளுக்கு பதிலளிப்பது நலமாயிருக்குமென்று கருதி பிரசங்கம் பண்ணும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன். நான் திரும்பி வரும்போது, ஒருக்கால் இந்த பொருளை எடுத்துக் கொள்வேன். 15வெளிப்படுத்தல் 12ம் அதிகாரம் மணவாட்டியுடன் சம்பந்தப்பட்டதல்ல. வெளிப்படுத்தல் 12ம் அதிகாரம் (அதை நான் பார்க்கவில்லை, ஆனால் அது எனக்குத் தெரியும்) அது ஸ்திரீ சூரியனில் நின்று கொண்டு பாதங்களின் கீழே சந்திரன் இருப்பதாகும். சந்திரன் நியாயப்பிரமாணத்துக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது; ஸ்திரீ இஸ்ரவேலாகிய சபைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறாள்; அவளுடைய நெற்றியில் உள்ள பன்னிரண்டு நட்சத்திரங்கள் அந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்களை, கடந்துபோன சபை காலங்களைக் குறிக்கிறது. பாருங்கள்? சூரியன் அவளுடைய தலையில் இருந்தது. சந்திரன் சூரியனின் நிழலாயுள்ளது, அவ்வாறே நியாயப்பிரமாணமும் வரப்போகும். நல்ல காரியங்களுக்கு நிழலாயுள்ளது. அந்த ஸ்திரீ இஸ்ரவேல், மணவாட்டி. அலல. இப்பொழுது நான் அதிக நேரம் செலவிடப்போவதில்லை, ஏனெனில் இவைகளுக்கு பதில் கூறி முடிக்க வேண்டும். 16ரோமர் 7:14-18 “மேலும் நமக்குத் தெரிந்திருக்கிறபடி நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக் கிறேன். எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுக்கிறதையே செய்கிறேன். இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப் பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. இது எனக்குப் புரியவில்லை. நல்லது, அவர்கள் வேதவசனத்தை அப்படியே எழுதியிருக்கிறார்கள்; அது பவுல் ரோமருக்கு உரைத்தது. இப்பொழுது அவன் என்ன கூறுகிறான் என்றால்... நீங்கள் காணத்தக்கதாக இதை நான் சற்று மெருகேற்றட்டும். அவன், “எனக்குள் இரு நபர்கள் உள்ளனர்; ஒருவன் நான் நல்லது செய்ய வேண்டுமென்கிறான்; மற்றவன் நான் கெடுதல் செய்ய வேண்டும் மென்கிறான். நான் நல்லது செய்ய முனையும் போதெல்லாம், கெடுதல் அதை தடை செய்கிறது” என்கிறான். 'இன்று பிற்பகல் பேட்டிக்கு வந்திருந்த எத்தனை பேருக்கு அதே விதமான அனுபவம் உண்டாயிருந்தது. (பாருங்கள்?) அதேகாரியம்? இன்று காலையில் நான் அதைக் குறித்து சிறிது பேசினேன். 17உங்கள் வெளிப்புற மனிதன் ஆறு புலன்களுக்கு உட்பட்டிருக்கிறான்; உங்கள் உள்ளான மனிதன் விசுவாசம் என்னும் ஒரே புலனுக்கு உட்பட்டிருக்கிறான். இந்த விசுவாசத்துடன் அந்த ஆறு புலன்களும் ஒத்துப் போகாதிருந்தால், விசுவாசமும் அந்த ஆறு புலன்களுடன் ஒத்துப்போகாது. ஒன்று மற்றதுக்கு முரணாயிருக்கும். ஆறு புலன்களும் விசுவாசத்துடன் ஒத்துப் போனால் நல்லது, ஆனால் ஆறு புலன்களும் விசுவாசத்துடன் ஒத்துப் போகாமலிருந்தால், ஆறு புலன்களை தனியே விட்டு விடுங்கள். இப்பொழுது, இங்கு உதாரணமாக, இயேசு ஒன்றைக்கூறினார், ஒரு வாக்குத்தத்தத்தை அருளினார் என்று வைத்துக் கொள்வோம். உள்ளான மனிதன். அது உண்மை என்கிறான். ஆனால் வெளிப்புற மனிதனோ தன் அறிவை பயன்படுத்தி யோசித்து, அது உண்மையல்ல என்பானானால், வெளிப்புற மனிதனை தள்ளி விட்டு, உள்ளான மனிதனை ஏற்றுக் கொள்ளுங்கள். இதே காரியத்தைக் குறித்து தான் பவுல் பேசுகிறான், அவன் பாவத்துக்குக்கீழாக விற்கப்பட்டு மாம்சத்துக்குரியவனாயிருந்தான். நாம் ஒவ்வொருவரும் அப்படித்தான் இருக்கிறோம். ஆகையால் தான் நமக்குத் தொல்லைகள் நேரிடுகின்றன - நான்கைந்து முறை விவாகம் செய்தல், இது, அது, எல்லாவிதமான பாவங்கள், விபச்சாரங்கள் போன்ற நமது வாழ்க்கையில் காணப்படுபவை இவைகளின் காரணமாகவே. நாம் மாம்சத்துக் குரியவர்களாயிருக்கிறோம். அந்த பாகம் நிர்மூலமாக வேண்டும்; ஆனால் உள்ளில் நாம் ஆவிக்குரிய மனிதனாயிருக்கிறோம், உள்ளில் உள்ள ஆத்துமா. அது தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் கொண்டிருக்கு மானால், அப்பொழுது நாம் தேவன், உரைத்ததை ஏற்றுக்கொண்டு, நமது வெளிப்புற சரீரத்தை விசுவாசத்தின் மூலமாய் வார்த்தைக்கு கீழ்படுத் துகிறோம். 18ஒரு களை விதையை நான் எடுத்துக் கொண்டு அதை எப்படி கோதுமை மணியாக என்னால் மாற்ற முடியும்? அது என்னால் கூடாத காரியம். அதைச் செய்யக்கூடிய ஒரே வழி அந்த களை விதைக்குள் கோதுமை வித்தின் சத்தை நுழைப்பதே. அப்பொழுது நீங்கள் களை விதையை விதைத்தால், அது கோதுமை மணியைக் கொடுக்கும். (அது உண்மை, பாருங்கள்?), ஏனெனில் கோதுமை வித்தின் சத்து அந்த களை விதைக்குள் புகுத்தப்பட்டது. களை விதையின் சத்து அதிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் களை விதையின் தன்மை பிசு பிசுவென்று கையில் ஒட்டுவதே. அதற்குள் இருக்கும் இந்த புது ஜீவன் தரைக்கு மேல் வளர்ந்து பெரிதாகும் வரைக்கும் அது அப்படித்தான் இருக்கும். அது வளர்ந்து மேலே வரும்போது, அது களை விதையாக இருக்காது, ஆனால் அது கோதுமை மணியாயிருக்கும். ஆனால் அது பூமியின் மேல் இருக்கும் போது பிசுபிசுத்தன்மை கொண்டதாயிருக்கும், ஆனால் உள்ளிலோ அது கோதுமையின் இயல்பைக் கொண்ட தாயிருக்கும். ' நீங்கள் இந்த வாழ்க்கையில் உள்ள வரைக்கும் பிசு பிசுத்தன்மை கொண்டவர்களாய் மாம்ச சுபாவத்தைப் பெற்றிருப்பீர்கள்; நீங்கள் உயிரோடுள்ள வரைக்கும் அது உங்களைத் தொல்லைப்படுத்திக் கொண்டேயிருக்கும். ஆனால் உள்ளிலோ நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் உயிரோ டெழும்போது, நீங்கள் கிறிஸ்துவின் சாயலை உடையவர்களாய் இருப்பீர்கள், எல்லா பாவமும் உங்களை விட்டுப்போயிருக்கும். பாருங்கள்? அது தான் காரியம். 19இதை நான் கூறட்டுமா? அது ஹாஸ்யமாக தொனிக்கக்கூடும். ஒரு சிகப்பு இந்தியன்... அவர்கள் விசித்திரமான ஜனங்கள். நான்... அவர்கள் விசித்திரமானவர்கள் அல்ல, நமக்கு அவர்கள் விசித்திரமாகக் காணப்படுகின்றனர். ஆனால் அவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் சரியாகத்தான் உள்ளனர். நீங்கள் அவர்களை அறிவீர்களானால், அவர்கள் சரி யாகவே உள்ளனர். ஒரு முறை ஒரு சிகப்பு இந்தியன் இரட்சிக் கப்பட்ட போது, அவனிடம் இவ்வாறு கேட்கப்பட்டது.... 20அரிசோனாவிலுள்ள பீனிக்ஸில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. பில்லி ஜெப அட்டைகளை வினியோகித்துக் கொண்டிருந்தான். அவன் வழக்கமாக ஓரிடத்தில் நின்று கொண்டு ஜெப அட்டைகளை வினியோகிப்பான், ஓடக்கூடிய ஜனங்கள் அவனிடம் ஓடிச்சென்று ஜெப அட்டைகளை அவன் கையிலிருந்து பிடுங்கிக் கொள்வார்கள் ... உடல்நிலை நன்றாயிருப்பவர்கள். உதாரணமாக தலைவலி, பல்வலியினால் அவதிப்படுபவர்கள், பாதவிரலில் சிறிது கோளாறு உள்ளவர்கள் ஜெப அட்டைகளைப் பெற்றுக்கொண்டனர். அப்படிப்பட்டவர்கள் ஜெப வரிசையில் வரும்போது, என்னிடம் வந்தவர்கள், தலைவலியால் அவதிப்படுபவர்கள், 'பாதவிரலில் ஏதோ கோளாறு உள்ளவர்கள் போன்றவர்களே... புற்று நோயால் மரித்துக் கொண்டு அங்கு உட்கார்ந்திருப்பவர்கள் போன்றவர்கள் ஜெபவரிசையில் வருவதில்லை. நான் பில்லியிடம், “நீ போய் அந்த ஜனங்களிடம் அவர்களுக்கு என்ன வியாதி என்று கேள். அவர்களுக்குப் புற்று நோய் அல்லது அவர்களைக் கொன்று போடத்தக்க, வேறெந்த பயங்கரமான வியாதியும் இல்லாவிட்டால், அவர்களுக்கு ஜெப அட்டைகளைக் கொடுக்காதே. தேவனுடைய உதவி பெறாவிட்டால் மரித்துப் போகும் நிலையிலுள்ள அப்படிப்பட்டவர்களை ஜெப வரிசையில் கொண்டு வா. மற்றவர்கள் சிறிது காத்திருக்கட்டும். அவர்கள் பிறகு வேகமான வரிசையில் வரட்டும். ஆனால் மரித்துக் கொண்டிருக்கிற ஜனங்கள்... அவர்களைக் கேள்” என்றேன். அவன், “ஜெப அட்டைகளை குலுக்கி விட்டு அவர்களுக்கு வினியோகம் பண்ணு' என்றீர்கள். அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்” என்றான். நான், “ஆனால் மற்றவர்களை விட வேகமாக முன்னால் ஓடி வர முடியும் ஜனங்கள் அட்டைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். ஊனமுற்றவர்கள் போன்றவர்களுக்கு அட்டைகள் கிடைப்பதில்லை“ என்றேன். “சரி, நான் அப்படியே செய்கிறேன்” என்றான். அவன் ஜனங்களிடம் சென்ற போது, அங்கு வயோதிப சிகப்பு இந்தியன் ஒருவன் இருந்தான். அவர்கள் விசித்திர மானவர்கள். அவன் நாற்காலியில் உட்கார மறுத்து விட்டான். அவனுக்கு அவர்கள் ஒரு நாற்காலியைக் கொடுத்தனர், ஆனால் அவனோ அந்த கூடாரத்தில் தரையில் உட்கார்ந்து கொண்டான். அவன் ஒரு தொப்பியை அணிந்திருந்தான்; அதைக் கழற்ற மறுத்துவிட்டான். அதன் பின்பக்கத்தில் ஒரு சிறகு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அவன் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தான். பில்லி அவனிடம் நடந்து சென்று, “தலைவரே, ஜெப அட்டை வேண்டுமா?” என்று கேட்டான். “ஹும்” என்று அவன் பதிலளித்தான். “உனக்குள்ள கோளாறு என்ன?” என்று பில்லி கேட்டான். அவன், “நான் வியாதியாயிருக்கிறேன்” என்றான். பில்லி மறுபடியும். “உனக்குள்ள கோளாறு என்ன?” என்று கேட்ட போது, “நான் வியாதியாயிருக்கிறேன்” என்ற பதிலே மறுபடியும் வந்தது. 21' அவ்வளவு தான் அவனிடமிருந்து பில்லி அறிந்து கொள்ள முடிந்தது. “சரி, நான் சற்று கழித்து வருகிறேன்” என்று சொல்லி விட்டு பில்லி மற்ற ஜனங்களிடம் சென்று அவர்களை விசாரிக்கத் தொடங்கினான். ஜெப அட்டைகள் குறைந்து கொண்டே வருவதை இந்த வயோதிப சிகப்பு இந்தியன் கவனித்துக் கொண்டே' வந்தான். ஒவ்வொரு முறையும் பில்லி ஜேபியிலிருந்து ஜெப அட்டை எடுக்கும் தோறும், அவை சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்தன. எனவே சற்று கழிந்து அந்த வயோதிப சிகப்பு இந்தியன் எழுந்து பில்லியிடம் நடந்து சென்று அவனை முதுகில் தட்டி அவன் அங்கிருப்பதை ஞாபகப்படுத்தினான். பில்லி, “உனக்குள்ள கோளாறு என்ன?” என்று கேட்ட போது, “நான் வியாதியாயிருக்கிறேன்” என்று மறுபடியும் அவனிடம் பதில் வந்தது. பில்லி, “நல்லது, உனக்கு என்ன வியாதி என்று நீ என்னிடம் கூற வேண்டும். வயிற்று வலி, தலை வலி உள்ளவர்களுக்கு ஜெப அட்டைகள் வினியோகிக்க வேண்டாம் என்று அப்பா கூறி விட்டார். அதிகமாக வியாதிப்பட்டவர்களுக்கே கொடுக்கும்படி சொன்னார். உன்னுடைய வியாதி எப்படிப்பட்டது? என்று கேட்டான். அவன் “நான் வியாதியாயிருக்கிறேன்” என்றான். பில்லி அவனை உட்கார வைத்து விட்டு மற்றவர்களிடம் சென்றான். அவனிடம் இருந்த ஜெப அட்டைகள் ஏறக்குறைய தீர்ந்து விடும் நிலையில் இருந்தது. சில நிமிடங்கள் கழித்து (அந்த சிகப்பு இந்தியன் அதை கவனித்துக் கொண்டேயிருந்து) அவன் மறுபடியும் 'பில்லியிடம் சென்று அவனை முதுகில் தட்டினான். பில்லி அவனுடைய கையில் ஒரு ஜெப அட்டையைக் கொடுத்து “நான் வியாதியாயிருக்கிறேன்' என்று அதில் எழுது” என்றான். 2235', அவன் ஜெப வரிசையில் வந்த போது அவனுக்காக நான் ஜெபித்தேன். நான் அவனிடம், “நீ விசுவாசிக்கிறாயா?” என்று (கேட்டேன். அவன், “அது உண்மை” என்றான். நான், “தேவன் உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டேன், அவன், “அது உண்மை” என்றான், நான், “நீ நல்லவனாக இருப்பாயா?!” என்று கேட்டேன். அவன், “அது உண்மை ” என்றான் . ஒரு வாரம் கழித்து அவனை நான் சந்தித்தேன். சகோ: ஃபிரட் சாத்மனும் அப்பொழுது அங்கிருந்தார் என்று நினைக்கிறேன். அது கூடார கூட்டம் நடந்து கொண்டிருந்த சமயம். அது பீனிக்ஸில் நடந்தது. வாரத்தின் முடிவில் அவனைச் சந்தித்தேன். “நீ சுகமாயிருக்கிறாயா?” என்று அவனை நான் கேட்டேன். அவன், “அது உண்மை ” என்று பதிலளித்தான். பார்க்கப் போனால்... அங்குள்ள அந்த மிஷனரியின் பெயர் என்ன, வெள்ளை மீசை வைத்துக்கொண்டிருக்கும் அந்த முதியவர்? அவருடைய பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை. அவர் ஒரு அருமையான முதியவர். அவருடைய மனைவி புற்று நோயிலிருந்து சுகமடைந்தாள். அவர் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, அந்த சிகப்பு இந்தியனுக்கு அந்த இரண்டு வாக்கியங்கள் மட்டுமே தெரியும். நான் அவனுக்கு, 'நான் வியாதியாயிருக்கிறேன்' என்றும் 'அது உண்மை என்றும் சொல்ல கற்பித்துக் கொடுத்தேன். அது தான், பாருங்கள்' என்றார். ”அது உண்மை. நான் வியாதியாயிருக்கிறேன்“. 23அவன் ஒரு சமயம் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக யாரோ ஒருவர் என்னிடம் கூறினார். அவர் அவனிடம், “நீ எப்படியிருக்கிறாய்? என்று கேட்டதற்கு, அவன், “நன்றாகவும் மோசமாகவும் இருக்கிறேன்” என்றானாம். அவர், “நன்றாகவும் மோசமாகவும் இருக்கிறாய் என்றால் அதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டாராம். அவன், “நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட முதற்கு எனக்குள் இரண்டு நாய்கள் உள்ளன. ஒன்று கறுப்பு நாய், மற்றது வெள்ளை நாய் அவை எப்பொழுதும் ஒன்றோடொன்று தர்க்கித்து, ஒன்றைப் பார்த்து மற்றொன்று குரைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன: வெள்ளை நாய் எனக்கு நன்மை செய்ய வேண்டுமென்று விரும்புகிறது, கறுப்பு நாய் எனக்குத் தீமை செய்ய நினைக்கிறது” என்றானாம். “நல்லது, சண்டையில் எந்த நாய் ஜெயிக்கிறது? என்று அவனைக் கேட்டதற்கு, அவன், “நான் எந்த நாய்க்கு ஆகாரம் அதிகம் கொடுக்கிறேன் என்பதை அது பொறுத்தது” என்றானாம். பாருங்கள்? அது ஒரு நல்ல பதில் என்று எண்ணுகிறேன். பாருங்கள்? உங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிற அந்த இரு சுபாவங்களில், நீங்கள் எந்த சுபாவத்தை ஆதரிக்கிறீர்கள் என்பதை அது பொறுத்தது - உலகப் பிரகாரமான காரியங்களில் 'ஈடுபட்டிருக்கும் மாம்சத்துக்குரிய சுபாவத்தையா. அல்லது தேவனுடைய காரியங்களில் ஈடுபட்டிருக்கும் ஆவிக்குரிய சுபாவத்தையா? அது தான். 24தேவனுடைய குமாரன் ஒவ்வொருவனும் அதிகமாக அபிஷேகம் பெற்று அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்ய முடியுமா, அல்லது இது பரிசுத்த ஆவியின் நடத்துதலின் படி மட்டுமா? ஆம் அது பரிசுத்த ஆவியின் நடத்துதலின்படியே. நீங்கள் தேவனுடைய குமாரனாகவோ, அல்லது தேவனுடைய குமாரத்தியாகவோ இருந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வீர்களானால், பரிசுத்த ஆவியானவர் நீங்கள் காரியங்களைச் செய்யும்படி உங்களை நடத்துகிறார். எனக்கு நேரமில்லை. எனக்கு உங்களிடம் சிறு வரலாறுகளைக் கூறப்பிரியம். ஒவ்வொரு முறையும் அவைகளைக் கூற நினைக்கும் போது, நான் கூறாமல் கடந்து செல்ல வேண்டியதாயுள்ளது. ஆனால் இதை ஒரு நிமிடம் கூறலாமென்று நினைக்கிறேன். 25இது மிஸ்ஸிஸிப்பியிலுள்ள மெரிடியனில் நடந்தது. சகோ. பிக்பி எனக்கு கூட்டங்களை ஒழுங்கு செய்தார் என்று ஒருத்துவக்காரராகிய உங்களில் அநேகர் அறிவீர்கள். அவர் ஒரு ஒருத்துவ சகோதரன். ஓரிரவு கூட்டத்தில் பில்லி பால் மைதானத்துக்குச் சென்று ஜெப அட்டைகளை வழங்கினான். ஓ, மழை அதிகமாக பெய்து கொண்டிருந்தது. ஜனங்கள் குடைகளுடன் வெளியே நின்று கொண்டிருந்தனர். பில்லி ஜெப அட்டைகளை வழங்கினான். அங்கு ஒரு... அதன் பிறகு அவன் என்னை அழைத்துக் கொண்டு போக வந்திருந்தான். அவன் என்னை அழைத்துக் கொண்டு போக வந்திருந்த நேரத்தில், ஒரு ஸ்திரீ முன்பாகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள், வேறொரு ஸ்திரீ கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு, அதன் அழுகையை நிறுத்த முயன்று. இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தாள். 'காலிகோ' உடையை அணிந்து அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அந்த ஸ்திரீயும் ஒரு தாய்தான். அவள் அழுகிற குழந்தையை வைத்துக் கொண்டிருந்த அந்த ஸ்திரீயைக் கண்டாள். பரிசுத்த ஆவியானவர் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த ஸ்திரீயின் இருதயத்தில் பேசி, “நீ போய் அந்த குழந்தைக்கு ஜெபி” என்றார். 26“நல்லது, அடுத்த முறை அவள் என்னைக் கடக்கும் போது நான் போய் ஜெபிப்பேன்” என்று சொன்னாள். அவள் அவளைக் கடந்த போது, அவள் கையில் ஜெப அட்டை இருப்பதை அவள் கண்டாள். “ஓ, நான் அந்த குழந்தைக்கு ஜெபிக்கப் போவதில்லை. சகோ. பிரான்ஹாம் இன்றிரவு அந்த குழந்தைக்கு ஜெபிப்பார். சகோ. பிரான்ஹாம் அந்த குழந்தைக்கு ஜெபிக்க இருக்கும் போது நான் ஜெபிப்பதற்கு எம்மாத்திரம்?” என்று நினைத்துக் கொண்டாள். அது பயபக்தியான ஒன்றுதான், அது அருமையானது, ஆனால் அது எப்பொழுதுமே தேவனுடைய சித்தமாயிருக்க முடியாது. சில நேரங்களில் அது வித்தியாசமாயிருக்கும். பரிசுத்த ஆவியானவர் அவளிடம், “நீ போய் அந்த குழந்தைக்கு ஜெபம்பண்ணு” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். முடிவில் அவள், “நான் ஜெபிக்கப்போனால் அந்த ஸ்திரி அதை மறுத்து விடுவாள். அவளிடம் ஜெப அட்டை உள்ளதால், அந்த குழந்தைக்கு ஜெபிக்க அவள் என்னை அனுமதிக்க மாட்டாள். நான் ஜெபிப்பதற்காக அவள் அந்த குழந்தையை இங்கு கொண்டு வரவில்லை, சகோ. பிரான்ஹாம் ஜெபிப்பதற்காகவே அவள் கொண்டு வந்திருக்கிறாள்” என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவளிடம், “நீ போய் அந்த குழந்தைக்கு ஜெபம் பண்ணு” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். முடிவில் அவள், “நல்லது. இதிலிருந்து நான் விடுபட என் இருக்கையை அவளுக்கு அளிப்பேன்” என்று சொல்லிவிட்டு அந்த பெண்ணிடம், “தேனே (ஒரு தாய் மற்றொரு தாயிடம் பேசுகின்றாள்), நீ குழந்தையை வைத்திருக்கிறாய். நீ வந்து இங்கு என் இருக்கையில் அமருவாயா?” என்று அவளுக்கு அழைப்பு விடுத்தாள். அவள், “ஓ, தேனே, உன் இருக்கையை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. குழந்தையை அமைதிபடுத்த நான் முயன்று கொண்டிருக்கிறேன்” என்றாள். அதற்கு அவள், “நீ மிகவும் களைப்பாக காணப்படுகிறாய்” என்றாள். “நான் களைப்பாய்தான் இருக்கிறேன்” என்றாள் அவள். “அப்படியானால் இங்கு வந்து என் இருக்கையில் அமர்ந்துகொள்” என்று சொல்லி விட்டு, “உன்னிடம் ஜெப அட்டை இருப்பதைக் காண்கிறேன். சகோ. பிரான்ஹாம் உன் குழந்தைக்காக ஜெபிக்கப் போகிறாரா?” என்று கேட்டாள். அதற்கு அவள், “இந்த ஜெப அட்டை எண் கூப்பிடப்படும் என்று நம்புகிறேன்” என்றாள். “நானும் கூட நம்புகிறேன்” என்று அவள் சொல்லி விட்டு, “சகோதரியே, நீ கிறிஸ்தவளா?” என்று கேட்டாள்... அவள், “ஓ, ஆமாம்” என்றாள். “நானும் கூட கிறிஸ்தவள்தான். இங்கு நான் உட்கார்ந்து கொண்டிருந்த முதற்கு கர்த்தருடைய ஆவியானவர் என்னிடம், 'நீ போய் அந்த குழந்தைக்கு ஜெபம் பண்ணு' என்று உரைத்துக் கொண்டேயிருக்கிறார். நீ அனுமதி அளிப்பாயா? அந்த எண் அழைக்கப்பட்டால் சகோ. பிரான்ஹாம் அந்த குழந்தைக்கு ஜெபிப்பார் என்று எனக்குத் தெரியும். நீ கையில் உன் அட்டையை பிடித்துக்கொண்டிரு. அவர் எப்படியும் கூப்பிடுவார்” என்று சொல்லிவிட்டு, “என் கரங்களை குழந்தையின் மேல் வைத்து ஒரு சிறு ஜெபத்தை நான் ஏறெடுத்தால், எனக்கு நல்லுணர்வு உண்டாகும், என்னை ஜெபிப்பதற்காக அழைத்துக் கொண்டிருக்கும் அதிலிருந்து நான் விடுபடுவேன். அது உனக்கு கோபமுண்டாக்குமா?” என்றாள். 27அதற்கு அவள், “நிச்சயமாக இல்லை, அன்பே. குழந்தைக்கு ஜெபி” என்றாள். அது நீல நிறமாயிருந்தது. எனவே இந்த ஸ்திரீ அந்த குழந்தைக்கு ஜெபித்தாள். அவள் தன் இருக்கையை அந்த ஸ்திரீக்கு கொடுத்து விட்டு படிக்கட்டுகள் ஏறி மூன்றாம் முன்மண்டபத்துக்கு (balcony) சென்று அங்கு நின்று கொண்டிருந்தாள். அங்கு ஏதோ ஒரு கிறிஸ்தவ சகோதரன் எழுந்து அவளுக்கு தன் இருக்கையை அளிக்க போதிய நற்பண்பு கொண்டவராயிருந்தார். எனவே அவள் உட்கார்ந்து கொண்டாள். அரை மணி நேரம் கழித்து நான் கூட்டத்துக்கு வந்து, சில நிமிடங்கள் பேசி விட்டு, ஜெப அட்டைகளை அழைத்தேன். இந்த ஸ்திரீ வரிசையில் மூன்றாவது அல்லது நான்காவதாக குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். முன்மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த ஸ்திரீ அதைக் கண்டதும், “ஓ, கர்த்தாவே, உமக்கு நன்றி. அந்த சிறு தாய்க்காக நான் மிகவும் வருத்தமடைந்திருந்தேன். அந்த குழந்தை சுகமாகிவிடுமென்று நம்புகிறேன், ஏனெனில் சகோ. பிரான்ஹாம்... அவள் வரிசையில் மூன்றாவது அல்லது நான்காவதாக நின்று கொண்டிருக்கிறாள். அவள் அவரிடம் போய் விடுவாள். கர்த்தாவே, உமக்கு நன்றி” என்றாள். அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அந்த சிறு தாய் அந்த குழந்தைக்காக மனம் வருந்தினாள். 28நான் மேடையின் மேல் வந்து, அந்த ஸ்திரீ என்னிடம் வந்த போது, அந்த குழந்தைக்கு நான் ஜெபித்தேன். அவளை நான் உற்று நோக்கி, “உன் குழந்தை நீல நிறமாயிருந்தது. ஜெபிப்பதற்காக அதை இங்கு நீ கொண்டு வந்தாய். உன் பெயர் திருமதி இன்னார், நீ இன்னின்ன இடத்திலிருந்து வருகிறாய்; ஆனால் குழந்தை ஏற்கனவே சுகமாகி விட்டது. திருமதி இன்னார் என்னும் பெயர் கொண்ட ஒரு ஸ்திரீக்கு இருதயத்தில் பாரம் குடி கொண்டிருந்தது. அவள் இப்பொழுது முன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டி ருக்கிறாள் (மூன்றாம் முன் மண்டபத்தில் நான்காம் வரிசையின் கடைசியில் முதலாவதாக). அவள் அந்த குழந்தைக்கு விசுவாச ஜெபத்தை ஏறெடுத்தாள். அந்த குழந்தை ஏற்கனவே சுகமடைந்து விட்டது” என்றேன். அவள் இருக்கையிலிருந்து ஏறக்குறைய மயங்கி கீழே விழுந்து விட்டாள். பாருங்கள்? இப்பொழுது, அவள் அந்த குழந்தைக்கு ஜெபிக்காமல் போயிருந்தால்? நான் கூறுவது உங்களுக்கு விளங்கு கிறதா? அந்த ஸ்திரீக்கு, தாய் என்னும் முறையில், என்னைக் காட்டிலும் அந்த குழந்தையின் பேரில் அதிக அனுதாபம் இருக்கும். பாருங்கள்? தாய் என்பவள்... பாருங்கள்? நாம் எல்லோரும் அற்புதங்களைச் செய்ய முடியுமா? ஆம். அற்புதங்களைச் செய்வதற்கு நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டால், போய் செய்யுங்கள், ஏனெனில் அது பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டது. இப்பொழுது, அந்த ஸ்திரீ தேவன் அவளிடம் கூறினதை செய்து நிறைவேற்றாமல் போயிருந்தால், ஒருக்கால் ஆவியில் அவளுக்கு கடிந்து கொள்ளுதல் உண்டாயிருக்க வகையுண்டு (பாருங்கள்?), அவள் தேவனுக்கு கீழ்படியாமல் போயிருந்திருப்பாள். நீங்கள் கிறிஸ்தவராயிருந்து எப்பொழுதுமே ஏதோ ஒன்று உங்களை ஏதோ ஒன்றைச் செய்ய ஏவினால், நீங்கள் போய் அதைச் செய்யுங்கள். அதை சந்தேகிக்காதீர்கள்; போய் செய்யுங்கள். 29சகோ. பிரான்ஹாமே, பரலோக நகரத்துக்கு வெளிப்புறத்திலுள்ள பூமியில் தங்கியிருப்பவர் யார்? 30ஒரு நபருடன் பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் தங்கியிருக்கும் அவருடைய தூதனைக் குறித்து விளக்கவும். மிகவும் நல்ல கேள்வி. இவைகளுக்கு பதில் கூறாமல் கடந்து செல்ல எனக்கு பிரியமில்லை; இவை நல்ல கேள்விகள். பாருங்கள்? “நகரத்துக்கு வெளிப்புறத்திலுள்ள பூமியில் தங்கியிருப்பவர் யார்?” - வெளிப்புறத்தில் மீட்கப்பட்டவர்கள் நகரத்துக்கு வெளிப்புறத்திலுள்ள பூமியில் தங்கியிருப்பார்கள். ஆனால் அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் மணவாட்டி என்று அழைக்கப்பட மாட்டார்கள். மணவாட்டி ராஜ்யத்திற்குள்ளே ராஜாவுடன் தங்கியிருப்பாள். வெளிப்புறத்தில் பூமியின் ராஜாக்கள் தங்கியிருந்து உழைத்து தங்கள் உழைப்பை - தங்கள் உழைப்பின் பலனை - நகரத்துக்குள் கொண்டு வருவார்கள். நகரத்தின் வாசல்கள் இரவில் அடைக்கப்படுவதில்லை. 31இப்பொழுது. மேலே. இப்பொழுது. மலையின் உச்சியிலுள்ள விளக்கு முழு உலகத்துக்கும் வெளிச்சம் தராது. அது நகரத்துக்கு' மட்டுமே வெளிச்சம் தரும். ஒருக்கால் அது ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் காணப்படக்கூடும், ஆனால் அது பூமிக்கு வெளிச்சம் தராது. ஏனெனில், புது உலகத்தில் அவர்கள் மாதந்தோறும், ஓய்வு நாள் தோறும், கர்த்தரைத் தொழுது கொள்ள சீயோனுக்கு - அந்த நகரத்துக்கு - அவருக்கு முன்பாக வருவார்கள் என்று வேதம் உரைக்கிறது (ஏசா. 66 : 23). அவர்கள் நகரத்துக்குப் புறம்பே தங்கியிருப்பார்கள், பணவாட்டி அல்ல, ஆனால் இரண்டாம் உயிர்த்தெழுதலில் எழுந்திருப்பவர்கள். அவர்கள் ஆதாமைப் போல் நிலத்தைப் பயிரிடு பவர்களாகவும் தோட்டங்களைக் கவனித்துக் கொள்ளுகிறவர் களுமாயிருப்பார்கள். 32“ஒரு நபருடன் பிறப்பு முதல் தங்கியிருக்கும் அவருடைய தூதனைக் குறித்து விளக்கவும்”. இப்பொழுது. நீங்கள் கவனிப்பீர்களானால்... இப்பொழுது, இது மிகவும் ஆழமானது. இப்பொழுது, நான் ஒருபோதும் - இப்பொழுது தான் இதைக் கையிலெடுத்தேன். இந்த கேள்வியின் ஒரு பாகம் தட்டெழுத்திலும் மற்ற பாகம் பென்சிலிலும் - இல்லை, பேனாவிலும் எழுதப்பட்டுள்ளது. இப்பொழுது, ஒரு தூதன் உண்டு, ஆனால் இந்த கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாளய மிறங்குகிறான் (சங். 34:7). பாருங்கள்? பாவிகளுக்கு தூதர்கள் இருப்பார்கள் என்று வாக்களிக்கப்படவில்லை, மீட்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே தூதர்கள் உள்ளனர். அது உங்களுக்குத் தெரியுமா? கர்த்தருடைய தூதர்கள் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாளயமிறங்குகின்றனர். இப்பொழுது, தூதர்கள் என்பவர்கள் செய்தியாளர்கள். நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன், அது மிகவும் பரிபூரணமானது. அது! உங்களுக்கு முன் குறித்தலை நிரூபிக்கும். பாருங்கள்? 33இப்பொழுது, ஒரு சிறு குழந்தை தாயின் இருதயத்தின் கீழ் உருவாகிக் கொண்டிருக்கையில்.... இவைகளைப் புரிந்து கொள்ள இயலும் சிறு பிள்ளைகளே, பாருங்கள், கர்த்தர் உங்களை உங்கள் தாய்க்குக் கொடுத்தார். அவள் உங்களை அவளுடைய இருதயத்தின் கீழ் சுமந்தாள், ஏனெனில் நீங்கள் அவளுடைய இருதயத்துக்கு மிகவும் நெருங்கினவர்கள். பிறகு ஒரு நாள் கர்த்தர் இறங்கி வந்து உங்களை தாயின் இருதயத்திலிருந்து, அவளுடைய இருதயத்துக்கு அப்பால் இருக்கும்படிக்கு, உங்களை வெளியே கொண்டு வந்தார். இருப்பினும் நீங்கள் எப்பொழுதுமே அவளுடைய இருதயத்தில் இருப்பீர்கள். இப்பொழுது, இந்த 'சிறு சரீரம் உருவாகிக் கொண் டிருக்கையில், தாய்க்குள் இந்த மாம்ச சரீரம் உருவாகிக் கொண்டிருக்கையில், அது பிறந்தவுடனே அதை ஏற்றுக் கொள்ள பூமியில் ஒரு ஆவிக்குரிய சரீரம் ஆயத்தமாகக் காத்திருக்கிறது. இப்பொழுது, குழந்தை அசையும் தசைகளுடனும், இருதயத்துடிப்புடனும் பிறக்கிறது. ஆனால் அதற்குள் ஜீவ சுவாசம் கிடையாது. அதன் தசைகள் வேகமாக அசைகின்றன. பாருங்கள்? அப்பொழுது, பாருங்கள். அதிலிருந்து வித்தியாசமான ஒன்று இருக்குமானால், பின்னால் வரவேண்டிய ஒரு ஆவி இல்லாமல் போனால், நம்முடைய சுவாசம் நம்மை விட்டுப் போகக் கூடும். நாம் சுவாசிக்காமலே உயிருடன் இருக்கக் கூடும். ஆனால் இந்த சரீரம் பிராண வாயுவைப் பெறாமல் போனால் (நம்முடைய சுவாசப்பை உள்ளே பெறுதலும் வெளியே விடுதலும்), அப்பொழு நாம் இறந்து விடுகிறோம். 34ஆனால் தாய்... தாயின் இருதயத்திலிருந்து சிறு குழந்தை பூமியில் கீழே போடப்படும் போது “கீழே போடப்படுதல்”; நான் என்ன கூறுகிறேன் என்று விளங்குகிறதா. அதை நான் அவ்விதம் கூறக் காரணம் என்னவென்), அந்த சிறு குழந்தை கீழே போடப்படும் போது, என்ன நடக்கிறது? அது பிறந்தவுடனே அழாமல் போனால் டாக்டர் அல்லது நர்ஸ் அல்லது யாராகிலும் அதை அடிப்பார்கள் (சகோ. பிரான்ஹாம் தன் கரங்களைக் கொட்டுகிறார் - ஆசி), அதை இழுப்பார்கள். அதற்கு ஒரு அதிர்ச்சி அவசியம். என்ன நடக்கிறது? பாருங்கள். ஒரு தாய், நீசத்தனமாகவும் கொடூர மாகவும் இருக்கக்கூடும், ஆனால் குழந்தை பிறப்பதற்கு சற்று முன்பு, அவளிடம் ஒரு குறிப்பிட்ட தயவு காணப்படுகிறது. தாயாகப்போகிற ஒருத்தியை நீங்கள் எப்பொழுதாகிலும் கவனித்ததுண்டா? அவளிடம் எதோ ஒரு வித இனிமை காணப்படுகிறது, அவள் அந்த இனிமையைப் பெற்றுக் கொள்கிறாள். ஏனெனில் அந்த சிறு தூதன், சிறு ஆவி, இந்த சிறு கூடாரத்துக்கு. ஒரு சிறு தூதுவன் இவ்வுலகிற்கு வருவதற்கு ஆயதமாயிருக்கிறான். இந்த சிறு தூதன் சரீரத்துக்குள் வரும்போது (அது பூமியின் சிறு தூதன், இந்த சரீரத்துக்குள் புகுவதற்கு தேவனால் நியமிக்கப்பட்ட ஆவி), அந்த குழந்தை இரண்டில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அது தீர்மானம் செய்கிறது. அது நடைபெறும் போது, கர்த்தருடைய தூதன் இங்கு வருவதை நீங்கள் காண்கிறீர்கள், அது ஆவிக்குரிய சரீரம், அந்த நித்தியமான ஒன்று. 35இது மரித்துக் கொண்டிருக்கிற சரீரத்தில் மரித்துக் கொண்டிருக்கிற ஆவி; ஆனால் நீங்கள் ஒரே சமயத்தில் இரண்டு சரீரங்களில் இருக்க முடியாது. இப்பொழுது, கர்த்தருடைய ஆவியின் சுபாவம்... நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது, நீங்கள் அந்த குழந்தை பிறப்பது போல் மாம்சத்தில் பிறப்பதில்லை. என்ன நடக்கிறதென்றால் ஆவிக்குரிய பிறப்பு உங்களுக்கு வந்து விடுகிறது. இந்த ஆவிக்குரிய பிறப்பு உங்கள் இருதயத்தில் வளர்ந்து கொண்டிருக்கையில், அந்த ஆவியை ஏற்றுக் கொள்ள ஒரு வானத்துக்குரிய சரீரம் வளர்ந்து கொண்டு வருகிறது. உயிர் இந்த சரீரத்தை விடும்போது, அது அந்த சரீரத்துக்குள் செல்கிறது. இந்த சரீரம் பிறப்பில் பூமிக்கு ஒப்புவிக்கப்படும் போது, எவ்வாறு ஆவி உள்ளே வருகிறதோ, அந்த ஆவி சரீரத்தை விட்டு வெளியேறும் போது, அங்கு ஒரு சரீரம் காத்திருக்கிறது. “பூமிக்குரிய சுடாரமாகிய இந்த வீடு அழிந்து போனாலும், ஏற்கனவே ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது” (2 கொரி 5:1). பாருங்கள்? அதுதான், ஜனங்களின் ஆவிக்குரிய சரீரம். சகோ. பிரான்ஹாமே ... 36இப்பொழுது: இவைகள். இங்கு அநேக கேள்விகள் உள்ளன, குறைந்தது பத்து அல்லது பதினைந்து உள்ளது போல் தோன்றுகிறது. இவையனைத்தும் ஒரே விதமான காகிதத்தில் தட்டெழுத்தால் எழுதப்பட்டுள்ளன. இவைகளுக்கு முடிந்த வரையில் வேகமாக பதிலளிக்க முயல்கிறேன். முடிந்த வரையில் இவைகளை வேகமாகப்பார்க்கலாம். அன்புள்ள சகோதரனே, வெளிப்படுத்தின விசேஷத்தில் யோவான் இயேசுவை வணங்கும்படிக்கு அவருடைய பாதத்தில் எழுந்த போது, வணக்கத்தை வழக்கமாக அனுமதிப்பவர் ஏன் யோவானின் வணக்கத்தை ஏற்றுக்கொள்ள வில்லை? அன்புள்ள சகோதரனே, சகோதரியே, அது யாராயிருந்தாலும், வணக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் இயேசு அல்ல. வெளிப்படுத்தல் 22:8ல், அது தீர்க்கதரிசி, தூதன், தான் வணக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது என்று நீங்கள் படிக்கலாம். இவைகளைக் காண்பித்த தூதனை வணங்கும்படி யோவான் அவன் பாதத்தில் விழுந்த போது, அந்த தூதன், “நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும், தீர்க்கதரிசிகளோடும் கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்” என்றான். பாருங்கள், பாருங்கள்? “உன் சகோதரரும், உடன் ஊழியக்காரர்களோடும் தீர்க்கதரிசிகளோடும் கூட நானும் ஒருவன்; தேவனைத் தொழுது கொள்”. இயேசு அதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கவில்லை, தீர்க்கதரிசி தான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 37அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, இயேசு சீஷர்களின் மேல் ஊதி, “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொன்னதற்கும், மேலறைக்குச் சென்று அங்கு பரிசுத்த ஆவி வரக்காத் திருந்ததற்கும் வித்தியாசம் என்ன? அது அவர் அவர்களுக்கு அளித்த வாக்குத்தத்தம். அவர் அவருடைய வாக்குத்தத்தத்தை அவர்கள் மேல் ஊதி “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார். அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்காக அவர்கள் மேலறைக்குச் 'சென்று காத்திருந்தனர். அதே காரியம் தான், நீங்கள் சுகமாவதற்கென நாங்கள் உங்கள் மேல் கைகளை வைக்கும் போதும். அப்பொழுது அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்காக நீங்கள் காத்திருந்து உங்கள் வழக்கமான பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள். 38சகோ. பிரான்ஹாமே, இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, சீடர்களுக்கு பல பூறை பிரத்தியட்சமான போது, தமது முக ரூபத்தை மாற்றிக்கொண்டாரா? “தமது முக ரூபத்தை மாற்றிக் கொண்டாரா? எனக்குத் தெரியாது. நான் நினைப்பது என்னவென்றால், அவர் தமது முக ரூபத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் என்ன செய்தாரென்றால், அவரைக் காணாதபடிக்கு அல்லது அவர்கள் அறிந்து கொள்ளாதபடிக்கு அவருடைய கண்களை அவர் மறைத்து விட்டார். எம்மாவூர் சீஷர்களைப் போல், அவர்கள் நாள் முழுவதும் அவருடன் நடந்து ' சென்றார்கள், அவரைக் காணக்கூடாதபடிக்கு அவர்கள் கண்கள் மறக்கப்பட்டிருந்தது. ஒரு சமயம் அவர்கள், தாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த கரையில் ஒருவர் மீன்பிடிக்கக்கண்டார்கள்; அவர், “பிள்ளைகளே, புசிப்பதற்கு ஏதாகிலும் உண்டா?” என்று கேட்டார். அவர்கள், “நாங்கள் இராமுழுவதும் பிரயாசப்பட்டும் எங்களுக்கு ஒன்றும் கிடைக்க வில்லை” என்றார்கள். அவர், “மற்ற பக்கத்தில் வலையைப் போடுங்கள்” என்றார். அவர்கள் நிறைய மீன்களைப் பிடித்தார்கள், அப்பொழுது அவர் கர்த்தர் என்று அறிந்து கொண்டார்கள். அவர் தன் முக ரூபத்தை மாற்றிக் கொண்டதாக எனக்குத் தோன்றவில்லை, ஜனங்களின் கண்கள் மறைக்கப்பட்டிருந்தது என்று நான் நினைக்கிறேன். 39கர்த்தருடைய தூதனுக்கும் கர்த்தருக்கும் வித்தியாசம் ஏதாகிலும் இருக்குமானால், அது என்ன? கர்த்தருடைய தூதன் கர்த்தரிடத்திலிருந்து செய்தியைக் கொண்டு வரும் தூதன், கர்த்தர் என்பது அந்த நபரே, அவர் கர்த்தரிடத்திலிருந்து வருகின்ற தூதன் அல்ல. இதை நான் உங்களுக்கு காண்பிக்கட்டும். பூமிக்குரிய விதமாக பேசுவோ மானால், இங்கே கர்த்தரிடத்திலிருந்து வந்த ஒரு தூதன் இருக்கிறார், இங்கே கர்த்தரிடத்திலிருந்து வந்த மற்றொரு தூதன் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் கர்த்தரிடத்திலிருந்து வந்த தூதர்கள் என்று. நாம் எவ்விதம் அறிந்து கொள்வது? அவர்கள் கர்த்தரிடத்திலிருந்து வார்த்தையைக் கொண்டு வரும்போது. ஆனால் அவர்கள் வார்த்தையைப் புரட்ட முயன்றால், அது உரைக்காத ஒன்றை உரைப்பதாகக் கூற முயன்றால், அது கர்த்தரிடத்திலிருந்து வந்ததல்ல (பாருங்கள், பாருங்கள்?). கர்த்தர் உரைத்ததை அப்படியே உரைப்பார்களானால். பிறகு கர்த்தரிடத்திலிருந்து வருகின்ற இயற்கைக்கு மேம்பட்ட தூதனும் இருக்கிறார். அவர்கள் காபிரியேல், மிகாவேல், எட்டி போன்ற பெயர் கொண்ட தூதர்கள். 40சகோ. பிரான்ஹாமே, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நாளில் ஏற்பட்டுள்ள தவறு என்னவெனில், ஒரு விசுவாசியாயிருந்து கொண்டு, செய்தியையும் இந்நாளின் செய்தியாளளையும் பின்பற்றிய போதிலும், நம்மால் நமது விருப்பத்திற்கேற்ப ஜெபம் செய்ய இயலுவதில்லை. இது ஒரு நல்ல கேள்வி. நான் நினைப்பது என்னவெனில், சகோதரனே, சகோதரியே, அது யாராயிருந்தாலும், இந்நேரத்தின் நிலையே அதற்கு காரணம். எழுப்புதல் முடிவடைந்து விட்டது. அது ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக நீடித்தது. இதற்கு முன்பு அது மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடித்ததில்லை. அது கடைசி எழுப்புதலைப் பெற்றுக் கொண்டதென்று நான் நம்புகிறேன். ஆகையால் தான் உங்களுக்கு முன் போல ஜெபிக்கவும் ஆவியில் உணரவும் முடிவதில்லை. ஏனெனில் எழுப்புதல் தீ அணைந்து விட்டது. 41சகோ. பிரான்ஹாமே, ஒரு நபர் தன் சொந்த சிந்தனைகளை யோசிக்கிறாரா அல்லது சாத்தான், அவர் தவறாக எண்ண வேண்டுமென்று நினைத்து அவனுடைய கருத்துக்களை சிந்தையில் போடுகிறானா - முக்கியமாக அவ்விதம் நினைக்க அவர் விரும்பாமலிருக்கும் போது - என்பதை எவ்வாறு கண்டு கொள்வது என்பதை தயவு கூர்ந்து விளக்கவும். அது வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், அது சாத்தான் அவ்விதம் நினைக்கத் தூண்டுவதாகும். அது வார்த்தையுடன் ஒத்துப் போனால், அது தேவன் உங்கள் சிந்தையில் போடுவதாகும். அது தவறான எண்ணங்களாயிருந்தால், அது பிசாசு. அது வார்த்தையோடும் தேவனோடும் சம்பந்தப்பட்ட நல்லெண்ணங்களாய் இருக்குமானால், அது தேவனுடைய எண்ணங்களாகும். 42ஒருக்கால், ஒரு குறிப்பிட்ட காரியத்தைக் குறித்து பிசாசு தன் எண்ணங்களை உங்கள் சிந்தையில் நுழைப்பதாக அது இருக்குமானால், அதை எவ்விதம் மேற்கொள்வது அல்லது விலக்கி விடுவது? அதற்கு மாறான நிலையை கடைப்பிடியுங்கள். பிசாசு உங்களை அவ்விதம் நினைக்கத் தூண்டுவானானால், நீங்கள் கிறிஸ்தவராக இருந்து, நீங்கள் கிறிஸ்தவர் அல்ல என்று அவன் உங்களை நினைக்கத் தூண்டுவானானால், நீங்கள் அதற்கு மாறான நிலையை கடைப்பிடித்து, “நான் கிறிஸ்தவன்” என்று சொல்லுங்கள். உங்கள் அனுபவம் தேவனுடைய வார்த்தையுடன் இணைந்துள்ள வரைக்கும், “நான் கிறிஸ்தவன்” என்று சொல்லுங்கள். வேறெந்த காரியத்திலும் கூட அதே வழியைக் கடைபிடியுங்கள். இதற்கு நீங்கள் பதிலுரைக்கும் போது, இதை மேற் கொள்வதற்கு எனக்காக ஜெபியுங்கள், ஏனெனில் நான் என் சுயநிலையில் இல்லை. தேவன் தாமே நீங்கள் மேற்கொள்ளும்படி உங்களுக்கு அருளுவாராக, நீங்கள் யாராயிருந்தாலும். உங்கள் சிந்தனைகள் மற்ற பக்கத்துக்கு சென்று, “நான் கிறிஸ்தவன்; நான் ஒரு விசுவாசி. சாத்தானே, என் மேல் உனக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று நீங்கள் சொல்வீர்களாக. வெளிப்படையாகக் கூறினால், இந்த பிரசங்க பீடத்தில் மயங்கி விழாமல் என்னைக் காத்துக் கொள்ள நானும் கூட இங்கு நின்று கொண்டு அதையே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது உண்மை. நான்கைந்து முறை நான் ஏறக்குறைய இந்த பிரசங்க பீடத்தில் மயங்கி விழுந்துப் போனேன். 43ஒரு நபர், தனக்கு தாழ்வான மனப்பான்மை அல்லது அவ்விதமான ஏதோ ஒரு மனப்பான்மை இருப்பதாக உணருவாரானால், அவர் இதை எப்படி மேற்கொள்வது, எனவே - அவர் ஒரே பிள்ளையாக இருந்த காரணத்தால் வாலிபத்தின் ஆரம்பத்திலே அது ஏற்பட்டிருக்கக் கூடுமா? அதற்கு எதிரான மனப்பான்மையைக் கொள்ளுங்கள் நீங்கள் - எப்பொழுதுமே உங்கள் வழியையே கடைபிடிக்க வேண்டுமென்றும், எல்லாமே நீங்கள் நினைத்தபடியே ஆக வேண்டுமெனும் மனப்பான்மையை குழந்தை பருவத்தில் கொண் டிருந்திருப்பீர்களானால், அந்த நிலையிலிருந்து மாறி, மற்ற வழியைக் கடைபிடிக்க உங்களாலான எல்லாவற்றையும் செய்யுங்கள். நீங்கள் தன்னயமுள்ளவர்களாய், எல்லாவற்றையுமே நீங்கள் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டுமெனும் எண்ணம் கொண்டிருப் பீர்களானால், உங்களுக்கு இருப்பவைகளை மற்றவர்களுக்கு கொடுக்கத் தொடங்குங்கள். பாருங்கள்? உங்கள் மனப்பான்மைக்கு மாறான ஒன்றை செய்யுங்கள். எதையுமே மேற்கொள்ள அதுவே சிறந்த எதிர்மருந்து (antidote). “ நீங்கள்... தென்பாகத்தைச் சேர்ந்த என் வயோதிப தாய், “நாயின் முதுகில் மயிரை எடுத்துவிட்டால், அதை கடிக்கலாம்” என்று கூறுவது வழக்கம். அது இதற்கும் பொருந்தும். 44சகோ. பிரான்ஹாமே, பதின்மூன்று வயதுக்குட்பட்ட நமது பிள்ளைகள் எந்தவிதமான செயல்களில் பங்கெடுக்கலாம்? மேலும், அவர்கள் தங்கள். சகாக்களைத் தேர்ந்தெடுக்க நாம் எந்த வகையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்? உங்களால் கூடுமானவரையில் அவர்களை கிறிஸ்தவ சகாக்களுடன் வைத்திருங்கள். அவர்களை... அது பெண்ணாக இருந்தால், அவளை கிறிஸ்தவ பெண்களுடன் வைத்திருங்கள்; அது கிறிஸ்தவ பையன்களாக இருந்தால், கிறிஸ்தவ பையன்களுடன் வைத்திருங்கள். அவள் ஒரு பையனுடன் செல்வதற்கு போதிய வயதுள்ளவளாயிருந்தால், அவள் சரியான பையனுடன் போகிறாளா என்று பார்த்துக் கொள்ளுங்கள். வேறெந்த பையனுடனும் அவள் போகாதபடிக்கு அவளுக்கு ஆலோசனை கூறுங்கள்; அவ்வாறே ஒரு பையன் சென்றாலும், அவள் ஒரு அவிசுவாசியுடன் சென்றால், ஒரு விசுவாசியுடன் செல்ல அவளை உற்சாகப் படுத்துங்கள்; அவ்வாறே பையனின். விஷயத்திலும். உங்கள் வீட்டை நன்றாக வைத்திருங்கள். உங்கள் மகளோ அல்லது மகனோ அவர்களுடைய நண்பர்களை பெற்றோர் முன்பு கொண்டு வருவதற்கு வெட்கப்படாத அளவுக்கு உங்கள் குடும்பத்தையும் வீட்டையும் நல்ல விதமாக வைத்திருங்கள்; அவர்கள் வீட்டில் தங்கியிருக்க பிரியப்படும் அளவுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்படி செய்யுங்கள். ஊ ஊ , என்னே இங்கு ஏழு கேள்விகள் வரிசையாக உள்ளன நான் சில நிமிடங்களைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. 45சகோ. பிரான்ஹாமே, சபை காலம், லவோதிக்கேயா, முடிவடைந்து விட்டதென்று நீங்கள் அண்மையில் எப்பொழுதாகிலும் கூறினதுண்டா? இல்லை, அது முடிவடைந்து விட்டதென்று நான் ஒரு போதும் கூறின தில்லை. அவ்விதம் நான் கூறியிருந்தால் அதை தவறாகக்கூறினேன், அல்லது நீங்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இது கடைசி சபை காலம். இது சபை காலங்களின் முடிவாகும். இந்த லவோதிக்கேயா: அது முடி வடையவில்லை; அது முடிவடைந்தால் சபை போய்விடும். சபை இங்குள்ள வரைக்கும் அது முடிவடையவில்லை. பாருங்கள்? 46சபை காலம் முடிவடைந்து அந்தகாரம் சூழத்தொடங்கி, மணவாட்டி அழைக்கப்பட்டு விட்டிருந்தால், நாம் ஏற்கனவே உபத்திரவ காலத்தில் பிரவேசித்து விட்டோமா? இல்லை, இல்லை, இல்லை, நீங்கள்... இந்த கேள்விக்கு விடையளிக்க சற்று அதிக நேரம் இருந்தால் நலமாயிருக்கும். பாருங்கள். பாருங்கள்? மணவாட்டி சபையை விட்டு எடுக்கப்படும் போது, சபை காலம் முடிவடையும். லவோதிக்கேயா குழப்பத்துக்குள் செல்லும்; மணவாட்டி மகிமைக்குச் செல்கிறாள். புத்தியில்லாத கன்னிகைகளின் மேல் 3 ஆண்டுகள் உபத்திரவ காலம் வந்திறங்கும். இஸ்ரவேல் அப்பொழுது தன் தீர்க்கதரிசனத்தைப் பெற்றுக் கொண்டிருப்பாள்; பிறகு இஸ்ரவேலுக்கு உபத்திரவ காலம் தொடங்குகிறது; அதன் பிறகு அர்மகெதோன் யுத்தம் உண்டாகி, அது எல்லாவற்றையும் அழித்து போடும். பிறகு மனவாட்டி மணவாளனுடன் ஆயிரம் வருட அரசாட்சிக்காக திரும்பி வருகிறாள்; அதன் பிறகு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு! வருகிறது; அதன் பிறகு புதிய வானமும் புதிய பூபியம் உண்டாகி, புதிய நகரம் பரலோகத்தை விட்டு தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறது. அப்பொழுது காலமும் நித்தியமும் ஒன்றாக இணைகிறது. 47எக்காளங்களுக்கும் மணவாட்டிக்கும் சம்பந்தமில்லை என்றும் பரிசுத்த ஆவியானவர் உம்மிடம் உரைத்திருக்கிறார். ஏழு கலசங்களுக்கும் நமக்கும் ஏதாகிலும் சம்பந்தம் உண்டா ? பரிசுத்த ஆவியானவர் அவ்விதம் வெளிப்படுத்துகிறாரா என்று நான் பொறுத்திருந்து பார்க்கிறேன். இது வரைக்கும் எனக்குத் தெரியாது. 48மல்கியா 4ல் உரைக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசி தான் வெளிப்படுத்தல் 7:9ல் உரைக்கப்பட்டுள்ள மீதியானவர்களையும், அவர்கள் உபத்திரவ காலத்திற்குள் செல்வதற்காக இருந்த போதிலும், அழைப்பவராக இருப்பாரா? இல்லை, இல்லை! வெளிப்படுத்தல் 7ம் அதிகாரத்தில் 144,000 பேர் முத்திரையிடப்படுவதை யோவான் காண்கிறான். அதன் பிறகு அவன் ஒருவனும் எண்ணக்கூடாத திரளான கூட்டமாகிய ஜனங்களைக் காண்கிறான், அதுதான் மணவாட்டி. அதற்கு... அது... மல்கியா 4ன் ஊழியம் முடிவு பெற்று மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படுகிறாள், அதன் பிறகு எலியாவும் எலிசாவும் (மோசேக்கு பதிலாக எலிசா என்று சொல்லி விடுகிறார் - தமிழாக்கியோன்) பூமிக்குத் திரும்ப வருகின்றனர். சபையானது உபத்திரவ காலத்தினூடே செல்லும், ஆனால் எலியாவுக்கும் எலிசாவுக்கும் புத்தியில்லாத கன்னிகைகளுடன் எவ்வித சம்பந்தமும் கிடையாது (இவர்கள் புறஜாதிகள்), அவர் = யூதர்களிடம் மட்டுமே அனுப்பப்படுகின்றனர். 49ஏழு இரகசியங்கள் உடைய ஏழு இடிமுழக்கங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டு விட்டதா? அவைகள் ஏழு (முத்திரைகளில் வெளிப்படுத்தப்பட்டு, நமக்கு இன்னும் அவை இடி முழக்கங்கள் என்பதாக வெளிப்படவில்லையா? இல்லை, அவை ஏழு முத்திரைகளில் வெளிப்படுத்தப்பட்டு விட்டன; இடிமுழக்கங்கள் என்பவை அவ்வளவு தான். அவை எதை வெளிப்படுத்த வேண்டுமென்றால்... ஏழு இடிகள் தங்கள் சத்தங்களை முாங்கின. அவை என்னவென்று யாருமே அறிந்து கொள்ள முடியவில்லை. அவை என்னவென்று யோவான் அறிந்திருந்தான், ஆனால் அவன் அதை எழுத தடை செய்யப்பட்டான். அவர், “ஏழாம் தூதன் தன் நாட்களில் தன் சத்தத்தை முழங்கும் போது, ஏழு இடிமுழக்கங்களின் ஏழு இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்” என்றார். ஏழாம் தூதன் என்பவன் ஏழாம் சபை காலத்தின் செய்தியாளன். பாருங்கள்? 50உயிரோடிருக்கின்ற மணவாட்டியின் சிறு கூட்டம், முதலாவது மணவாட்டி செய்தது போல, கர்த்தராகிய இயேசு மேகங்களின் மேல் வருவதற்கு முன்பு, எப்பொழுதாகிலும் எங்காகிலும் ஒன்று கூடி எல்லாவற்றையும் பொதுவாக அனுபவிப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இப்பொழுது, நான் நம்புகிறேனா என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள். வேதவாக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு என்னால் நிரூபிக்க முடியாது. ஒருக்கால் அத்தகைய நேரம் ஒன்று வரக்கூடும், எனக்குத் தெரியாது. அங்கு ஒருக்கால்... பாருங்கள்? அவ்விதம் நிகழுமானால், அவருடைய வருகை மிகவும் சமீபமாயுள்ளது என்பதை அது காட்டிக்கொடுத்து விடும். ஆனால் அவரோ, “அவர் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வருவார்” என்று கூறியுள்ளார், பாருங்கள்? அவர் யாரிடம் வருகிறாரென்றால். நான் படித்த ரோமியோ ஜூலியட்டின் கதையைப் போல. அவர் இரவில் வந்து தன் மணவாட்டியை கொண்டு போய் விடுகிறார். அவள் ஒரு நொடிப்பொழுதில், ஒரு இமைப்பொழுதில் எடுத்துக் கொள்ளப்படுகிறாள். பாருங்கள்? அவர்கள் ஒன்று கூடுவார்களா என்பது சந்தேகம் தான். ஏனெனில் வேதம், “இரண்டு பேர் படுக்கையில் இருப்பார்கள்; ஒருவனை எடுத்துக் கொள்வேன், மற்றவனைக் கைவிடுவேன்; இரண்டு பேர் வயலில் இருப்பார்கள்; ஒருவனை எடுத்துக் கொள்வேன், மற்றவனைக் கைவிடுவேன்” என்றுரைக்கிறது. பாருங்கள். எனவே அவர்கள் ஒருக்கால்... உலகிலுள்ள மணவாட்டி ஓரிடத்தில் ஒன்றுகூடி எல்லாவற்றையும் பொதுவாக வைத்து அனுபவிக்க மாட்டாள். ஆனால் அவர்களில் சிறு குழுக்கள் உலகம் முழுவதிலும் சிதறிக் கிடக்கும். 51நான் நம்புகிறேன், கர்த்தர் என்னை அனுமதிப்பாரானால்; இது அதன் ஒரு சிறு குழு. ஒருக்கால் ஆசியாவில் ஒரு சிறு குழு இருக்கக்கூடும். அன்றொரு நாள் நான் மணவாட்டியின் தரிசனத்தைக் கண்டபோது, அவள் சர்வதேசங்களிலிருந்தும் வந்தவளாயிருந்தாள். எனவே மணவாட்டி ஓரிடத்தில் கூடுவதில்லை, அவள் உலகம் பூராவிலுமிருந்து வந்தவளாயிருப்பாள். அது வார்த்தையை முழுவதுமாக உறுதிப்படுத்துகிறது, வார்த்தை ஒரு போதும் தவறாயிருந்ததில்லை. இதுவரைக்கும் தரிசனமும் தவறாயிருந்ததில்லை, ஏனெனில் அது வார்த்தையின் படி உள்ளது. 52இந்த நேரத்தில் உண்மையான பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற எவராவது மணவாட்டியின் எடுத்துக் கொள்ளப்படுதலில் போகாமலிருக்க வகையுண்டா? நீங்கள் விளக்கம் தருவீர்களா? பாரத்தை இலகுவாக்க நாங்கள் எந்த வகையில் உங்களுக்கு உதவி செய்யக் கூடும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள். முடியாது. இப்பொழுது உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற உண்மையான விசுவாசிகள் மணவாட்டியில் இருப்பார்கள். அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டு வெளியே அழைக்கப்பட்டவர்கள். புத்தியில்லாத கன்னிகையிடம் எண்ணெய் இல்லை. எண்ணெய் வைத்திருந்தவர்கள் உள்ளே சென்றனர். ஆனால் அந்த... 53“பாரத்தை இலகுவாக்க நாங்கள் என்ன செய்யக் கூடும்? ஆம், சகோதரனே, சகோதரியே. இதை எழுதினது யாராயிருப்பினும், எனக்காக ஜெபியுங்கள். நீங்கள் செய்யக் கூடிய மிகச் சிறப்பான காரியம் அதுவே. உங்களுக்கு நன்றி. எனக்குப் பணம் தேவையில்லை. நான்... என் தேவைகளை கவனித்துக் கொள்ள போதிய பணம் வருகிறது. அதற்காக நான் கர்த்தருக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். எனக்கு உடைகள் தேவையில்லை. நான் உடுக்கும். உடைகளை அநேக முறை ஜனங்கள் எனக்கு வாங்கித்தந்து விடுகின்றனர். அவர்கள்... என். குடும்பத்தை போஷிக்க எனக்குப் போதிய பணம் கிடைக்கிறது; அவ்வளவு தான் நமக்குத் தேவை. என்ன தோன்றுகிறதென்றால்... எனக்காக நீங்கள் ஜெபிக்கலாம், ஏனெனில் எனக்கு ஆவிக்குரிய உதவி நிச்சயம் தேவை. 54நமக்குள்ள வார்த்தையில் நிலைத்திருக்கிற நமது ஊழியக்காரரின் மத்தியில், ஜெபிக்கவும், பிரசங்கிக்கவும், உபவாசிக்கவும், உலகில் எங்காகிலும் இருக்கக் கூடிய இழந்து போன ஆத்துமாக்களைக் குறித்து சிறிதளவும் கூட பாரமே இல்லாதது போல் தோன்றுகிறது. இந்த நிலையைக் குறித்து நாம் என்ன செய்ய வேண்டுமென்று தயவு செய்து எங்களுக்கு கூறுவீர்களா? சகோ. பிரான்ஹாமே, இதற்காக உங்களுக்கு மிக்க நன்றி. இது ஒரு ஊழியக்காரனாக இருக்க வேண்டும். இந்த சொற்களுக்கு அவர் கையொப்பம் எதுவும் இடவில்லை. 85, சகோதரனே... இதற்கு நான், களைப்புற்று நல்லுணர்வு இல்லாத நேரத்தில் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கு நான் மிகுந்த நன்றி செலுத்துகிறேன். அவருக்கு நான் கூற நினைத்திருந்த பதிலை மறந்து விட்டேன். “பிரசங்கிமார்கள், போதகர்கள் இவர்களுக்கு இழந்து போன ஆத்துமாக்களின் பேரில் ஏன் பாரம் இல்லை? அது எழுப்புதல் இல்லாததன் காரணமாக என்று எண்ணுகிறேன். இயேசு வரும் வரைக்கும் நமக்கு இழந்து போன ஆத்துமாக்களின் பேரில் ஆர்வத்தைத் தர நாம் தேவனிடம் இப்பொழுதும் ஜெபிக்க முயல வேண்டும். 55சகோ. பிரான்ஹாமே, பரிசுத்த ஆவி பெற்றுள்ள ஒவ்வொருவரும் அந்நிய பாஷையில் பேசுவார்களென்று நீர் நம்புகிறீரா? (இல்லை!). அந்நிய பாஷையில் பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சி அல்ல என்று நீர் கூறுகிறீரென்று எனக்குத் தெரியும். நான்... 1 கொரிந்தியர் 12:30ஐ தயவுகூர்ந்து விளக்கவும். 1 கொரிந்தியர் 12:30ஐ நீங்கள் எடுப்பீர்களா? நான் நினைக்கிறேன் “எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா?” என்னும் வசனம் அது; எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அவர்கள் அதை எடுப்பதற்குள், வேறொரு கேள்விக்கு பதிலளிக்க முயல்கிறேன். 56சகோ. பிரான்ஹாமே, யோபு 14:21ஐ விளக்குவீரா? ஆம், யோபு 14, “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என்னும் வசனம். ஓ. மனிதன் செத்த பின் ... யோபு “உயிர்த்தெழுதலைக் குறித்து பேசுகிறான் (அன்றொரு நாள் காலையில் அதைக் குறித்து பேசினேன் என்று நினைக்கிறேன், இல்லையா? அல்லது அது சார்லியின் வீட்டிலா? திருமதி காக்ஸ் அங்கு எங்கோ இருந்தார்கள்). பூக்கள் செத்த பிறகு தழைப்பதை யோபு காண்கிறான், ஆனால் அவனோ மனிதன் மண்ணுக்குள் சென்ற பிறகு திரும்ப வருவதில்லை என்று எண்ணுகிறான். அதன் பிறகு, ஏதோ ஒன்று பாவம் செய்து விட்டது என்று. அவனுக்கு விளக்கப்படுகிறது. அவனுக்கும் தேவனுக்குமிடையே ஒரு மத்தியஸ்தர் வேண்டுமென்று அவன் விரும்புகிறான். அப்பொழுது அவன் கர்த்தருடைய வருகையைக் காண்கிறான். 57அது என்ன, சகோதரனே? (சகோ. பிரான்ஹாம் ஒரு சகோதரனுடன் உரையாடுகிறார் - ஆசி). அது 1 கொரி. 12:30 என்று நினைக்கிறேன். ஆம்! “எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? அந்த வசனம் தான் அது என்று எண்ணினேன். ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. இவ்வாறு களைப்புற்றிருப்பதனால், ஆனால்... இல்லை! எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறதில்லை; எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறதில்லை; எல்லாரும் அதைச் சொல்லுகிறதில்லை. அடுத்த அதிகாரத்தில் ”நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை“ பாருங்கள்? பவுல் அவர்களிடம், ”எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? நிச்சயமாக இல்லை. எல்லாரும் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்களா? இல்லை. ஆனால், முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்“ என்கிறான். பாருங்கள் எல்லாருமே அந்நிய பாஷைகள் பேசுகிறதில்லை. நீங்கள் இங்கிருந்து செல்வதற்கு முன்பு, மற்றொரு சிந்தனைகளைப் பகுத்தறிதல் ஆராதனை ஒன்றை நடத்தப் போகிறீர்களா? இல்லையென்றால், தனிப்பட்ட பேட்டி ஒன்றைப் பெற வாய்ப்புண்டா? உங்களுக்கு அது கிடைத்ததென்று நினைக்கிறேன். இப்பொழுது, எனக்கு இன்னும் அநேக கேள்விகள் இல்லை. கூடுமானால் இவைகளுக்கு பதில் கூறி முடிக்க பிரயாசப்படுகிறேன். 58கூட்டில் அடைபட்ட ஒரு கழுகு தன் சிறகுகளை அடித்துக் கொண்டு, விடுதலை பெற போராடுவதைக் குறித்த பரிதாபகரமான காட்சியை நீங்கள் விவரித்தது என் நினைவுக்கு வருகிறது. அந்த நிலையில் என் விலையேறப் பெற்ற தாயார் இருக்கிறார்கள். விவாகமான அவர்களுடைய மூன்று பிள்ளைகள், தங்கள் தகப்பனின் உபதேசத்தை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், மூன்று ஆண்டுகளாக அவர்கள் வீட்டிற்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர் ஒரு ஸ்தாபன பிரசங்கியார். தாயாருக்கு இந்த கடைசி காலச் செய்தியை கேட்க வேண்டுமென்ற பிரியம் உள்ளது, ஆனால் ஒரு கடிதத்தையும் கூட அவர்களிடம் சேர்க்க என்னால் முடியவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு கட்டுப்பட்டிருக்கலாம்? ஜெபிப்பதைத் தவிர வேறெதாகிலும் என்னால் செய்யக்கூடுமா? எனக்குத் தெரிந்த வரையில் ஒன்றே ஒன்று அது தான். அவளுடைய கணவர் ஒரு ஸ்தாபன போதகராதலால், அவள் வார்த்தையைக் கேட்க அவர் அனுமதிப்பதில்லை. அவளுக்கோ வார்த்தையைக் கேட்க வேண்டுமெனும் ஆவல் உள்ளது. ஆனால் கேட்பதற்கு அவர் சம்மதிப்பதில்லை. அவளுக்காக ஜெபியுங்கள். அந்த ஸ்திரீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாள் என்று நம்புகிறேன். 59சகோ. பிரான்ஹாமே, ஒரு நபர் உண்மையான நீதிமானாக்கப்படுதல் மற்றும் பரிசுத்தமாக்கப்படுதல் அனுபவத்தைப் பெற்றிருந்த போதிலும், அவர் வார்த்தையின் வெளிச்சத்தைப் புறக்கணிப் பாரானால், அவர் இழக்கப்பட்டு நரகத்தில் முடிவடைவது சாத்தியமா? ஆம், ஐயா! அது முற்றிலும் உண்மை. 60நாம் வார்த்தையை விசுவாசிக்காமல் போனால் கிறிஸ்துவிலிருந்து நித்திய காலமாக பிரிக்கப்படுவோம் என்னும் சொற்களை நீர் உபயோகிக்கும் போது, புத்தியில்லாத கன்னிகைகள் நித்திய காலமாக வாழ்ந்து, ஆனால் கிறிஸ்து தன் மணவாட்டியுடன் வாசம் செய்யும் புதிய எருசலேமிலிருந்து பிரிக்கப்படுவார்கள் என்னும் அர்த்தத்தில் கூறுகிறீரா? இங்கு பரிசுத்த ஆவியைப் பெற்றிராதவர் உள்ளனர், அவர்கள் எவ்விதம் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று வேதம் உரைத்துள்ளபடியே மறுபடியும் பிறந்துள்ளனர். இயற்கை பிறப்புக்கு தண்ணீர், இரத்தம், ஆவி அவசியமானால், ஆவிக்குரிய பிறப்புக்கும் கிருபையின் மூன்று கட்டங்கள், ஒரு நபர் உண்மையாக மறுபடியும் பிறப்பதற்கு, அவசியமல்லவா? முற்றிலுமாக, அதை இன்று காலையில் நான் விளக்கினேன் - அதே காரியம் தான். நீங்கள் எல்லா கட்டங்களையும் பெற்றிருத்தல் அவசியம். நீங்கள் ஆவியினால் உருவாகின்றீர்கள்; ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் உருவாவதைப் போல, ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் பிறப்பதில்லை. அது உண்மை. நீங்கள் அப்பொழுது பிறக்கிறீர்கள், ஆனால் நீங்கள் குணப்படவில்லை. அந்த நேரம் வரைக்கும், நீங்கள் குணப்படும் கட்டத்தில் இருந்து வருகிறீர்கள். ஆகையால் தான் இந்த மகத்தான இரகசியங்கள் அனைத்தும் லூத்தருக்கு அளிக்கப்பட முடியவில்லை, வெஸ்லிக்கு அளிக்கப்பட முடியவில்லை, நம்மை சமீபத்தில் கடந்து சென்ற பெந்தெகொஸ்தே காலத்துக்கும் அளிக்கப்பட முடியவில்லை. ஏன்? அதற்கு நேரமாகவில்லை. அவர்கள் கருத்தரிக்கப்பட்டனர். இப்பொழுது. கிறிஸ்துவாகிய நபர்தாமே, மனுஷகுமாரன் (உங்களுக்குப்புரிகிறதா?) மனித சரீரத்தில் தம்மை வெளிப்படுத்துகிறார். அது இந்நாள் வரைக்கும் வர முடிந்திருக்காது. 61ஆயிரம் வருட அரசாட்சி தொடங்கும்போது, அவிசுவாசிகள் எவ்விதம் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்? அவிசுவாசிகள் புத்தியில்லாத கன்னிகைகளுடன் உபத்திரவ காலத்திற்குள் பிரவேசிப்பார்கள், அந்த மற்றெல்லாருமே (அவிசுவாசிகள், புத்தியில்லாத கன்னிகைகள்), மற்றும் வெளியே எடுக்கப்படும் இஸ்ரவேலில் மீதியானவர்களும். 62சகோ. பிரான்ஹாமே, யாராகிலும் ஒருவர், அந்த பழமொழி கூறுவது போல், “என் கால் விரல்களை மிதித்தால்,” எனக்கு கோபம் அதிகரிக்கிறது; இதை நான் எவ்விதம் மேற்கொள்வது? கர்த்தர் தான் இதை செய்ய வேண்டுமென்று நான் அறிந்திருக்கிறேன், ஆனால் என் இருதயத்தில் நான் என்ன செய்ய வேண்டும்? இது எனக்கு வேண்டாம். ஜெபத்தின் மூலமாய் உங்கள் சுபாவத்தை இனிமையாக்கிக் கொண்டு, பிறகு உங்கள் மனதில் தீர்மானித்துக் கொள்ளுங்கள்... எனக்குத் தொடக்கத்தில் இருந்த கோபத்தைப் போல இந்த கட்டிடத்திலுள்ள அதிகம் பேருக்கும் இருக்காது என்று எண்ணுகிறேன். ஒ, என் வாய் எப்பொழுதும் அடித்து கொதறப்பட்டது. என் ஆகாரத்தை நான் 'ஸ்ட்ரா' வழியாக உறிஞ்சி சாப்பிடுவது வழக்கம். 63என் தாயார், உங்களுக்குத் தெரிந்தபடி, பாதி சிகப்பு இந்தியர், என் தந்தை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், கென்டக்கியில் குடிபுகுந்த ஐரீஷ்காரர். இருவருக்குமே கோபம் அதிகம். எல்லா நேரங்களிலும் என் வாய் கொதறியிருந்தது; நான் தொடக்கத்தில் சிறுவனாயிருந்த போது, அவர்கள் என்னைத் தூக்கி, குத்தி கீழே வீழ்த்துவார்கள். நான் மறுபடியும் எழுந்திருப்பேன்; அவர்கள் மறுபடியும் குத்தி வீழ்த்தி, என்னால் எழுந்திருக்க முடியாத நிலை வரும் வரைக்கும் குத்தி வீழ்த்தித் கொண்டேயிருப்பார்கள். அது எப்பொழுதும் நடந்து வந்தது. என்னால் எழுந்திருக்க முடியும் போது, நான் எழுந்திருப்பேன்; அவர்கள் மறுபடியும் என்னைக் குத்தி கீழே வீழ்த்துவார்கள். அப்படித்தான் எனக்கு நடந்து வந்தது. “நான் கிறிஸ்தவனாக ஆகவே முடியாது” என்று எண்ணினேன். ஆனால் பரிசுத்த ஆவி என் வாழ்க்கைக்குள் வந்த போது, அது அதை சாதித்து விட்டது. ஒரு சமயம் ஒரு ஸ்திரீ இருந்தாள். அவளுடைய மின் சாரத்தைத் துண்டிக்க நான் சென்றிருந்தேன். அப்பொழுது என் தலையில் மயிர் இருந்தது. அவள் என்னைப் பார்த்து “பித்தம் பிடித்த முட்டாளே” என்றாள். நான், “ஸ்திரீயே, நீ அவ்விதம் என்னைத் திட்டக் கூடாது. ஓ, உனக்கு தேவபயம் இல்லையா?” என்று கேட்டேன். அவளோ, “பித்தம் பிடித்த முட்டாளே, அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து என்னிடம் யாராவது பேசவேண்டுமென்று நான் விரும்பினால், உன்னைப் போன்ற பைத்தியக்காரனை அழைக்க மாட்டேன்” என்றாள். “ஹூ!” அவள் என்னை எல்லாவிதமான அவதூறான பெயராலும் அழைத்தாள். ஓ, என்னே, அது மாத்திரம் ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்திருந்தால்! “ஒரு ஸ்திரீயை அடிக்கும் மனிதன், ஒரு மனிதனை அடிக்கக் கூடிய ஆண்மைத்தனம் கொண்டவன் அல்ல” என்று நான் அடிக்கடி கூறுவது வழக்கம். ஆனால் என் தாயாரை அவதூறான பெயரால் அழைத்த போது, அந்த வாக்கை நான் மீறியிருப்பேன். ஆனால் என்ன நடந்தது தெரியுமா? அது என்னை சிறிதும் கோபப்படுத்தவில்லை. நான், “உனக்காக ஜெபிக்கிறேன்” என்று சொன்னேன். அது தொல்லைப் படுத்தவேயில்லை. எனக்கு என்னமோ நடந்துள்ளதென்று நான் அந்த நேரத்தில் அறிந்து கொண்டேன். ஆம், ஐயா! ஓ, என்னே! நான் சிறுவனாயிருந்த போது, சண்டையிட்டதனால் செய்த தீங்குகள் உங்களுக்குத் தெரியுமா? ஒரே நேரத்தில் நான் ஐந்து மனிதர்களை ஏறக்குறைய கொன்று விட்டேன். பதினாறு குண்டுகள் நிறைத்திருந்த ஒரு துப்பாக்கியை நான் கையிலெடுத்து நான் கென்டக்கி நாட்டைச் சேர்ந்தவன்: என்றகாரணத்தால் அந்த பையன்கள் என்னை அடித்த போது, வேறு எத்த காரணத்துக்காகவும் அல்ல.... என் தலையை எனால்நிமிர்த்தவும் கூட முடியவில்லை. ஒரு பையன் என் கைகளை இப்படி பிடித்துக் கொள்வான், மற்றொரு பையன் கையில் ஒரு கல்லை வைத்துக் கொண்டு நான் ஜீவனற்று போகும் வரை என் முகத்தில் குத்துவான். இவ்வுலகில் வேறெதுவுமே... 64அவர்கள் என்னை “கென்டக்கி ஸ்வாப் (swab)”என்று அழைத்தார்கள். ஏனெனில் என் தாயார் வாலிபமாயிருந்த போது சிகப்பு இந்தியரைப் போல் காணப்பட்டார்கள் (சற்று முன்பு நான் அவர்களுடைய புகைப்படத்தை நோக்கிக் கொண்டிருந்தேன்), அவர்கள் பாதி சிகப்பு இந்தியர் என்று அந்த பையன்கள் அறிந்திருந்தனர். நான் கென்டக்கியை சேர்ந்தவனாயிருந்து என் தாயார் சிகப்பு இந்தியராக (skaw) இருந்த காரணத்தால் அவர்கள் என்னை “கென்டக்கி ஸ்வாப்” என்று அழைத்தனர். அதற்கு நான் பொறுப்பாளியே அல்ல. நான் கென்டக்கியில் பிறந்தது என் தவறல்ல. நான் பள்ளிக்கூடத்துக்குச் சென்றபோது எனக்கு உடுக்க 'துணிகளே இருக்கவில்லை. என் தாயார், தந்தை விவாகத்தின் போது உடுத்த அவருடைய பழைய 'கோட்டை எடுத்து அதை வெட்டி, எனக்கு கால் சட்டை தைத்துக் கொடுத்தார்கள், நான் பள்ளிக்கு முதன்முதலாக சென்ற போது அதை அணிந்து கொள்ள. நான்... என் தாயார் எனக்கு வெள்ளை நிறக்காலுறையை அணிவித்து அதன் மேல் டென்னிஸ் காலணிகளை அணிவிப்பது வழக்கம். இந்த பையன்கள் என்னை நோக்கி, “உன்னை பார்த்தால் பயித்தியக்கார கென்டக்கி நாட்டான் போல் இருக்கவில்லையா?” என்று கேலி செய்வார்கள். இது நான் பள்ளிக்கூடத்தில் இருந்த நாட்கள் முழுவதும் நடந்து வந்தது. 65ஓரிரண்டு பையன்கள், நான் சாலையில் ஏதோ ஒரு சிறு பெண்ணுடன் அவளுடைய புத்தகங்களை தூக்கிக் கொண்டு நடந்து சென்ற காரணத்தால்... அவ்விதம் நான் செய்வது அவர்களுக்கு பிரியமில்லை, அவர்கள் என்னை அங்கு சந்தித்து, நான் நினை விழந்து போகும் வரைக்கும் என்னை அடித்தார்கள். அவர்கள் என்னைப் போகவிட்டால். நான் நேராக வீட்டுக்கு போய்விடுவேன் என்று அவர்களுக்கு வாக்கு கொடுத்தேன். எனவே அவர்கள் என்னை போகவிட்டு, எனக்கு நான்கைந்து உதைகள் கொடுத்து, என்னைக் குத்திக் கீழே வீழ்த்தி, என் முகம் முழுவதும் குத்தினார்கள். நான் அடிபட்டவனாக வயலின் வழியாக அந்த நிலையில் வீடு திரும்பினேன். என்னிடம் .22 வின்சென்ஸ்டர் துப்பாக்கி இருந்தது, அது கதவண்டையில் வைக்கப்பட்டிருந்தது. நான் தோட்டாக்களால் நிறைக்கப்பட்டிருந்த அந்த துப்பாக்கியை என் கையிலெடுத்துக் கொண்டு, புதரின் வழியாக சென்று, சாலையின் பக்கத்தில் ஒளிந்திருந்து, இந்த ஐந்தாறு பையன்கள் வருவதற்காக காத்திருநதேன். அவர்கள், “அந்த கென்டக்கி நாட்டான் இப்பொழுது முதற்கொண்டு அவன் நிலை என்னவென்பதை உணருவான்” என்று பேசிக் கொண்டே வந்தனர். 66நான் துப்பாக்கியின் மேல் கம்பியை (hammer) பின்னால் இழுத்து, ஒளிந்த இடத்திலிருந்து வெளி வந்து, “உங்களில் யார் முதலில் இறக்க விரும்புவது, அப்பொழுது நீங்கள் மற்றவர்களை கவனிக்க மாட்டீர்கள்” என்றேன். அவர்கள் அலறத் தொடங்கினர். நான், “அலறாதீர்கள், நீங்கள் ஒருவர் பின் ஒருவர்ராக எல்லாரும் சாகப் போகிறீர்கள்” என்றேன். அதை நான் உண்மையில் செய்ய வேண்டுமென்று நினைத்தேன். நான் மேல் கம்பியை இழுத்து சுட்டேன். துப்பாக்கியிலிருந்த குண்டு வெடித்தது. நான் வேறொரு தோட்டாவை உள்ளே போட்டு சுட்டேன். அதுவும் வெடித்தது. இப்படியாக பதினாறு தோட்டாக்களை நான் தரையை நோக்கி சுட்டேன். அவை ஒவ்வொன்றும் வெடித்தன. அந்த பையன்கள் அலறிக் கொண்டு ஓடி, மலையின் மேல் ஏறி ஓடினார்கள். அவர்கள் போன பிறகு அங்கு நான் நின்றேன். எனக்கு அதிக கோபம் வந்தால், நான் அழமாட்டேன், ஒரு முட்டாளைப் போல் சிரிப்பேன், அப்பொழுது என் கண்களிலிருந்து கண்ணீர் வடியும். இப்பொழுது, அது ஒரு கோபாவேசம். தேவன் இல்லாமல் போயிருந்தால், நான் கொலைகாரனாகியிருப்பேன். அந்த தோட்டாக்களை நான் பொறுக்கி அவைகளை துப்பாக்கியில் நிறைத்து, “பௌ, பௌ'. அவை முன்னைப் போல் நன்றாக வெடித்தன. கிருபையைக் குறித்து பேசினால், இதுதான் கிருபை! 67ஆயிரம் வருட அரசாட்சியின் போது புத்தியில்லாத கன்னிகைகள் எங்கிருப்பார்கள்? ஆயிரம் வருட அரசாட்சியின் போது, அவர்கள் கல்லறையில் இருப்பார்கள். “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை” (வெளி. 20:5). 68மோசே இஸ்ரவேல் புத்திரரை நடத்திக் கொண்டு போன போது இருந்தது போல், இப்பொழுதும் மணவாட்டி, ஒன்று கூடி வாழ ஒரு இடம் இருக்கிறதா, அல்லது இனிமேல் இருக்குமா? இந்த கேள்விக்கு நான் உங்களுக்கு விடையளிக்கப் போகிறேன்; இப்பொழுது தான் எனக்கு அது வெளிப்படுத்தப் பட்டது. நான் உங்களுக்கு உண்மையைக் கூறப் போகிறேன். ஆம், ஐயா! மணவாட்டி அனைவரும் ஒன்று கூடுவதற்கு ஒரு இடம் உண்டு. அது எங்குள்ளது என்று அறிய விரும்புகிறீர்களா? கிறிஸ்துவில். மிகவும் சரி. அங்கு ஒன்று கூடுங்கள்; நாமெல்லாரும் ஒன்று கூடினவர்களாய் இருக்கிறோம். 69ஸ்திரீகளின் உடையைக் குறித்து நாம் இவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டாக்குவதற்கு காரணமென்ன? (ஓ, ஓ, இது எனக்கு சூடு கொடுக்கிறது. இல்லையா?) ஸ்திரீகளின் உடைகளைக் குறித்தும் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வதைக் குறித்தும்? மனிதனின் தலைமயிரைக் குறித்தும் அவன் உடை உடுக்கும் விதத்தைக் குறித்தும் ஒன்றும் சொல்லப்படுகிறதில்லையே? நல்லது. சகோதரியே. நான் உன்னிடம் ஒரு காரியத்தைக் குறித்து இணங்கப் போகிறேன். முதலாவதாக ஒரு மனிதனுக்கு நீண்ட தலைமயிர் இருக்கக் கூடாதென்று வேதம் உரைக்கிறது. அவன் நீண்ட தலைமயிரை வைத்திருந்தால். நான் உன்னிடம் கூறுவது போலவே அவனிடமும் கூறுவேன். அவன் அவ்விதம் செய்தால் தவறு . ஆனால் மனிதரில் பெரும்பாலோருக்கு, அவர்களில் பலருக்கு எனக்கு தலைமயிர் ஒன்றும் இல்லாதது போல, அவர்களுக்கும் இருப்பதில்லை. ஆனால் மனிதரில் பெரும்பாலோர் தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, மனிதரைப் போல் காட்சியளிக்கின்றனர். இப்பொழுது, அவர்கள் அவ்விதம் செய்யாமல் போனால், அவர்கள் பெண்களைப் போல் தலைமயிரை வளர விடக் கூடாது என்று அவர்களிடம் கூறப்படும். நாம் விவாகமும் விவாகரத்தும் என்பதைக் குறித்து பிரசங்கிக்கும் போது, உனக்கு இதைக் குறித்த விவரணம் எல்லாம் கிடைக்கும். 70109, இப்பொழுது, ஒரு மனிதன், முதலாவதாக, ஒரு மனிதனின் உடல் ஒரு ஸ்திரீயின் உடலைப் போல். கவர்ச்சிக்குரியதல்ல. இப்பொழுது மனிதன், முடி வளர்ந்த தன் பெரிய கால்கள், முட்டித் தட்டும் கால்கள், பானை போன்ற தொந்தி போன்றவைகளைக் கொண்டவனாய் காண்பதற்கு பயங்கரமாயிருக்கிறான். கவரப்படுவதற்கு அவனிடத்தில் ஒன்றுமில்லை. ஒரு மனிதன் வாலிபனானாலும் வயோதிபனானாலும், இந்த பிக்கினிக்களை அரிந்து கொண்டு, சாலையில் நடந்து செல்லும் போது. அதுதான் நான் இதுவரை கண்டிராத மிகவும் அருவருப்பான காட்சி என்பது என் கருத்து. அப்படி செய்யும் ஒரு மனிதன், அவன் எந்த வர்க்கத்தை சேர்ந்தவன் என்பதை அறியாமலிருக்கிறான் என்று 'எண்ணுகிறேன் (பாருங்கள்? அது உண்மை). 71உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்க இராணுவம் அவ்விதமாக உடுக்கப் போகிறதென்று சில மாதங்களுக்கு முன்பு கேள்விப்பட்டேன். அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ இராணுவம் அந்த விதமாக வெளி வரப் போகிறது, எல்லோரும் குட்டை கால் சட்டைகள் அணிந்து, நமக்கு எவ்வளவு பெரிய பெண்மைத்தனம் கொண்ட கூட்டம் உள்ளது! தேவன் மனிதனை, மனிதனைப் போல் காணப்படவும், மனிதனைப் போல் நடந்து கொள்ளவும், மனிதனைப் போல் உடுத்திக் கொள்ளவதற்காகவே படைத்தார். அவ்வாறே அவர் ஸ்திரீயை, ஸ்திரீயைப் போல் நடந்து கொள்ளவும், ஸ்திரீயைப் போல் இருப்பதற்காகவுமே படைத்தார். இன்று காலையில் மனிதனைக் குறித்த கேள்வி எழுந்த போது ... (ஒலிநாடாவின் முதல் பாகம் முற்று பெறாமல் முடிந்து இரண்டாம் பாகம் நடுவில் தொடங்குகிறது - ஆசி)... அவனுக்கு விருப்பமானால்... 72112, ஒரு ஸ்திரீக்கு மெலிந்த தலை மயிர் இருந்து அவள் அந்த 'எலிகளில்' ஒன்றை அணிந்து கொள்ள விரும்பினால், அல்லது அதை நீங்கள் எவ்விதமாக அழைத்தாலும், நான் நினைக்கிறேன் அது ... என் மனைவி அதை அணிந்து கொள்கிறாள். அது ஒரு... அவளுடைய தலைமயிர் மெலிந்துள்ளதாக அவள் கூறுகிறாள், அவளிடம் ஏதோ வட்டமான ஒன்றுள்ளது. அது ஒரு பெரிய, சாதாரண அளவை விட பெரிதான பிஸ்கோத்து போல் காணப்படுகிறது. அவள் தன் தலைமயிரை அதில் சுற்றிக் கொண்டு கொண்டை ஊசிகளை குத்திக் கொள்கிறாள். இப்பொழுது — என்னப் பொறுத்த வரையில் உங்கள் தலைமயிர் நீளமாயுள்ள வரைக்கும் அதனால் எவ்வித பாதகமுமில்லை. ஒரு போதகர், தன் மனைவியின் தலைமயிர் சாயம் பூசப்பட்டுள்ளதனால், அவள் குற்றம் புரிந்துள்ளதாக கூறினார். ஒரு கேள்வியிலிருந்து நான், அது தலைமயிருக்கு வர்ணம் பூசுவது அல்லது சாயமிடுவது என்பதைக் கண்டு கொண்டேன். அது தவறென்று என்னால் கூற இயலாது; அதைக் குறித்து எனக்கு ஒன்றுமில்லை. அவளுக்கு. நீண்ட தலைமயிர் இருக்குமானால், அவ்வளவு தான் என்னால் அதைக் குறித்து கூற முடியும். 73இப்பொழுது, ஒரு மனிதன்... இன்று காலையில் ஒருவர் தலைமயிரை எடுத்து விடுவதும், அதன் பிறகு போட்டுக் கொள்வதையும் குறித்து கேட்டிருந்தார். இப்பொழுது. தலை மயிரைக் கத்தரித்துக் கொள்வதையும் குறித்தும் இங்கு கேட்கப் பட்டுள்ளது. பாருங்கள்? இப்பொழுது, ஒரு மனிதனுக்கு தலைமயிர்' இல்லாமல், அவனுடைய மனைவி... ஸ்திரீகள், “நல்லது. நான் மாத்திரம் ஜானிடம். ... அவர் ஒரு தலைமயிர் துண்டை அணிந்து கொண்டால் அவர் காண்பதற்கு நன்றாயிருப்பார். அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், சகோ. பிரான்ஹாமே? அவ்விதம் அவர் செய்வது தவறா?” என்று கூறுவதை நான் கேட்டதுண்டு. இல்லை, ஐயா! இல்லவே இல்லை. அது தவறல்ல. அவர் அதை அணிந்து கொள்ள விரும்புவாரானால், அதனால் பாதகமில்லை, அதற்கும் செயற்கை பல் அணிந்து கொள்வதற்கும் வித்தியாசம் எதுவுமில்லை. 74கூறப் போனால், நான் மூன்று செயற்கை பற்களை வைத்திருக்கிறேன். அவை இல்லாமலிருந்தால் நலமாயிருக்கும். அவை ஒரு கம்பியினால் கட்டப்பட்டுள்ளன; அது என் சத்தத்தைக் குறைத்தும், என் நாவை அறுத்து விடவும் செய்கிறது. ஆனால் ஆகாரம் உண்பதற்கு அவை எனக்கு அவசியமாயுள்ளன. நான் வெளிநாடுகளில் கூட்டங்கள் நடத்தும்போது, ஒரு தலைமயிர் துண்டை அணிந்து கொள்கிறேன், நன்றாக காணப்பட வேண்டும் என்பதற்காக அல்ல, ஏனெனில் நான் இங்கு நின்று கொண்டு என் தலையின் மேல் தலை மயிர் துண்டு இருந்தாலும் இல்லாமல் போனாலும், அது எனக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காதென்று உங்களுக்குத் தெரியும். நான் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாகவே இங்கு இருக்கிறேன். ஆனால் வெப்ப புயல்களில் ஒன்றில் நான் முதல் இரவு அங்கு நிற்பேன் என்றால், அடுத்த நாள் இரவு என் தொண்டை கரகரப்பாகி என்னால் அங்கு செல்ல முடிவதில்லை. 75எனவே, அதை நான் செய்ய வேண்டுமென்று விரும்பி, அதை செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றினால், அதை நான் செய்வேன். ஆம், ஐயா! அதை செய்ய வேண்டாமென்று ஒன்றுமே கூறுவதில்லை. சகோதரியே, நீங்கள் 'எலி'யையோ, கொண்டையையோ, அல்லது சவரிமயிரையோ, அல்லது வேறெதாவதையோ உபயோகிக்க கூடாதென்று எந்த ஒன்றுமே கூற வில்லை. அது முற்றிலும் சரி. ஆனால் உங்கள் தலைமயிர் நீளமாயிருக்கட்டும். மனிதரே, உங்கள் தலைமயிரை கத்தரித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உள்ள தலைமயிரை கத்தரித்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? அத்துடன் அது முடிவு பெறுகிறது. ஸ்திரீகளே, நீங்கள் ஸ்திரீகளைப் போல் உடை அணியுங்கள். மனிதரே, நீங்கள் மனிதரைப் போல் உடை அணியுங்கள். நீங்கள் பெண்மைத்தனம் கொண்டவர்களாய் பெண்களின் உடைகளை அணியாதீர்கள். ஸ்திரீகளே, நீங்கள் ஆண்மைத்தனம் கொண்டு, ஆண்களின் உடைகளை அணியாதீர்கள், ஏனெனில் நீங்கள் அவ்விதம் செய்வது தேவனுக்கு விருப்பமில்லை; வேதம் அதைக் கண்டிருக்கிறது. ஆனால், ஒரு தலைமயிர் துண்டு அல்லது வேறெதாவது தலைமயிர் அணியும் விஷயத்தில்... நல்லது, அந்த “எலிகள்” என்பது என்ன? அல்லது சற்று முன்பு அதை தவறாகக் கூறி விட்டேனோ. அல்லது அதன் பெயர் “சுண்டெலியா? அது ஒரு ஸ்திரீ தன். தலைமயிரை அடர்த்தியாக்கிக் கொள்ள அதற்குள் வைக்கும் ஒன்றாகும். அதன் பெயர் என்னவானாலும் (பாருங்கள்?), அதனால் தவறொன்றுமில்லை. அதை தொடர்ந்து செய்யுங்கள், அது பரவாயில்லை. 76சகோ. பிரான்ஹாமே, எண்ணூறு மைல் தொலைவிலிருந்து ஒரு சகோதரி கூடாரத்துக்கு வந்திருந்தாள், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் அவதாரம், என்று அவள் விசுவாசிப்பதாகக் கூறினாள். தயவு செய்து இதைக் குறித்து பேசவும். அவளுடைய கருத்தை மற்றவர்களிடம் எடுத்துக் கூற அவள் அவசரப்பட்டாள்... சரி. இப்பொழுது, அந்த சகோதரி தவறு என்பது உறுதி. நான் இயேசு கிறிஸ்து அல்ல. நான் அவருடைய ஊழியக்காரன், இதைக் குறித்து நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால்... ஓ, இதை முடிப்பதற்கு நான் மிக அருகில் வந்து விட்டேன். எனக்காக ஜெபியுங்கள், இன்னும் சிறிது நேரம். 77சகோ. பிரான்ஹாமே... (மற்றவைகளை கேட்க உங்களுக்கு விருப்பமா - என்னால் முடிந்த வரையில் விரைவாக) சகோ. பிரான்ஹாமே, ஒரு சமயம் தேவன் எனக்கு சாராளுக்கு அருளியது போல், ஒரு வாக்குத்தத்ததை அளித்தார் என்று உணர்ந்தேன். அதைக் குறித்த ஒரு கேள்வி எனக்கிருந்தது. அந்த வாக்குத்தத்தம் பிறகு வந்தது. அது தேவனிடத்திலிருந்த வந்த வாக்குத்தத்தமா? சாராள் பெற்ற வாக்குத்தத்தம் தேவனிடத்திலிருந்து வந்ததென்று அறிவேன், ஆனால் காலம் மிகவும் குறுகியுள்ளது என்று உணருகிறேன். நாங்கள் உங்கள் ஊழியத்தையும் உங்களை: ஊழியத்திற்கு அழைத்தவரையும் நேசிக்கிறோம் (அது மிகவும் இனிமையானது இல்லையா?) உங்கள் ஊழியத்தையும் உங்களை ஊழியத்திற்கு அழைத்தவரையும் நேசிக்கிறோம். ஆகையால் உங்களையும், நாங்கள் நேசிக்கிறோம். ஓ, அவர்கள் தங்கள் பெயரைக் கையொப்பமிட்டுள்ளனர். நன்றி, சகோதரி சகோதரனே. ஒரு கேள்வி, ஆம், ஆம், சரி. இப்பொழுது, தேவன். அவர் உங்களுக்கு வாக்குத்தத்தத்தை அளித்தார் என்று நினைக்கிறேன், அது சாராளைப் போல் நிறைவேறும். நிச்சயமாக, அவர் அதே தேவன்; அவர் அதே விதமாக பதிலளிக்கிறவர். அது தேவனிடத்திலிருந்து, வந்தது என்பதைத் தவிர வேறெதையும் விசுவாசிக்காதீர்கள். சகோ. பிரான்ஹமே, வேதத்தைக் குறித்த சில கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். தயவு கூர்ந்து பரி. மாற்கு...விளக்கவும். அதை ஏற்கனவே விளக்கி விட்டேன், அதை ஏற்கனவே கூறிவிட்டேன், பார். மாற்கு 16. அன்றொரு நாள் அதை நாம் பார்த்தோம். எனக்கு ஞாபகமுள்ளது, நாம் தொடர்ந்து பார்ப்போம். 78அன்பு. சகோ. பிரான்ஹாமே, பரி. மத்தேயு -22ம் அதிகாரம். (இதையும் நாம் பார்த்து விட்டோம். உங்களுக்கு ஞாபகமுள்ளதா, அன்றொரு நாள்? அதை உங்களுக்கு காண்பிக்கிறேன். நான் ... இங்கு பாருங்கள்?)... வஸ்திரம் தரித்து, ஆனால் கலியாணவஸ்திரம் தரிக்காதவனாய் இந்த விருந்தாளி எவ்விதம் கலியாண விருந்துக்கள் நுழைய முடிந்தது? ஞாபகமுள்ளதா, நான் கூறினேன். நான் 'ஜோக்' அடித்தேன். அதாவது, “வாசல் வழியாக நுழையாமல் ஜன்னலின் வழியாக உள்ளே வந்த ஸ்தாபன சகோதரன்” என்று நான் கூறினேன். வாசல் என்பது வார்த்தை. காயீன் சர்ப்பத்தின் வித்து என்று நீங்கள் கூறினீர்கள். அப்படியானால் ஏவாள் “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” என்று கூறக்காரணம் என்ன? இந்த கேள்வியைத் தான் நான் காலையில் தேடிக்கொண்டிருதேன். அதற்கான வேதவசனங்களை இங்கு நான் எழுதி வைத்திருக்கிறேன். இங்கு நான் திரும்பவும் படிக்கிறேன். நான் நினைக்கிறேன். இங்கு சிலவற்றை கண்டு பிடித்து... சகோ. பிரான்ஹாமே, வழிபாட்டில் கத்தோலிக்கனாக வளர்க்கப்பட்ட என் கணவர், அவருடைய வழியில் ஜெபிக்க விரும்புகிறார்... இதற்கு நான் பதில் கூறி விட்டேன். ஞாபகமுள்ளதா? ஓ, இவை மறுபடியும் வருகின்றன. அதற்கு நான் பதில் கூறி விட்டேன். சகோ. பிரான்ஹாமே, நான் முடிவில்... என் சகோதரிக்கு ஊக்கமூட்டம் அதற்கு பதில் கூறிவிட்டேன். ஒரு ஸ்திரீக்கு கத்தோலிக்க சகோதரி ஒருத்தி இருக்கிறாள். சகோ. பிரான்ஹாமே, 2 தீமோத்தேயு 4ம் அதிகாரத்தில், அளிக்கப்பட்ட வரம்... அதை நாம் பார்த்து விட்டோம். எத்தனை பேருக்கு ஞாபகமுள்ளது? பதில் கூறப்பட்ட கேள்விகள் இங்கு கலந்து விட்டன. பாருங்கள்? 79எந்த விதமான... உபயோகிப்பது நியாயமானதா? அது கருத்தடையைக் குறித்த கேள்வி. இன்று காலையில் நான் கூறினது போல், உங்களிடம் இதைக் குறித்து நான் தனியாக பேசட்டும். முதலாவதாக, அந்த ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளும் இரட்சிக்கப்படுவார்களா... அதையும் நான் பார்த்து விட்டேன். நான் படித்ததையே திரும்ப படிக்கிறேன். ஒரு நிமிடம், என்னுடன் பொறுமையாயிருங்கள். வழியை அறிந்து கொண்ட பிறகு, மனந்திரும்புதல் பரிசுத்தமாகுதல் என்பவைகளுக்கான வழியை மட்டுமாவது அறிந்து கொண்ட பிறகு (அதை நாம் பார்த்து விட்டோம், உங்களுக்கு ஞாபகமுள்ளதா?), அவர்கள் அதிலிருந்து விழுந்து போவார்களானால்... இந்த கேள்வியையும் நாம் பார்த்து விட்டோம். நான் ஒரளவுக்கு படித்த கேள்விகளை திரும்பவும் படிப்பதை முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். நான் இவைகளை... சகோ. பிரான்ஹாமே, பிணம் எங்கேயோ அங்கே கழுகள் வந்து கூடும்“ என்று மத். 24:28ல் கூறப்பட்டதன் அர்த்தம் என்ன? அதை 'நான் விளக்கினது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? பாருங்கள்? அதற்கு நான் பதில் கூறி விட்டேன். படித்த கேள்விகளை திரும்ப படிப்பதை முடித்து விட்டேன் என்று நினைக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! எடுத்துக்கொள்ளப்படுதலுக்கென்று மணவாட்டி உம்மோடு கூட இருப்பதற்கான நேரம் வந்து விட்டதா? (இப்பொழுது, இந்த கேள்விக்கும் நான் பதில் கூறிவிட்டேன்). ஒருக்கால் நான்... இதற்கு நான் பதில் கூறி விட்டேன் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் அதற்கு அடையாளமாக கீழே ஒரு கோடு போடப்பட்டுள்ளது. எனக்கு ஞாபகமுள்ளது. நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நாம் வரிசைக் கிரமமாக கீழே வந்து கொண்டேயிருக்கிறோம். இப்பொழுது பார்ப்போம். 80அப்போஸ்தலர் 2:38 மட்டுமே ஞானஸ்நானம் பெறுவதற்கு ஒரே முறையானால், திரளான ஜனங்களைக் குறித்தென்ன...? அதற்கு நான் பதில் கூறி விட்டேன். அவர்களுடைய நாட்களில் அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை; இப்பொழுது தான் அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் அறிந்த பின்பும், “செம்மையானதை செய்ய அறிந்திருந்தும், ஒருவன் அதை செய்யானாகில், அது அவனுக்கு பாவமாயிருக்கும். 81சகோ. பிரான்ஹாமே, புகையிலை வளர்ப்பதும் அதில் வேலை செய்வதும் தவறா? இதற்கு நான் பதில் கூறவில்லை என்று நினைக்கிறேன். இப்பொழுது நான் புகையிலைக்கு எதிராயிருக்கிறேன். புகையிலை உபயோகிப்பதற்கு நான் விரோதமாயிருக்கிறேன்; மறுபடியும் பிறந்த எந்த கிறிஸ்தவனும் அப்படித்தான் இருப்பான்; அவ்வளவு தான், ஏனெனில் அது தவறு. மருத்துவ விஞ்ஞானமும் கூட, புகையிலை தான் தொண்டை மற்றும் நுரையீரல் புற்று நோய்க்கு காரணம் என்று கூறுகிறதென்று நாம் அறிந்திருக்கிறோம். அவர்கள் “வடிகட்டப்பட்ட சிகரெட்டுகளை புகையுங்கள்” என்கின்றனர். இப்பொழுது, புகை பிடிக்கும் மனிதரே ஸ்திரீகளே, அது உங்களை ஏமாற்றும் ஒன்று ஏனெனில் உங்களால்... நல்லது. அவர்கள் செய்கின்ற ஒரே காரியம்... நீங்கள் வடிகட்டப்பட்ட சிகரெட்டுகளை வாங்கும் போது, அவைகளை நீங்கள் அதிகமாக வாங்க - வேண்டும், ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் புகையைத் தான் அது உள்ளே அனுமதிக்கிறது. ஏனெனில் எவரும் உங்களிடம் கூறுவார்கள். 82சென்ற ஆண்டில் வாஷிங்டனில் நடந்த உலக சந்தையில் (நான் உலக சந்தைக்கு சென்றிருந்த போது), இதைக் குறித்த ஒரு விரிவுரையை நான் கேட்க நேர்ந்தது. உலகின் பல் வேறு பாகங்களிலிருந்து வந்திருந்த மருத்துவர்கள் அதை விளக்கினர்; 'தார்' (tar)இல்லாத புகை இருக்க முடியாது என்று அவர்கள் கூறினர், உங்களால்... உங்களுக்கு புகை இருந்தால் உங்களுக்கு 'தாரும்' கூட இருக்கும். அவர்கள், “வடிகட்டப்பட்ட சிகரெட்டுகளின் விஷயத்தில் யாரும் உங்களை ஏமாற்றாதபடிக்கு ஜாக்கிரதையாயிருங்கள், ஏனெனில் சிகரெட் பிடிக்கும் திருப்தி உங்களுக்கு தேவையானால், சாதாரண சிகரெட் ஒன்று புகைப்பதற்கு பதிலாக, இரண்டு அல்லது மூன்று வடிகட்டப்பட்ட சிகரெட்டுகளை நீங்கள் புகைக்க வேண்டும்” என்றனர். அது பொது ஜனங்களை ஏமாற்றும் ஒரு சூழ்ச்சி, வானொலியிலும் தொலை பேசியிலும் கூறப்படும் ஏமாற்றக்கூடிய ஒரு தகவல். 83ஆனால், புகையிலை ஸ்தலத்தில் பணி புரிவதும், புகையிலை பயிரிடுவதுமான விஷயத்தில். இந்த புகையிலையைப் பயிரிடும் கென்டக்கி சகோதரராகிய நீங்கள்... நல்லது. ஒரு காரியத்தை உங்களுக்கு கூற விரும்புகிறேன். நீங்கள் அவ்விதம் செய்வது உங்களைக் குற்றப்படுத்துமானால், அதை செய்யாதீர்கள், ஏனெனில் யாரையும் மரணத்துக்கு கொண்டு செல்லும் என்று நான் அறிந்துள்ள எந்த ஒரு காரியத்தையும் நான் செய்ய விரும்ப மாட்டேன். என் அயலானுக்கு போதை உண்டாக்கும் குடியைக் கொடுப்பது தவறானால், அந்த குடியை உண்டாக்குவதும் தவறாகும். ஆனால் வேறொன்றை நான் கூற விரும்புகிறேன். இப்பொழுது, அதை பயிரிடும் விஷயத்தில்... புகையிலையிலுள்ள நிகோடின் மருத்துவத்திலும் உபயோகப்படுத்தப்படுகிறதென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் பயிரிடும் சோளம், கோதுமை, பார்லி' இவைகளிலிருந்து விஸ்கி தயாரிக்கப்படுகிறதென்று உங்களுக்குத் தெரியுமா? அது சரிதானா? சரி. பாருங்கள்? அதை எதற்காக உபயோகப்படுத்தப் போகிறார்களென்று உங்களுக்குத் தெரியாது. 84ஆனால் இப்பொழுது, நாம் சோளம் பயிரிடுகிறோம், நாம் சோளம் பயிரிடும் போது, அது சோளச் சீவல் (cornflakes) செய்யவும், ஜனங்களுக்கு ஆகாரமாயிருக்கவும், சோள ரொட்டி செய்யவும் பயன்படுத்தப்படுகிறதென்று நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் அதிலிருந்து போதை தரும் மதுவையும் தயாரிக்கின்றனர் (பாருங்கள்?), எனவே உங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் லீலிப் புஷ்பம் வளர்த்து லீலிப் புஷ்பம் தோட்டத்தை வைத்திருக்கிறீர்கள். அவர்கள் லீலிப் புஷ்பத்தைக் கொண்டு என்ன செய்கின்றனர் தெரியுமா? அவர்கள் அதிலிருந்து அபினி என்றும் லாகிரி வஸ்துவை தயாரிக்கின்றனர். அவர்கள் 'லெட்டூஸ்' கீரையைக் கொண்டு என்ன செய்கின்றனர் தெரியுமா? அவர்கள் அதே காரியத்தையே செய்கின்றனர். அபினி 'லெட்டூஸ்' கீரையிலும் உள்ளது. நீங்கள் 'லெட்டூஸ்' கீரையை தின்றுவிட்ட பிறகு சற்று நேரம் அமைதியான உணர்வைக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதிலுள்ள அபின் தான் அதற்கு காரணம். வெங்காயத்திலும் அது உள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா? நிச்சயமாக, எனவே எதற்காக நீங்கள் அதைச் செய்கிறீர்கள் என்பதை அது பொறுத்தது. ஆனால் ஒரு கிறிஸ்தவ சகோதரன் மற்றொரு கிறிஸ்தவ சகோதரனுக்கு ஆலோசனை கூறும் வகையில் இதை கூற முற்படுகிறேன்; உங்களுக்கு புகையிலை தோட்டம் இருக்குமானால், அதை வேறெவருக்காவது விற்று விட்டு, சோளம் பயிரிட நோக்குங்கள். அது நல்லதாயிருக்கும் என்று நினைக்கிறேன், (பாருங்கள்?) ஏனெனில் சந்தேகமின்றி, அவர்கள் பயிரிடும் அதை ... என் கணவர் குடிகாரியான விபச்சாரி ஒருத்தியை விவாகம் செய்திருந்தார்... அதற்கு நான் பதில் கூறி விட்டேன். அது எங்கிருந்து வந்ததென்று நான் உங்களிடம் கூறினேன். அது இங்கு தொலைவில் உள்ள ஒரு இடத்திலிருந்து. இந்த கேள்விக்கு பதில் கூறி விட்டேன். இப்பொழுது பார்ப்போம். வெளிப்படுத்தல் 12ம் அதிகாரத்தில் உரைக்கப்பட்டுள்ள ஸ்திரீ... இதற்கும் நான் பதில் கூறி விட்டேன். ஆம், இந்த மொத்தமான கேள்விகளுக்கு நான் பதில் கூறி முடித்து விட்டேன். அது வெளிப்படுத்தல் 12ம் அதிகாரத்தின் பேரில், அந்த ஸ்திரீ யாரென்று. நாம் பார்ப்போம். 85சகோ. பிரான்ஹாமே, ஒரு பெண் பிரசங்கியின் கட்டுக்குள் இருக்கும் ஒரு சபைக்கு என் இரண்டு பிள்ளைகளும் செல்கின்றனர். அவள் வார்த்தையை விட்டு விலகியிருக்கிறாள் என்று எங்களுக்குத் தெரியும். அவர்கள் இந்த வலுவான ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். அது தவறென்று நாங்கள் எவ்விதம் அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்? நான் முன்னமே உங்களுக்குக் கூறினேன். அதற்கு நான் பதில் கூறினேன். அதை மிருதுவாக கையாளுங்கள். நீங்கள் என்ன கூறுவீர்கள், நான்... அந்த நபர் இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதை நானறிவேன். அந்த ஸ்திரீ யாரென்று எனக்குத் தெரியுமென்று நான் உங்களிடம் கூறினால், நீங்கள் என்ன கூறுவீர்கள்? 86ஆயிரம் வருட அரசாட்சி ஆயிரம் ஆண்டு காலம் இருக்குமா அல்லது அது வெறும் ஒரு காலக் கணக்கா? இன்று காலையில் அதற்கு நான் பதில் கூறினேன். பாருங்கள்? அது ஆயிரம் ஆண்டுகள். சரி. சகோ. பிரான்ஹாமே, பிரச்சினை என்னவெனில்... - ஆம். அதற்கு நான் பதில் கூறிவிட்டேன். கோதுமையும் களைகளும். அதற்கு பதில் கூறினது உங்களுக்கு ஞாபகமிருக்கும். இப்பொழுது நாம் வரிசைக்கிரமமாக கீழே வந்து விட்டோம். இந்த கேள்விகளை நான் ஒருக்கால் மீண்டும் உறையில் போட்டிருக்கக் கூடும். நாம் பார்ப்போம். அதே காரியம். பிரான்ஹாமே, நான் ஆறு அருமையான பிள்ளைகளுக்குத் தாய், பண உதவி செய்வதற்காக என் கணவர் என்னை வேலைக்குச் செல்லும்படி கூறுகிறார். நான் போகலாமா? மேலும், ஆபிரகாம், தானியேல், எபிரேய பிள்ளைகள் ஆகியோருக்கு இருந்ததைப் போன்ற விசுவாசத்தை தேவன் எனக்கு அருளுமாறு எனக்காக ஜெபிக்கும்படி விரும்புகிறேன். ஒரு கிறிஸ்தவன் புகையிலை பயிரிடலாமா? இதற்கு நாம் பதில் கூறினோம்... 87சகோ. பிரான்ஹாமே, ஒரு ஸ்திரீ தன் கால்களை சவரம் பண்ணிக் கொள்வது தவறா? நான் காரியங்களைக் காண்கிறேனா? அது அவ்விதம் கூறுகிறதா? என்னால் கூற இயலாது. எனக்குத் தெரியாது. அதை நான் உன்னிடமே விட்டு விடப் போகிறேன். குடும்பத்தை அளவுக்கு உட்படுத்திக் கொள்வது தவறா? அது முழுவதுமாக குடும்பக் கட்டுப்பாடு என்பது அர்த்தமாகுமா? அதற்கு நான் பதில் கூறினேன் - ஒவ்வொரு தனிப் பட்ட நபருக்கும். நாம் பார்ப்போம். பாவத்தில் கிடக்கின்ற ஒரு ஸ்திரீ விவாகரத்து செய்து விட்டு மீண்டும் விவாகம் செய்து கொண்டால்... அதற்கு நான் பதில் கூறினேன். “விவாகரத்து விஷயங்களை தற்போது விட்டு விடுங்கள்” என்று நான் சொன்னது உங்களுக்கு ஞாபகமிருக்கும். 88எனக்கு ஒரு சிநேகிதி இருக்கிறாள், அவளை நான் அதிகமாக நேசிக்கிறேன். அவளிடம் சில ஒலிநாடாக்களும் கடிதங்களும் உள்ளன, நான் நினைக்கிறேன் அவை... அவளிடம் நான் இதைக் குறித்து பேசவில்லை. உண்மையைக் கூறினால், அவளுடைய நட்பை இழந்து விடுவேனோ என்று எனக்குபயமாயுள்ளதென்று எண்ணுகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? அவளிடம் அன்புடன் பேசு. நான்... அதற்கு நான் பதில் கூறினேன் என்று நினைக்கிறேன், ஆனால் நான் எதையும் யார் மேலும் திணிக்க முயல்வதில்லை. நீ உப்புத்தன்மை கொண்டவளாயிரு: அவர்கள் உன்னைப் போல் இருக்க விரும்புவார்கள். சகோதரனே, சகோதரியே, இதற்கு நான் பதில் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன். சகோ. பிரான்ஹாமே, ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளைக் குறித்து விளக்கம் தரவும். இதற்கு நான் பதில் கூறி விட்டேன் என்று எனக்குத் தெரியும். அது சிகப்பு தாளில் கையால் எழுதப்பட்டுள்ளது. நான் நினைக்கிறேன் நாம். இதற்கு நான பதில் கூறிவிட்டேன். இவையனைத்துக்கும் நான் பதில் கூறி விட்டேன் என்று எண்ணுகிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நாம் பார்ப்போம். ஒரு நிமிடம் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். 89அன்புள்ள தேவனுடைய தீர்க்கதரிசியே, பரி. மாற்கு 16:18, நான்... வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கும் ஒரு பாகமாக... நான் பாம்புகளைக் கையாளுகிறவர்களின் மத்தியில் இருக்கிறேன். அதைக் குறித்தென்ன? நல்லது. அது ஒரு நல்ல கேள்வி. நீங்கள் பாம்புகளைக் கையாளுகிறவர்களின் மத்தியில் இருந்து. அவர்கள் மாற்கு 16 என்று கூறுவார்களானால்... நிச்சயமாக! வேதம் என்ன கூறியுள்ளதோ, அதை அந்த அர்த்தத்தில் தான் கூறியுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நாம் தேவனை ஏதாவதொன்றில் பரீட்சை பார்க்க முற்பட்டால், நமக்கு தீங்கு உண்டாகும் என்பது என் கருத்து. ஒரு குப்பி ஆர்செனிக் விஷத்தை நீங்கள் என்னிடம் கொண்டு வந்து. அதை நான் குடித்து விட்டு எனக்கு விசுவாசம் உண்டென்பதை நிரூபிப்பதை நீங்கள் காண முடியுமா என்று தேவன் ஒரு போதும் சித்தம் கொண்டதில்லை; அதே விதமாக நீங்கள் ஒரு பாம்பை என்னிடம் கொண்டு வந்து. அதை நான் கையிலெடுத்து, விஷத்தை மேற்கொள்ள எனக்கு விசுவாசம் உண்டு என்று உங்களுக்குக் காண்பிப்பது தவறாகும். அது அவ்விதம் இல்லை என்று நான் நம்புகிறேன். நான் நம்புவது என்னவெனில், நான் தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுக்க நேர்ந்து, அல்லது கர்த்தருடைய ஊழியத்தை செய்து கொண்டிருக்கும் போது, அல்லது காடுகளுக்கு நான் சென்றுள்ள போது. பாம்பு என்னைக் கடிக்குமானால், நான் கர்த்தருடைய நாமத்தில் நடந்து சென்று கொண்டிருப்பேன். பாருங்கள்? அதுதான் அதன் அர்த்தம் என்று நான் நம்புகிறேன்: 90இப்பொழுது, நீங்கள் பாம்பைக் கையாள வேண்டுமானால்... அதைக் குறித்து என்ன செய்கிறீர்கள் என்று பாருங்கள், அருமை நபரே, அது யாராயிருந்தாலும்... இதை ஞாபகம் கொள்ளுங்கள். பாருங்கள். அதைக் குறித்து வேதம் என்ன செய்தது என்பதைக் கவனியுங்கள். நான் நம்பவில்லை, நீங்கள் “மகிமை, மகிமை, மகிமை” என்று கூறிக் கொண்டேயிருக்க முயன்றால்... அந்நிய பாஷையில் பேசுவதற்காக தேவனை பரீட்சை பாராதிருங்கள். ஆவியானவர் உங்கள் மூலம் பேச இடம் கொடுங்கள். பாருங்கள்? இப்பொழுது, தேவனை பரீட்சை பார்ப்பதில், அல்லது எதையும் உந்திப் பெற்றுக் கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் சற்று முன்பு கூறினது போல, ஆவியானவர். நாம் ஆவியானவருக்கு காத்திருக்கிறோம்; அவர் அதை செய்கிறார். 91இப்பொழுது கவனியுங்கள், பவுல் கிரேத்தாதீவில் விறகுகளை பொறுக்கிக் கொண்டிருந்தான், அது கிரேத்தா தீவு என்று தான் நினைக்கிறேன் (மெலித்தா தீவு - தமிழாக்கியோன்) அவன் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான், அப்பொழுது ஒரு பாம்பு, ஒருக்கால் அது 'மம்பா' என்னும் விஷப் பாம்பாக இருக்கக் கூடும். அது மரணக்கடி; அவன் உடனே கீழே விழுந்து மரித்திருக்க வேண்டும். மம்பாவைத் தவிர உடனே கொல்லக் கூடிய வேறெந்த பாம்பும் கிடையாது. எனவே அவன் இந்த மம்பாவை கையிலெடுத்தான் என்று நாம் வைத்துக் கொள்வோம். அது மரணத்தை விளைவிக்கும் கடி; அதன் பிறகு உங்களால் ஒரு சில மூச்சுகளே விடக் கூடும். மம்பா உங்களைக் கடிக்குமானால்...'அல்லது நாகப் பாம்பு, கறுப்பு நாகப் பாம்பு உங்களைக் கடிக்குமானால், அதற்கு ஊசி போட்டாலும், நீங்கள் உயிர் வாழ்வதற்கு ஐம்பது சதவிகிதம் வாய்ப்பே இருக்கும். மஞ்சள் நாகப் பாம்பு கடித்தால், நீங்கள் - இறந்து போக 80% வாய்ப்பும், உயிரோடிருக்க 20% வாய்ப்பும் இருக்கும். ஆனால் மகிபா கடித்தால், உயிரோடிருக்க எந்த சத விகித வாய்ப்பும் உங்களுக்கு கிடையாது. நீங்கள் இறந்து விடுவீர்கள், அவ்வளவுதான், ஏனெனில் அதன் பிறகு உங்களால் ஒரு சில மூச்சுகளே விட முடியும், அது உங்கள் நரம்புகளையும், இரத்தக் குழாய்களையும், மற்றெல்லாவற்றையும் இயங்காமல் செய்து விடுகிறது. நீங்கள் இறந்து விடுவீர்கள். பாருங்கள்? 92இந்த மம்பா பவுலைக் கையில் கவ்வின போது, அவர்கள் “இந்த மனிதன் துன்மார்க்கன், இவன் ஒருக்கால் கொலைக்காரனாயிருக்கக் கூடும். இவன் கடலில் உயிர் தப்பி வந்த போதிலும், இவனால் மரணத்திலிருந்து தப்ப முடியவில்லை. இவன் கொலைகாரனாதலால், தேவன் இவனைப் பழிவாங்குகிறார்” என்றனர். பவுல் நோக்கினான், இந்த பாம்பு அவனுடைய கையில் தொங்கிக் கொண்டிருந்து, அவன் அதை உதறி விட்டான். அவன் பயந்து போய், “ஓ, கர்த்தாவே, எனக்குதவி செய்யும்” என்று சொல்லவில்லை. இல்லை! அவன் அதை உற்று நோக்கி, அதை தீயில் உதறி விட்டு, ஒன்றுமே நடக்காதது போல் விறகுகளைத் தொடர்ந்து பொறுக்கிக் கொண்டிருந்தான். அவர்கள், “இவன் இன்னும் ஒரு நிமிடத்தில் இறந்து விடுவான். ஏனெனில் அந்த பாம்பு கடிக்குமானால், நீங்கள் இறந்து விடுவீர்கள்” என்றனர். நேரம் சிறிது கிடந்தது, பவுலுக்கு வீக்கம் எதுவும் ஏற்படவில்லை, அவன் மரிக்கவில்லை, அவனை அது பாதிக்கவேயில்லை. அவர்கள் உடனே தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு, “இவன் வானத்திலிருந்து மனித ரூபத்தில் இறங்கி வந்த தேவன்” என்றனர். அவன், “அந்த பாம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று சொல்லவில்லை. அந்த பாம்பு அவனை எதேச்சையாக கடித்தது. அவன் தேவனை பரீட்சை பார்க்கவில்லை, ஆனால் பாம்புக் கடியை மேற்கொள்ள அவனுக்கு. தேவனிடம் விசுவாசம் இருந்தது. நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா? 93எனவே பாம்புகளைக் கையாளுகிறவர்கள் மத்தியில் இருக்கிற நீங்கள் யாராயிருந்தாலும், நான்... இப்பொழுது, அவர்கள் பாம்புகளைக் கையாள விரும்பினால், அது அவர்களைப் பொறுத்தது. நான் அந்த விதத்தில் இதை காணவில்லை. இப்பொழுது, நீங்கள், “நல்லது, அந்த ஜனங்களுக்கு விசுவாசம் உள்ளது எனலாம். அவர்களுக்கு விசுவாசம் இல்லை என்று நான் சொல்லவில்லை, அவர்கள் அக்கினியினால் தங்களை எரித்துக் கொள்கின்றனர், அப்படிப்பட்ட காரியங்களைச் செய்கின்றனர், ஆனால் பாருங்கள். அது அப்பொழுதும் தேவனை நிரூபிப்பதில்லை. ' இந்தியர்கள் நாற்பது கெஜம் நீளம் “மூன்று அடி அகலமுள்ள குழியில், இலைகளைப் போட்டு, அது வெண்தழல் ஆகும் வரைக்கும் காற்று வீசி (விசேஷித்த மனிதர் அல்ல, குடியானவர்கள்), தங்கள் காலணிகளைக் கழற்றி (பூசாரிகள் அவர்கள் மேல் வெள்ளாட்டின் இரத்தம் தெளித்து அவர்களை ஆசீர்வதிக்க), அவர்கள் மீன்பிடிக்கும் தூண்டில் முள்களை எடுத்து வாயில் குத்திக்கொண்டு, அழகாக வர்ணமிடப்பட்ட குடங்களில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு இவ்வளவு நீளமுள்ள பெரிய மீன் தூண்டில் முள்கள் தங்கள் சதைகளில் குத்தப்பட்டு (அது உள்ளேயிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்), அப்படி நின்று கொண்டு, அந்த தீயின் வழியாக நடந்து சென்று, (அது வெண் தழல், சிகப்பையும் கடந்த வெண்தழல்) அந்த தீயின் வழியாக நடந்து சென்று, திரும்பி, மறுபடியும் அதன் வழியாக நடந்து வந்து, அவர்கள் பாதங்கள் சிறிதும் வெந்து போகாததை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் நமது தேவனை சிறிதும் கூட விசுவாசிப்பதில்லை. அவர்கள் பிசாசை வழிபடுகின்றனர். 'பாருங்கள்? எனவே இவை ஒன்றுமில்லை. அதிலிருந்து விலகியிருங்கள்... நீங்கள் உண்மையும் இனிமையும் தாழ்மையும் கொண்ட கிறிஸ்தவர்களாயிருந்து. அப்படிப்பட்ட வாழ்க்கை வாழுங்கள். அப்பொழுது தேவன் மற்றவைகளைக் கவனித்துக் கொள்வார். 94சகோ. பிரான்ஹாமே, மணவாட்டியில் செல்லாத பிரசங்கிமார்கள் எதன் பேரில் பிரசங்கிப்பார்கள்? இப்பொழுது அவர்களுடைய செய்தி, பரிசுத்த ஆவி, தண்ணீர், ஞானஸ்நானம், இரட்சிப்பு என்பதாய் உள்ளது. அவர்கள் மணவாட்டியில் செல்லாவிட்டால் எதைக் குறித்து பிரசங்கிப்பார்கள்? நல்லது, ஒருக்கால் என்ன நடக்கும் தெரியுமா? இதை நான் இப்பொழுது கூறுகிறேன். என்னால் இதை நிரூபிக்க முடியாது. அவர்கள் இப்பொழுது செய்வது போல் பிரசங்கித்துக் கொண்டே போவார்கள். ஜனங்களும் தாங்கள் இரட்சிக்கப்படுவதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்; மணவாட்டி ஏற்கனவே சென்றிருப்பாள். 95குடும்பக் கட்டுப்பாட்டை செயல்படுத்துவது வார்த்தையின்படி சரியா? அதற்கு தனியாக விடையளிக்கிறேன் என்று நான் உங்களிடம் ஏற்கனவே கூறினேன். இந்த கேள்விகளை வைத்துள்ளவர்கள் என்னை தனியாக வந்து காணுங்கள். சகோ. பிரான்ஹாமே, உங்களுக்குத் தெரிந்துள்ளபடி வேதம் கூறுவது போன்ற ஒரு ஆசிரியர் எங்களுக்கிருக்கிறார்... ஆம். அதற்கு நான் பதில் கூறி விட்டேன். இப்பொழுது ஒரு நிமிடம். சகோ. பிரான்ஹாமே, ஒரு சமயம் நமது பெயர்கள் புத்தகத்தில் எழுதப்பட்டு ஆம், அதற்கு நான் பதில் கூறிவிட்டேன். இப்பொழுது அது எடுக்கப்பட்டு விட்டால், அவர்கள் தவறு செய்தனரா என்பதைக் குறித்தது. 96நீங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை ஆமோதிக்கிறீர்களா? இல்லை, என்னால் அதை ஆமோதிக்க முடியாது. இல்லை, ஐயா! பாருங்கள்? 97வெளிப்படுத்தல் 10ல் கூறப்பட்டுள்ள தூதனும் மல்கியா 4ல் கூறப்பட்டுள்ள எலியாவும் ஒரே நபரா? இந்த கேள்விக்கு நான் பதில் கூறி விட்டேனா? நான் பதில் கூறாதது போல் தோன்றுகிறது. ஆம். அது ஓரே நபர். வெளிப்படுத்தல் 10, ஏழாம் சபை காலத்திற்கான ஏழாம் தூதன், அவரே மல்கியா 4ம். குடும்பக் கட்டுப்பாடு... இதன் பேரில் என்னிடம் அநேக கேள்விகள் உள்ளன. இவைகளை நான் பின்னால் வைத்து விட்டேன். இவைகளுக்கு பதில் கூற எனக்கு விருப்பமில்லை; உங்களை நான் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறேன். 98நோவா 120 ஆண்டு காலம் பிரசங்கித்து, பேழையை 120 ஆண்டுகளாக உண்டாக்கிக் கொண்டிருந்தான் என்பதை நாம் வேதத்தில் எங்கு காணலாம்? இதற்கு நான் பதில் கூறினேனா? ஒரு சந்ததி, பூமியில் மனிதனுக்கு அளிக்கப்பட்ட காலம். 120 ஆண்டுகளாகும். பேழையை உண்டாக்க நோவாவுக்கு அவ்வளவு காலம் பிடித்தது. அது அந்நாட்களில் ஒரு சந்ததியின் காலமாக கருதப்பட்டது. மனிதனுக்கு அளிக்கப்பட்ட காலம் நூற்றிருபது ஆண்டுகளாகும். அவன் பிரசங்கித்து வந்தான்... ஆதியாகமம் 6:3, அவன் அந்த சந்ததிக்கு பிரசங்கித்தான், அது 120 ஆண்டுகள். நோவா பிரசங்கித்தான். சரி, இப்பொழுது நாம் பார்ப்போம். 99மல்கியா 4ல், இந்த எலியா பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும், அதன் பிறகு பிள்ளைகளின்இருதயங்களை பிதாக்களிடத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். இது ஒரே நபரா? ஆம், ஒரே நபர் தான். சரி, ஓ, ஒரு நிமிடம் பொறுங்கள். இல்லை! என்னை மன்னியுங்கள். நான் வருந்துகிறேன்... பரிசுத்த ஆவியானவர் என்னை அங்கு நிறுத்தினார் என்பதை பார்த்தீர்களா? இல்லை! நான் நினைத்தேன் அது. பாருங்கள்? மல்கியா 3ல் என்ன எழுதப்பட்டுள்ளதென்றால், “நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்”. அது. எலியா. மல்கியா 4ல், அது மறுபடியும் “இதோ, நான் எலியாவை அனுப்புகிறேன்” என்று உரைக்கிறது. மல்கியா 3, கர்த்தராகிய இயேசுவுக்கு முன்பாக ஒரு தூதன் அனுப்பப்படுகிறான். அது யோவான். எத்தனை பேர் அதை புரிந்து கொண்டீர்கள்? மல்கியா 4ன் எலியா வரும் போது, அதன் பிறகு உடனடியாக - அவனுடைய செய்தி, மற்றவைகளுக்குப் பிறகு - கர்த்தருடைய வருகையும் பூமி புதுப்பிக்கப்படுதலும் உண்டாகும். 100நீங்கள் கவனிப்பீர்களானால், இதை தெளிவாக்க... பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசியின் மூலமாய், “அவன் முதலாவதாக பிதாக்களின் இருதயத்தை பிள்ளைகளிடத்திற்கு திருப்புவான்” என்று உரைத்து, அதை எழுதி வைத்துள்ளார். பாருங்கள்? அது யோவான் முதலாவதாக வருதல். அவன் பிதாக்களின் இருதயங்களை, பழைய கோத்திரப்பிதாக்களின் இருதயங்களை, பிள்ளைகளின் செய்திக்கு திருப்பினான். அது அப்பொழுது ஒரு புது சந்ததி. இயேசு அந்த சந்ததியில் வந்தார். அதன் பிறகு 'மற்றும்' (and) என்னும் இணைச் சொல் இவ்விரண்டையும் இணைக்கிறது (தமிழ் வேதாகமத்தில் இச்சொல் இல்லை -தமிழாக்கியோன்). இப்பொழுது பிள்ளைகளின் இருதயங்கள் பிதாக்களிடம் திருப்பப்படுகிறது, அதாவது இன்றைய செய்தி, சபை காலத்திலுள்ள பிள்ளைகளின் இருதயங்களை தொடக்கத்தில் இருந்த மூல பெந்தெகொஸ்தே விசுவாசத்துக்குத் திருப்பும். எனவே இது இரு வெவ்வேறு செய்தியாளர்கள். அது ஒரு செய்தியாளனைப் போல் காணப்பட்டாலும், அது வேறு பிரிக்கிறது - யோவான் முதலில் வருவதையும், இரண்டாவதாக வேறொரு நபர் வருவதையும்.. என் கணவரும் என் இளைய மகனும் விசுவாசிப்பதில்லை ..... ஆம், அதற்கு நான் பதில் கூறி விட்டேன் என்று எனக்குத் தெரியும், ஏனெனில் இந்த நபர் இதில் கையொப்பமிட்டிருக்கிறாள். பிறகு இதைக் குறித்து அவளிடம் பேசினது எனக்கு ஞாபகம் உள்ளது. 101நாம் கர்த்தருடைய சித்தத்தை எவ்விதம் அறிந்து கொள்வது? எங்கள் இருப்பிடத்தை நாங்கள் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லுக்கு மாற்றிக் கொள்ள வேண்டுமா? ஒரு நபர் கிறிஸ்தவனாயிருந்து, கறுப்பு நிற மக்களை வெறுக்க முடியுமா? அவர் கறுப்பு நிறத்தவராயிருப்பதால், நம்மைப் போல் அவர்கள் நடத்தப்படுவதை தேவன் விரும்புவதில்லையா? இதைக் குறித்து நீங்கள் கூறும் ஆலோசனை என்ன? நீங்கள் ஒருமைப்பாட்டில் அல்லது ஒதுக்கப்படுதலில், எதில் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்? நான் ஒருமைப்பாட்டில்தான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். நான் நம்புவது என்னவெனில் ஒரு மனிதன்.. அவனுடைய நிறம் என்னவானாலும், அவன் யாராயிருந்தாலும் அவன் என்னைப் போல் ஒரு மனிதன். அது முற்றிலும் உண்மை . நான் நினைப்பது என்னவெனில், அவர்கள் மட்டும் கறுப்பு நிறத்தவரை தனியே விட்டு விட்டு, அந்த கம்யூனிஸ்டுகள் அங்கு சென்று அவர்களை ஊக்கப்படுத்தாமலிருந்தால்... இப்பொழுது, அவர்கள் கேட்டனர். இப்பொழுது, உண்மையான கறுப்பு நிற மக்கள்; அவர்கள் மத்தியில் உண்மையான, மறுபடியும் பிறந்த, தேவபக்தியுள்ள பரிசுத்தவான்கள் உள்ளனர். ஆம், நிச்சயமாக, என் தோல் வெள்ளை நிறமாயும், அவர்களுடைய தோல் கறுப்பு நிறமாயும் இருப்பதால், அதனால் எனக்கு எந்த வேற்றுமையும் கிடையாது. அவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், அவன் என் சகோதரன். 102ஆகையால் தான் நான் ஆப்ரிகான்ஸ் செய்தியுடன் கருத்து வேற்றுமை கொண்டுள்ளேன்; அவர்களுக்கு ஆத்துமா இருப்பதாக அவர்கள் நம்புவது கிடையாது. அதுதான் எனக்கு அங்கு பிடிக்காமல் போயிற்று. நான், “என்னைப் போலவே அவனும் ஒரு மனிதன். எனக்குள்ளதைப் போலவே அவனுக்கும் உரிமையுண்டு. அவனுடைய தோல் எனக்கோ அல்லது தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்துள்ள எந்த ஒரு மனிதனுக்கோ யாதொரு வித்தியாசத்தையும் உண்டாக்காது” என்றேன். ஆனால் நான் சொன்னேன், “அவர்கள் அந்த கறுப்பு நிறத்தினரை தனியே விட்டிருந்தால், அவர்கள் போராட ஒருக்காலும் இந்த அளவுக்கு ஊக்கம் பெற்றிருந்திருக்க மாட்டார்கள்” என்றேன். இதை நான் இந்த பிரசங்க பீடத்திலிருந்து கூறுகிறேன்... கறுப்பு நிறத்தினர் பலர் இங்கு வருகின்றனர் (இன்றிரவு அவர்களில் ஒருவரும் இங்கில்லை என்று நினைக்கிறேன்). இந்த சபைக்கு பல கறுப்பு நிறத்தவர் வருகின்றனர். சகோதரனே, அவர்கள் மற்ற எவரையும் போலவே இங்கு வரவேற்கப்படுகின்றனர். அவர்கள் என் சகோதரனும் சகோதரியுமாவர். என் வாழ்க்கையில் நான் இதுவரை சந்தித்துள்ள மிகச் சிறப்பான ஜனங்கள், இந்த கறுப்பு நிறத்தவரில் சிலர். அவர்களில் சிலர் துரோகிகள் என்பது உண்மையே. ஆனால் அப்படிப்பட்டவர் வெள்ளை நிறத்தினர், மஞ்சள் நிறத்தினர், பழுப்பு நிறத்தினர் ஆகியோரின் மத்தியிலும் உள்ளனர். ஆம், நிச்சயமாக, 103இப்பொழுது, கலப்பு விவாகத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. வெள்ளையன் ஒருவன் கறுப்பு நிறப் பெண் ஒருத்தியை விவாகம் செய்து கொள்ளக் கூடாது என்பது என் கருத்து. அவ்விதமாகவே, கறுப்பு நிறத்து ஆண் வெள்ளைப் - பெண் ஒருத்தியையோ, அல்லது மஞ்சள் நிறத்தினர் கறுப்பு நிறத்தினரையோ விவாகம் செய்து கொள்ளக் கூடாது... நான் நம்புவது என்னவெனில், பழுப்பு, கறுப்பு, வெள்ளை நிறத்தினர் தேவனுடைய பூந்தோட்டமாக உள்ளனர், அவர்கள் ஒருவருக்கொருவர் இனச்சேர்க்கை செய்து கொள்ளக் கூடாது என்பதே. தேவன் அவர்களை அந்த விதமாகவே படைத்திருக்கிறார்; அவர்கள் அந்த விதமாகவே இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அழகான கறுப்பு நிறப் பெண், மிகவும் அறிவுள்ளவள், காண்பதற்கு நன்றாயிருக்கும் இளம் பெண், மற்றெந்த பெண்ணைப் போலவே அழகுள்ளவள். வெள்ளை நிறப் பையனை விவாகம் 'செய்து கொண்டிருப்பதைக் காண்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது... அவள் வெள்ளையனை மணந்து 'ம்யூலாடோ பிள்ளைகளை ஏன் பெற வேண்டும்? (கறுப்பு நிறத்தினருக்கும் வெள்ளை நிறத்தினருக்கும் இடையே பிறக்கும் பிள்ளைகள் 'ம்யூலாடோ' என்று அழைக்கப்படுகின்றனர் - தமிழாக்கியோன்). ஒரு புத்திசாலியான கறுப்பு நிறப்பெண் அவ்விதமான காரியத்தில் ஈடுபட ஏன் விரும்ப வேண்டும்? ஏனெனில் ஏதோ ஒன்று.... அந்த கம்யூனிஸ்டுகள்... ஒரு அருமையான கறுப்பு நிறத்தினன் ஒரு வெள்ளைப் பெண்ணை மணந்து 'ம்யூலாடோ' பிள்ளைகளைப் பெற ஏன் விரும்ப வேண்டும்? அதில் எனக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் இருக்கும் விதமாகவே இருக்க வேண்டும் என்பது என் கருத்து. நாங்கள் கிறிஸ்துவினுடைய ஊழியக்காரர்கள். தேவன் என்னை இந்த விதமாக படைத்திருக்கிறார். என் நிறத்தை அவர் கறுப்பாக படைத்திருந்தால், நான் தேவனுக்கென்று கறுப்பு நிறத்தவனாக இருக்க மகிழ்ச்சி கொள்வேன். அவர் என்னை மஞ்சள் நிறத்தவனாக படைத்திருந்தால், நான் கிறிஸ்துவுக்கென்று மஞ்சள் நிறத்தவனாக இருக்க மகிழ்ச்சி கொள்வேன். அவர் என்னை வெள்ளையனாக படைத்திருந்தால், நான் கிறிஸ்துவுக்கென்று வெள்ளையனாக இருக்க மகிழ்ச்சி கொள்வேன். அவர் என்னை பழுப்பு அல்லது சிகப்பு நிறத்தவனாக, சிகப்பு இந்தியனாக, அல்லது வேறெந்த நிறத்த வனாக படைத்திருந்தால், நான் அந்த நிறத்திலேயே நிலைத்திருப்பேன். அது நான். என் சிருஷ்டிகர் என்னை உண்டாக்கின விதமாகவே நான் இருக்க பிரியப்படுவேன். 104அந்த நாளில் ஷ்ரீவ்போர்ட்டில் அந்த எழுச்சி உண்டான. போது, அந்த கறுப்பு நிறத்து இளைஞர் அனைவரும் கம்யூனிஸ்டுகளால் ஊக்குவிக்கப்பட்டு அதில் பங்கு கொண்டனர். இந்த பிரசங்க பீடத்தில் இதை நான் ஏற்கனவே உங்களிடம் கூறியிருக்கிறேன். மார்டின் லூத்தர் கிங் அந்த கறுப்பு நிறத்தினருக்கு மிகப் பெரிய கடனாளியாக இருக்கப் போகிறார். அது உண்மை. அவர் பல்லாயிரக்கணக்கான கறுப்பு நிறத்தினவரை, கம்யூனிஸ்ட் கொள்கையைக் கொண்டு ஊக்குவித்து, கொலைக்கு நடத்திச் செல்லப் போகிறார் (அது உண்மை). நான் கூறினதை நிரூபிக்கட்டும். இதை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறினேன். தற்பொழுது என்ன நடக்கிறதென்று பாருங்கள். அவர்கள் ஒருமைப்பாட்டுக்காக சண்டையிடுவதாக கூறிக்கொண்டனர், ஆனால் சட்டம் அவர்களுக்கு ஒருமைப்பாட்டை அளித்து விட்ட பிறகும்... ஒருமைப்பாட்டை விரும்பாதவர்களாகிய நீங்கள், உங்களைக் குறித்து வெட்கப்பட. வேண்டும். நமது நாடு ஒருமைப்பாட்டை அனுமதித்து விட்டது. பெரிய தலைவர் என்ன சொல்லுகிறாரோ, அதையே நாம் செய்ய வேண்டும். அது முற்றிலும் உண்மை. இப்பொழுது, நீங்கள் கூறலாம். சில இடங்களுக்கு அவர்கள் வரக்கூடாது, பொருட்களை வாங்கக் கூடாது, பேருந்தில் பின்னால் உட்கார வேண்டும் போன்றவை. இல்லை ஐயா! அவர்கள் நமக்கு சமமானவர்கள் என்று நாட்டின் சட்டம் கூறுகிறது . எனவே நாம் அவர்களுக்கு சமமானவர்கள், அந்த விதமாகவே நாம் நடந்து கொள்வோம். அந்த விதமாகவே நாம் இருப்போம். உண்மையில் மறுபடியும் பிறந்தவர்கள் அனைவரும் அந்த கருத்தையே கொண்டுள்ளனர். இப்பொழுது, அவர்களுடைய இருதயத்தில் அதுதான் உள்ளது என்று நம்புகிறேன். 105ஆப்பிரிக்காவிலுள்ள அந்த எளிய ஜனங்கள் நடத்தப்படும் விதத்தைக் குறித்து எனக்கு அவர்கள் மேல் உள்ள அனுதாபத்தைப் போல் வேறெந்த ஜனங்கள் மீதும் இல்லை. அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் தென்பாகத்தை சேர்ந்தவன். நான் அந்த நதிக்கு அப்பால் பிறந்தவன், ஆனால் நான் ஆபிரகாம்லிங்கனைப் போன்றவன். மனிதன் சமமாகப் பிறந்திருக்கிறான் என்னும் கருத்தை நான் கொண்டிருப்பதால், இங்கு வருகிறேன். அது உண்மை. ஜனங்களைப் பிரிப்பது போன்றவைகளில் எனக்கு நம்பிக்கையில்லை, முக்கியமாக அந்த ஜனங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் போன்றவைகளைப் பெற்றிருக்கையில். ஆனால் பாருங்கள், உண்மையாக மறுபடியும் பிறந்த கிறிஸ்தவ கறுப்பு இனத்தினர் இந்த கலகம் அனைத்தும் விளைவிப்பதில்லை. கறுப்பு நிறத்தவரை அதற்காக நீங்கள் குற்றப்படுத்த நினைத்தால், நம்முடைய சில வெள்ளை நிற இளைஞரின் துரோகத்தைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்? பாருங்கள்? இருவரும் ஓரே போன்றே உள்ளனர். நமது வெள்ளை நிற இளைஞர்கள் .அவர்களை விட இரு மடங்கு தொல்லை விளைவிக்கின்றனர். அது முற்றிலும் உண்மை. அது எங்கு நடக்கிறது? நமது கல்லூரிகளிலும் மற்ற இடங்களிலும். நம்முடைய அதிகம் கல்வி கற்ற ஜனங்களில் சிலர் இவைகளுக்கு காரணமாயுள்ளனர். பாருங்கள்? 106நல்லது, அது என்ன? இப்பொழுது, அது கம்யூனிஸம் தான், அந்த கறுப்பு நிறத்தவர் அல்ல என்று உங்களுக்கு காண்பிக்க, கம்யூனிஸம் அந்த விதத்தில் தான் எப்பொழுதுமே கைப்பற்றியுள்ளது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இதையே செய்து வருகின்றனர். அவ்விதம் தான் அவர்கள் செய்கின்றனர், நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்படி செய்து, புரட்சியை உண்டாக்கி, துப்பாக்கி குண்டு ஒன்றையும் வெடிக்காமலேயே கைப்பற்றி விடுகின்றனர். அவர்கள் இந்த நாட்டை தகர்த்து விட விரும்பவில்லை; அவர்களுக்கு அது வேண்டும். அவர்கள் மெல்ல ஊர்ந்து உள்ளே நுழைந்து விடுகின்றனர். பழைய புரட்சி என்ன விளைவித்தது என்பதை அவர்கள் அறிந்தவர்களாய், அதை ஆதாரமாகக் கொண்டு, வேறொரு புரட்சியை உண்டாக்கி விடலாமென்று அவர்கள் எண்ணுகின்றனர். நான் கூறும் விஷயம் தெளிவானது என்பதை நிரூபிக்க, அவர்கள் ஒருமைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட பிறகும் (அவர்கள் அதை இப்பொழுது சட்டப்பூர்வமாக பெற்றுள்ளனர்), அவர்கள் முன்பை விட அதிகம் தொல்லை விளைவிக்கின்றனர். பாருங்கள்? அது கம்யூனிஸம் என்றும், தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்த அந்த விலையேறப் பெற்ற ஆத்துமாக்கள் அல்ல என்பதையும் அது காண்பிக்கிறது. ' 107நாம் இப்பொழுதும் அனல் மூண்டவர்களாக சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமா, அல்லது அதற்கான காலம் முடிந்து விட்டதா? இல்லை, உங்களால் முடிந்த வரையில் நீங்கள் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டே செல்லுங்கள். சகோதரனே, அதில் நிலைத்திருங்கள்; நான் உங்கள் சார்பில் இருக்கிறேன். 108சகோ. பிரான்ஹாமே, முட்டை சாப்பிடக் கூடாது, பள்ளத்தாக்கில் வசிக்காதீர்கள் என்று நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும் போது, அந்த தீர்க்கதரிசனம் உங்களுக்கு மட்டுமா, அல்லது சபையோருக்கும் கூடவா? பல ஆண்டுகளுக்கு முன்பு, ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, கடைசி நாட்களில் மிருகங்கள், மாடுகள் இவைகளின் மத்தியில் வியாதிகள் உண்டாகுமென்றும், முட்டைகளுக்கும் அது நேரிடுமென்றும் நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன். சாப்பிடுவதற்கு தகுதியில்லாத முட்டைகள் இருக்குமென்றும், பள்ளத்தாக்கில் வாழும் ஜனங்களுக்கு... இதை நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசனம் உரைத்தேன், அதாவது பள்ளத்தாக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களை நான் அங்கிருந்து வெளியேறச் சொல்வேன் என்றும் அவர்கள்... புசிக்கக் கூடாதென்றும், வெவ்வேறு இறைச்சிகள் இன்னும் மற்றவை விஷமாயிருக்ககுமென்றும், ஜனங்கள் பள்ளத்தாக்குகளில் வாழ்வது ஆபத்தாயிருக்குமென்றும் (அப்படித்தான் அதை நான் கண்டேன் என்று நான் நினைக்கிறேன்). அணு ஆயுத வெடிப்பையடுத்து கதிரியகத்துகள்கள் விழுவதற்கு முன்பு அல்லது அவர்கள் அதைக் குறித்து எதையும் அறிவதற்கு முன்பே இந்த தீர்க்கதரிசனம் உண்டானது. அது பரிசுத்த ஆவியானவர் எனக்களித்த எச்சரிக்கையாகும். இப்பொழுதும் கூட நமது மாடுகளை நீங்கள் சந்தையில் காண்பீர்களானால், DDT, மருந்தை தெளிப்பதனால், அது பசு மாடுகளில் ஏதோ ஒன்றைத் தொடங்கியுள்ளது. 109மறுபடியும் கவனியுங்கள், அவர்கள் கலப்பு இனங்களை உண்டாக்குவதும், அப்படிப்பட்ட செயல்களும் மானிடவர்க்கத்தின் நாசத்தை விளைவிக்கிறதாயுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளில் இருபது அல்லது முப்பது சதவிகிதம் பேர் அங்கு சேர்க்கப்படுவதற்கு மருத்துவரே காரணம் என்று “ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிகை தெரிவிக்கிறது. எப்படியெனில் இதை உங்களிலிருந்து போக்க அவர்கள் கொடுக்கும் மருந்து வேறொன்றை உங்களில் தொடங்கி விடுகிறது. நீங்கள் முட்டைகளை கவனித்தீர்களா? சென்ற ஆண்டில் லூயிவில்லிலும் ஜெபர்ஸன்வில்லிலும் நூற்றுக்கணக்கான பேர்கள் பள்ளத்தாக்கில் உள்ள கோழிகள் இட்ட முட்டைகளை சாப்பிட்டதன் விளைவாக வாந்தியெடுக்கத் தொடங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் ... பள்ளத்தாக்கில் இடப்பட்ட முட்டைகள் கதிரியக்கத்துகள்களை உறிஞ்சிக் கொண்டு விட்டன. பயிர்கள், இன்னும் மற்றெல்லாமே இவைகளால் அசுசிப்பட்டு விஷமாகி விட்டன. 110என் சகோதரனே, இதை நீங்கள் இங்கு தான் பெற்றுக் கொள்கிறீர்கள். இதை நான் என் இருதயப் பூர்வமாக விசுவாசிக்கிறேன். அதாவது, எந்த ஒரு ஆகாரமும் ஸ்தோத்திரமில்லாமல் ஏற்றுக் கொள்ளப்படக் கூடாதென்றும், ஏனெனில் அது தேவனுடைய வசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்த மாக்கப்படுகிறதென்றும் வேதம் உரைக்கிறது. பாருங்கள்? நீங்கள், “கர்த்தராகிய இயேசுவே, இந்த ஆகாரத்தை நீர் எனக்காக ஆயத்தம் செய்திருக்கிறீர். நான் விசுவாசத்துடன், எங்கள் சரீரங்களுக்கு பெலனாக அமைய, இதை பரிசுத்தம் செய்கிறேன்” என்று ஜெபித்து விட்டு அதை சாப்பிடுங்கள். ஏனெனில் நாம் எல்லாவற்றையும் விசுவாசத்தினாலேயே செய்கிறோம். அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, குடிகார கணவனை விவாகரத்து செய்ய ஆதாரங்கள்? எனக்கு விவாகரத்தைக் குறித்து பேசுவதற்கு பிரியமில்லை. அதை குறித்து நான் சிறிது கழிந்து பேசுகிறேன் 111சகோ. பிரான்ஹாமே, சகோதரன் (ஒரு நிமிடம் இது இங்குள்ள போதகர்களில் ஒருவருடன் சம்பந்தப்பட்டது. இதை நான் முதலில் வாசிக்கட்டும் (சகோ. பிரான்ஹாம் மனதுக்குள் கேள்வியைப் படிக்கிறார் - ஆசி). ஒரு நிமிடம். நல்லது. இதை எப்படியும் படிக்கப் போகிறேன்) - சகோ. பிரான்ஹாமே, சகோ.நெவில் தீர்க்கதரிசனமாக, கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வேன் என்றுரைத்தார். நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வேன் என்று அவர் என்னிடம் உறுதியாக கூறின போதிலும், நான் இன்னும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவில்லை. நான் தொடர்ந்து... ஆம். நிச்சயமாக, அதை செய்யுங்கள். தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டிருங்கள்.கவனியுங்கள், நான் சகோ.வுட்டின் வீட்டில் நேற்று இருந்த போது, சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. குடிகாரனாயிருந்த அவருடைய சகோதரரோ, அல்லது வேறு யாரோ, அதிலிருந்து விடுபடுவதற்கென்று ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஊசிகள் போட்டுக் கொண்டதாகவும், சகோ. நெவில் அந்நிய பாஷை பேசி - அல்லது வேறெந்த விதத்திலோ - இந்த நபரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்து, இன்னும் சில நாட்களுக்குள் அந்த மனிதனுக்கு நல்லது ஏற்படுமென்று கூறினாராம். சக்கர நாற்காலியிலுள்ள அந்த மனிதன் தொலைபேசியில் கூப்பிட்டு, இந்த மனிதன் மருத்துவமனையில்லிருந்து வெளிவந்து அறுபத்தெட்டு நாட்கள் ஆகிவிட்டன என்றும், குடிப்பதை தடுக்க அவருக்கு ஊசி எதுவும் போடாமலேயே அல்லது அவர் மருந்து ஒன்றும் சாப்பிடாமலேயே அவர் ஒரு முறையாவது குடிக்கவில்லை என்றும் கூறினார். சகோ. நெவில் தீர்க்கதரிசனமாக உரைத்தது நிறைவேறினது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நமது சகோதரன் தேவனுடைய மனிதன் என்று நாம் விசுவாசிக்கிறோம். அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, இவர்கள்... 112இப்பொழுது பொறுங்கள், இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்கிறேன். இதை தான் நான் ஜனங்களுக்கு கூற முயல்கிறேன். நான் விசுவாசிக்கும் அதே செய்தியையே சகோ. நெவில் விசுவாசிக்கிறார். சகோ. காப்ஸ், சகோ. பீலர், சகோ. ரட்டல், இங்குள்ள இந்த சகோதரர் அனைவருமே நான் விசுவாசிக்கும் அதே செய்தியையே விசுவாசிக்கின்றனர்; அவர்கள் என்னைப் போலவே அதை பிரசங்கிக்கின்றனர். நீங்கள் உண்மையில் வெளியேற விரும்பினால், நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்று அல்லது வேறெதாவது காரணத்துக்காக வெளியே செல்ல விரும்பி, வார்த்தையைக் கேட்பதற்கு வர விரும்பினால், இங்கு வாருங்கள். இந்த கூடாரத்துக்கு வாருங்கள், இங்கு தான் அதை கேட்கிறீர்கள். இவர்கள் தேவபக்தியுள்ள மனிதர். இவர்கள் நீங்களும் நானும் பெற்றுள்ள அதே பரிசுத்த ஆவியையே பெற்று, அதே வேதத்திலிருந்து அதே செய்தியை அளிக்கின்றனர்.அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, அந்நிய பாஷை பேசுகிறவர்கள் மீதியானவர்களா... ஆம், அதற்கு நான் பதில் கூறி விட்டேன். உ, ஊ. நான் பதில் கூறி விட்டேன். ஒரு ஸ்திரீ அந்நிய பாஷை பேசுதல். 113சகோ. பிரான்ஹாமே, மனைவி தன் புருஷனுக்கு கீழ்படிந்திருக்க வேண்டுமென்று வேதம் உரைக்கிறது. நான் ஒரு கிறிஸ்தவள், என் கணவர் ஒரு பாவி. அவர் தன்னாலான வரையில், எல்லா விதத்திலும் என்னை துன்புறுத்தி, நான் சபைக்கு செல்லக் கூடாதென்றும் வேதத்தைப் படிக்கக் கூடாதென்றும் கூறுகிறார். அவர் வார்த்தையை மறுதலிக்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்? நீ என்ன செய்ய வேண்டும்? இப்பொழுது, கவனி, நீ கணவனுக்கு கீழ்படிய வேண்டும்; அப்படித்தான் வார்த்தை உரைக்கிறது. அவர் உன்னிடம் வேதத்தைப் படிக்கக் கூடாதென்றும், சபைக்குச் செல்லக் கூடாதென்றும், அப்படி ஏதாவதொன்றைக் கூறி உனக்கு அனுமதியளிக்க மறுத்தால், அதற்கு நீ கீழ்படிய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில், “ஒருவன் தன் தகப்பனையாவது, தாயையாவது, புருஷனையாவது, மனைவியையாவது வெறுத்து விட்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல”. அது சரியா? 114இல்லை, வேண்டாம்... மனிதரே, நீங்கள் செய்யக் கூடாது. ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை ஆளுகை செய்கிறவன் என்கிற காரணத்தால், அவள் மேல் தன் அதிகாரத்தைப் பிரயோகிக்கக் கூடாது. சகோதரனே, தேவன் உங்கள் மேல் ஆளுகை செய்கிறவராயிருக்கிறார். பாருங்கள்? உங்கள் மனைவி ஏதாவதொரு தவறைச் செய்தால், அவளிடம் கூறி அதை திருத்துவதற்கு உங்களுக்கு உரிமையுண்டு. அவள் உங்களுக்கு செவி கொடுக்க வேண்டியவளாயிருக்கிறாள். ஆனால் அவளை அடிக்கவோ, அல்லது இழுத்துப் போட்டு உதைக்கவோ, அப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய உங்களுக்கு உரிமை கிடையாது. பாருங்கள், தேவன் மனிதனுக்கு ஒரு துணைவியை உண்டாக்கினாரேயன்றி, வாசலில் வைத்திருக்கும் ஒரு மிதியடியை அல்ல. ஞாபகம் கொள்ளுங்கள், அவள் உங்கள் இருதயத்துக்கு இனியவளாயிருந்தாள்; அவள் எப்பொழுதுமே அப்படியிருக்க வேண்டும். 115கடைசி வார்த்தைக்காக தேவனுடைய ஜனங்கள் எப்பொழுது எங்கே கூடுவார்கள்? கிறிஸ்துவில்.. ஆம்! கடைசி நாளில், அவர்கள் கிறிஸ்துவில் கூடுவார்கள். அதை மறந்து விடாதீர்கள். நமக்கு கூடுவதற்கு ஓரிடம் உண்டு; அதை நாம் பெற்றிருக்கிறோம் என்பது உண்மையே, 116நாங்கள் அழைக்கப்படுகிறோம்... (இப்பொழுது, அன்றொரு நாள் நாம் விவரித்ததற்கான கேள்வி). நாங்கள் ஜூனியர் ஜாக்சன் சபைக்குச் செல்வதனால் அசுத்தமான பறவைகள் என்று அழைக்கப்படுகிறோம். சில நேரங்களில் நாங்கள்... அவர் இங்குள்ள இந்த சபையில் பின்பற்றப்படும் புது சபை விதிகளுடன் இணங்குவதில்லை. சில நேரங்களில் அங்கு நாங்கள் செல்வதனால், தேவனுடைய பரிபூரண சித்தத்தினின்று விலகியிருக்கிறோமா? இல்லை, ஐயா! ஜூனியர் ஜாக்சன் தேவனுடைய மனிதன் என்று நான் நம்புகிறேன். அதை நான் ஏற்கனவே விவரித்து விட்டேன். நான் நம்புகிறேன்... இப்பொழுது, சபை ஒழுங்கைப் பொறுத்த விஷயத்தில் நாங்கள் இணங்குவதில்லை. இப்பொழுது, நான் நம்புகிறேன். ஜூனியர் ஜாக்சனுக்கு... ஏன் அவர்... எத்தனை பேருக்கு ஜூனியர் ஜாக்சனைத் தெரியும். அவர் தேவனுடைய மனிதன் என்று நாம் அறிந்திருக்கிறோம். என்னைப் போலவே அவர் இந்த செய்தியை விசுவாசிக்கிறார், அவர் இந்த காரியங்களை விசுவாசிக்கிறார். வெளிப்படையாகக் கூறினால், நானும் ஜூனியரும் நண்பர்கள், இங்குள்ள மற்றவர்களைப் போலவே, ஜே.டி. சகோ. ரட்டல், சகோ. ஜாக்சன், சகோ. பீலர், இங்குள்ள சகோதரர் அனைவரும்; நாங்கள் அனைவரும் ஒன்றாயிருக்கிறோம். ஒருக்கால் நாங்கள் ஒரே விதமாக காணாமலிருக்கக் கூடும் (பாருங்கள்?), ஆனால் இதே செய்தியை நாங்கள் விசுவாசிக்கிறோம் (பாருங்கள்?), நாங்கள் ஒன்றாக இணைந்திருக்கிறோம். அங்கு சகோ. ஹ்யூம் கூட இருக்கிறார், ஒரு மிஷனரி, ஓ, வெவ்வேறு நபர்கள். சில நேரங்களில் அவாகளுடைய பெயர்கள் எனக்கு ஞாபகமிருப்பதில்லை. ஆனால், சகோதரனே, உங்களை நான் குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். 117நர்ஸ் வேலை செய்வதிலிருந்து விலக வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? அதை நான் கேட்டேன். உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அது நர்ஸ் வேலை செய்வதைக் குறித்து அறிய விரும்பிய ஒரு அருமையான இனிய சகோதரி: நான் சிறுவனாயிருந்த போது, நான் பிரசங்கியாவதற்கு பிரியப்படுகிறேன் என்று எல்லோரிடமும் கூறி வந்தேன். (இதற்கு நான் பதில் கூறினேன். இதற்கும் நான் பதில் கூறி விட்டேன்) இன்றைக்கு அவர் என்ன செய்ய வேண்டும்? நல்லது. இது கிறிஸ்துவுக்கு ஊழியக்காரனாயுள்ள ஒருவரிடமிருந்து வந்த கடிதம்... இது எனக்கு தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட கடிதம், சகோ. பாட்டைலர், இந்த சபையிலுள்ள சகோதரரில் ஒருவர். கேள்விகள் அவ்வளவுதான். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஜனங்களாகிய உங்களுக்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். எனக்கு... (ஒலிநாடாவில் ஒரு பாகம் காணப்படவில்லை - ஆசி). ... ஒன்றாயிருக்கிறோம். நமது செளகரியங்களும் நமது விசாரங்களும் 118195, சகோதரி வில்ஸன் இன்னும் கட்டிடத்தில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவர்களை இங்கு நான் கண்டேன். சகோதரி வில்ஸன், சிறிது நேரத்துக்கு முன்பு நான் என்ன செய்து கொண்டிருந்தேன் தெரியுமா? நாம் மூலைக்கல்லை நாட்டின போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு விவாகமாவதற்கு முன்பு நானும் ஹோப்பும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்தேன் எனக்கு அது தெரியவே தெரியாது... நான் குத்து சண்டை போட்டு விட்டு அந்த போட்டியில் வீரனாக வெற்றி பெற்று வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கண்டது என் நினைவுக்கு வருகிறது. நான் இந்தியானாவில் வேட்டை அதிகாரியாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அன்றொரு இரவு பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு சபையை எண்ணிப் பார்க்கிறேன். அன்றைக்கு இருந்த குழுவில், ஒருவராவது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை என்று எண்ணுகிறேன் நாம் தொடக்கத்தில் மூலைக்கல்லை நாட்டின நாள் முதற்கொண்டு இங்கு இருந்து வந்திருக்கிறவர் எத்தனை பேர்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். என் சகோதரன் மற்றும் சகோதரி வில்ஸனே, உங்கள் இருவரையும் ஒன்று கேட்க விரும்புகிறேன். நாம் எவ்விதம் தொடங்கினோம் என்பது ஞாபகமுள்ளதா? மண்ணினால் கட்டப்பட்ட பழைய தரை ஞாபகமுள்ளதா? ஆடுகின்ற பழைய ஜன்னல்களும். நாம் தொடங்கும் போது எண்பது சென்டுகள் மட்டுமே இருந்தன, குவியலாக களைகள். இந்த கூடாரத்தை நாம் கட்டின போது, நமக்கு பின்னால் இருந்த இடம் ஒரே காடாக இருந்தது. 119பொருத்தனை பண்ணிக் கொண்டு, அணி வகுத்து பீடத்தைச் சுற்றி வந்த நம் அனைவரையும் பாருங்கள். அவர்கள் வந்து, ஒருவரிலிருந்து மற்றவர் பிரிந்து செல்வதை நாம் கண்டோம். இந்த செய்தியில் நிலைத்திருந்தவர்கள் எப்படி பிரிந்து சென்றனர் என்பதைக் கண்டீர்களா? செய்தியை விட்டு விலகினவர்கள், அவர்கள் எவ்விதம் பிரிந்து சென்றனர் என்பதை எண்ணிப் பாருங்கள். அதை எண்ணிப் பாருங்கள். இன்றிரவு இங்கு 'நாம் உள்ளோம். நாம் முன்பு நடத்தின் கூட்டங்களில் இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் மூன்று மடங்கு ஜனங்கள் குழுமியிருந்தனர். அதை எண்ணிப் பாருங்கள். அப்பொழுது பள்ளிக்கூடப் பேருந்துகள் அது நிறுத்தப்பட வேண்டிய இடத்தில் இடமில்லாமல் இந்த பகுதியில் எல்லா விடங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும். கூடாரங்கள் ஜனங்களால் நிரம்பி வழிந்து, அங்கு ஒன்று கூடின ஜனங்களை உட்காரவைப்பதற்கு எங்கும் இடமில்லாமல் போனது. அப்பொழுது நான் ஒரு இளம் பிரசங்கி. பாருங்கள்? நமக்கிருந்த ஆயிரக்கணக்கானவர்களில், இன்றிரவு நாம் மூன்று பேர் மட்டுமே இங்கு இருக்கிறோம். 120சகோதரி. வில்ஸன், காசநோயினால் பாதிக்கப்பட்டு, இரத்தம் கக்கி, தலையணை உறைகளும் படுக்கை விரிப்புகளும் இரத்தம் தோய்ந்து மூலையில் வைக்கப்பட்டு, மரணத் தருவாயில் இருந்த நிலையில் நான் படுக்கை அருகில் அழைத்துச் செல்லப்பட்டது என் நினைவுக்கு வருகிறது. பரிசுத்த ஆவியானவர் அந்த இரத்தப் போக்கை நிறுத்தினது எனக்கு ஞாபகமுள்ளது. சில நாட்கள் கழித்து நான் அவர்களுக்கு பனிக்கட்டி போல் குளிர்ந்திருந்த ஒஹையோ நதியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, மேல் பாகம் திறந்திருந்த என் சிறு காரின் பின் இருக்கையில் உட்கார வைத்து, ஊட்டிகாவிலிருந்து அவர்களை ஓட்டிச் சென்றேன். அது சரி தானே? அங்கிருந்து... (சகோதரி வில்ஸன் சகோ. பிரான்ஹாமுடன் உரையாடுகின்றார்கள் - ஆசி). ஆம்! என் மனைவி சகோதரி ஹோப்; அங்குள்ள சகோதரி, அந்த சிறு காரின் முன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். என் மனைவியும் சகோதரி ஸ்நெல்லிங்கும் பின்னால் அமர்ந்திருந்தனர். அந்த புகைப்படம் என்னிடம் உள்ளது, சகோதரி ஸ்நெல்லிங், என் தாய், மற்றவர்கள், திருமதி வீபர் - என் மாமியார், நாங்கள் எல்லோரும் அங்கிருந்தோம். மேடா ஒரு சிறு பெண்ணாக அங்கு நின்று கொண்டிருக்கிறாள், இப்பொழுது அவள் தலை நரைத்த ஸ்திரீ (ஒரு சகோதரிசகோ. பிரான்ஹாமுடன் உரையாடுகிறாள் - ஆசி). 121முதலில், நாங்கள் சபைக்கு பணம் சேகரிப்பதற்காக வசனச் சீட்டு நாள் (tag day) ஒன்றை நடத்தினது என் நினைவுக்கு வருகிறது. ஹோப் அந்த மூலையில் நின்று கொண்டிருந்தது எனக்கு ஞாபகமுள்ளது. அப்பொழுது அவள் ஒரு இளம் பெண், ஏறக்குறைய பதினாறு வயது. அவள் வசனம் எழுதப்பட்ட சீட்டை இப்படி கையில் பிடித்துக் கொண்டு விற்றுக் கொண்டிருந்தாள்... அவர்களுக்கு வசனச் சீட்டைக் கொடுப்பாள்... அவர் உண்டியில் காசு போடுவார்.தெருவின் வழியாக ஒரு குடிகாரன் வந்தான். அவன், “மிஸ், என்னை மன்னியுங்கள். நீங்கள் என்ன விற்கிறீர்கள்?” என்று கேட்டான். அவள், “ஒன்றுமில்லை, இந்த வசனச் சீட்டை உங்களுக்குத் தருகிறேன். இது சபைக்காக சேகரிக்கப்படும் நன்கொடை. உங்களுக்கு விருப்பமானால், நீங்கள் நன்கொடையாக ஏதாவது காசை இந்த உண்டியில் போடலாம். நகரத்தில் ஒரு கூடாரத்தைக் கட்டுவதற்காக நாங்கள் போதிய பணம் சேகரிக்க முயன்று கொண்டிருக்கிறோம். உங்களுக்கு விருப்பமானால் காசு போடலாம்” என்றாள். அவன், “என்னிடம் காசு இல்லை” என்றான். அவள், “பரவாயில்லை, இந்த வசனச் சீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்” என்றாள். அவன் அதை வாங்கிக் கொண்டு அதை பார்த்தான். ஒரு பக்கத்தில் “உன் நித்தியத்தை எங்கே கழிப்பாய்?” என்று எழுதப்பட்டிருந்தது. மறு பக்கத்தில் ஒரு கேள்விக்குறி. “நித்தியத்தை எங்கே கழிப்பாய்?” என்பதற்கான ஒரு கேள்விக்குறி. அவன் தள்ளாடிக் கொண்டு திரும்பி வந்து, “மிஸ், நீங்கள் முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்டிருக்கிறீர்கள்” என்றான். அவள், “இதை முடிவு செய்தாக வேண்டும்” என்றாள். அது உண்மை. அவள் இன்றிரவு திரைக்குப் பின்னால் இருக்கிறாள். அவள் கூறின கடைசி சொற்கள் எனக்கு ஞாபகமுள்ளது. நான் அவளிடம் கூறினதும் எனக்கு ஞாபகமுள்ளது. அதை நான் ஞாபகம் வைத்திருக்கிறேன். ஆம், ஐயா! 122எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டன. எங்களுக்கு சபை, கட்டிடம் ஒன்று இருப்பதற்கு முன்பே நாங்கள் அங்கு நின்று கொண்டு, கைகளைக் கோர்த்து, இந்தப் பாடலை பாடுவது வழக்கம். அதை என்னால் கேட்க முடிகிறது. மிர்டி அப்பொழுது சிறு பெண். வீராய் ஒரு சிறுவனாக அங்கு நின்று கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்னிடம் உள்ளது. நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் பிணைப்பு ஆசீர்வதிக்கப்படுவதாக ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் மேற்கூறியது போன்றிருக்கும். 202, இதை நாம் பாடுகையில், அவருடைய வருகைக்காக அநேகர் அப்பால் காத்திருக்கின்றனர். நாம் பிரிந்து செல்லும், போது அது உள்ளில் நமக்கு வேதனை தருகிறது (நீங்கள் அந்த விதமாக ஒருவரையொருவர் நேசிக்கிறீர்களா?) ஆனால் நாம் அப்பொழுதும் இருதயத்தில் இணைக்கப்பட்டு மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். 123சகோ. ஃப்ரீமான், நீங்கள் அதற்கு அருகாமையில் இருக்கிறீர்கள், இல்லையா? நான் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன், நாங்கள் சகோ.ராய் வீட்டிற்கு சென்றிருந்த போது, உங்களுக்கு அறிமுகமானேன். அட்காக் குடும்பத்தினர் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? கென்னத் என்பவரின் பெயர் ஞாபகமுள்ளது. அவருடைய சகோதரியின் பெயர் என்ன? (சகோ. ஃப்ரீமான் சகோ. பிரான்ஹாமிடம் பேசுகின்றார் - ஆசி). அவர்களுடைய புகைப்படம் என்னிடமுள்ளது. அந்த புகைப்படத்தில் நாம் எல்லோரும் முன்னால் இருந்த அந்த இடத்தில் நின்று கொண்டு ஒருவர் தோளின் மேல் ஒருவர் கைபோட்டுக் கொண்டிருக்கிறோம். டாக்டர் ராய். ஈ டேவிஸ் போதகர். சற்று முன்பு அவர்களை நான் புகைப்படத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். டாக் (Doc) அந்த பழைய புகைப்படங்களை கொண்டு வந்திருந்தார். அதைக் கண்ட போது எனக்குள்ளே ஒரு வினோதமான உணர்ச்சி உண்டானது. அவர்களில் அநேகர் கடந்து சென்று விட்டனர் (பாருங்கள்?)- சென்று விட்டனர். நாமும் செல்வதற்கு இன்னும் நீண்ட காலம் இல்லை. பாருங்கள்? ஆனால்... நாம் பிரிந்து செல்லும் போது அது உள்ளில் நமக்கு வேதனை தருகிறது ஆனால் நாம் அப்பொழுதும் இருதயத்தில் இணைக்கப்பட்டு மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். 124சகோ. பாஸ்வர்த் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அவர் கடந்து செல்வதற்கு சற்று முன்பு, அறையில் படுக்கையை விட்டுஎழுந்து, தரையில் நடந்து, தன் தகப்பனார், தாயார் மற்றும் 'கிறிஸ்துவினிடம் அவர் வழிநடத்தினவர்களுடன் கைகுலுக்கினார். அவர்கள் மரித்து அப்பொழுது நாற்பது ஐம்பது ஆண்டுகள் ஆகியிருந்தன. அவர்கள் அறையில் நின்று கொண்டிருப்பதை அவர் கண்டார், அவர்கள் ஒவ்வொருவரும் அவரை நோக்கிக் கொண்டிருந்தனர். அது என்ன? அன்று காலையில் நான் தரிசனத்தில் இருந்த அந்த நாட்டுக்குள் அந்த வயோதிபன் கடந்து சென்று கொண்டிருந்தார். - அவர்களை நான் அங்கு கண்டேன்; அவர்கள் மறுபடியும் வாலிப பருவத்தை அடைந்திருந்தனர். நாம் இன்னும் இருதயத்தில் இணைக்கப்பட்டு, அவர்களை சந்திப்போமென நம்புகிறோம். அது உண்மை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 125நான் கட்டிடத்தின் பின்னால் காண நேர்ந்தது. நமது கறுப்பு நிற நண்பர்களைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருந்தோம், இப்பொழுது சகோதரன் மற்றும் சகோதரி நாஷ் பின்னால் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறேன். நீங்கள் அங்கிருப்பது எனக்குத் தெரியவில்லை. எதேச்சையாக நான் பின்னால் பார்க்க நேர்ந்தது. அவர்கள் மிகவும் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற மற்றொரு சகோதரன் .... எப்பொழுதாகிலும் ஒரு முறை பின்னால் இருந்து கொண்டு எனக்கு ஒரு பெரிய சத்தம் போடுவாரே, அவரா அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்? அவருடைய பெயர் எனக்கு ஞாபகமில்லை. அவரிடம் பேசிக் கொண்டிருந்ததாக சகோ. வுட் கூறினார். அவர், “உங்களுக்குத் தெரியுமா? பரிசுத்த ஆவியானவர் என்னை அசைக்கும் போது நான் 'ஹே' என்று கூச்சலிட வேண்டியதாயுள்ளது. நான் எதையும் தொந்தரவு செய்யவில்லை என்று நம்புகிறேன்” என்று சகோ. வுட்டிடம் கூறினாராம். நீங்கள் 'ஹே' என்று கூச்சலிடாமல் இருக்கும் போது தான், அது என்னை தொந்தரவு செய்கிறது. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, சகோதரியே, உங்களை நான் நேசிக்கிறேன். அது உண்மை . சகோ. நாஷ், சகோதரி நாஷ், உங்களை நான் நேசிக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கிறிஸ்து இயேசுவில் என் சகோதரனும் சகோதரியுமாயிருக்கிறீர்கள். 126அன்பார்ந்த இனிய நண்பர்களே, இன்னும் பலரே, இவைகளில் சிலவற்றை நான் விட்டுப் போயிருந்தால், கதவுகள் எப்பொழுதுமே உங்களுக்குத் திறந்துள்ளன. பரலோகத்தின் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. நாம் இருதயத்தில் அப்பொழுதும் இணைக்கப்பட்டு மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம் என்... என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது என்னும் பாடலைப் பாடுவோம். இன்னும் ஒரு முறை நாம் பாடுவோம். வீடு செல்ல இப்பொழுது நேரமாகி விட்டது. என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது கல்வாரியின் ஆட்டுக்குட்டியே ஓ, தெய்வீக இரட்சகரே, நான் ஜெபிக்கையில் எனக்கு செவிகொடும் என் பாவம் அனைத்தும் போக்கியருளும் இந்நாள் முதல் நான் முற்றிலும் உம்முடையவனாயிருப்பேனாக. பரிசுத்தரே, பரிசுத்தரே, உன்னதமான தேவனாகிய கர்த்தரே 127இங்கு ஒரு நிமிடம் வாருங்கள். அந்த ராகம் எனக்குத் தெரியாதென்று நினைக்கிறேன். இசை இல்லாமல் அதை பாட நான் முயற்சி செய்யட்டும். பாருங்கள்? அதை பாட முடியுமா என்று பார்ப்போம். இப்பொழுது, ஒரு வேளை அதை நான் தவறாக பாடக் கூடும். பாருங்கள்? இப்பொழுது எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள், நீங்கள் ஒவ்வொருவரும், இப்பொழுது. பரிசுத்தரே, பரிசுத்தரே, உன்னதமான தேவனாகிய கர்த்தரே பரலோகமும் பூமியும் உம்மால் நிறைந்துள்ளன பரலோகமும் பூமியும் உம்மைத் துதிக்கின்றன ஓ, உன்னதமான கர்த்தரே! (உங்களுக்கு பிடிக்கிறதா? அது உங்களில் ஏதோ ஒன்றை செய்கிறதல்லவா? அதை நான் மறுபடியும் முயற்சிப்போம்).பரிசுத்தரே, பரிசுத்தரே, பரிசுத்தரே, உன்னதமான தேவனாகிய கர்த்தரே ' பரலோகமும் பூமியும் உம்மால் நிறைந்துள்ளன பரலோகமும் பூமியும் உம்மைத் துதிக்கின்றன ஓ, உன்னதமான கர்த்தரே! 128எனக்கு அது பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கிறது அல்லவா? ஓ, அந்த பழைய பாடல்களை நான் மிகவும் நேசிக்கிறேன். எனக்குப் பிடித்தமான இந்த பாடல்களில் ஏதோ ஒன்றுண்டு நீங்கள் வேண்டுமானால் புதிய பாணியில் பாடும் பாடல்களை, எடுத்துக் கொள்ளுங்கள், எனக்கு பழைய பாடல்களைத் தாருங்கள், அது எனக்குப் பிடிக்கும். கிழிக்கப்பட்ட திரையின் வழியாக கடந்து செல், இன்னும் அதைப் போன்ற மற்ற அழகான பாடல்கள்: அத்தகைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். பாடல்கள் பாடுதல் வழிபாட்டின் ஒரு பாகம் என்பது என் கருத்து (ஆம், ஐயா!), கர்த்தருக்கு துதிகளைப் பாடுதல். சரி, இப்பொழுது கூட்டத்தை முடிக்க நாம் பாடும் பாடல், இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல். கர்த்தர் தாமே, இப்பொழுது நாம் நிற்கையில், உங்களை ஆசீர்வதிப்பாராக. இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துயரமும் வேதனையும் உள்ள பிள்ளையே அது உனக்கு மனமகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும் ஓ, நீ போகுமிடமெல்லாம் அதைக் கொண்டு செல். விலையுயர்ந்த நாமம், ஒ எவ்வளவு இனிமை! பூவின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூவின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாம். இதோ எனக்குப் பிடித்த சரணம், அது இப்பொழுது உங்க அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை. என்ன செய்ய வேண்டும்? இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக (கவனியுங்கள்!) சோதனைகள் உன்னை சூழ்ந்து கொள்ளும் போது (நீ என்ன செய்ய வேண்டும்?) அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிமை! பூவின் நம்பிக்கையும், பரத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம் ஓ, எவ்வளவு இனிமை! பூவின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாம்! இப்பொழுது நாம் தலைவணங்குவோம்: நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை இயேசுவின் பாதங்களில் நாம் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை தேவன் உங்களுடன் இருப்பாராக...